இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களினுள்ளும் அரசியல் பூதம் ஒழிந்து காணப்படுகிறான் என்ற நிலை வந்துவிட்டது.இலங்கை அரசினால் முயற்சிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற முயற்சி இஸ்லாமிய ஷரீயாவுடனும் சர்வதேச நகர்வுகளுடனும் சம்பந்தப்பட்ட...
ஹக்கீமுக்கும் ஹஸன் அலிக்கும் இடையிலான பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் தீர்கப்படாமல் காலம் கடத்தும் செயலாகவே தொடர்கிறது. கட்சியை வளர்த்து தொடர்ந்து கட்சியை காப்பாற்றி வந்த ஒரு...
இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா
அரசியல் வாதிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதொன்றும் புதிதல்ல.தனது அரசியலுக்கு யாராவது ஒருவர் சவாலாக வருவாரென நினைக்கும் போது அவர் மீது ஏதாவதொன்றை கூறி அவரது மதிப்பை இல்லாதொழிப்பது...
அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுவதாக கூறியிருந்த விடயம் மிகவும் சூடு பிடித்து...
இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் இன்னல்களை வழங்கி வரும் பொது பல சேனா அமைப்பானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கு பல்வேறு வினாக்களை உள்ளடக்கிய கேள்விக் கணைகளை தொடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சில காலங்கள்...
தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு குருநாகல் மாவட்ட அடிமட்டத்
தொண்டன் எழுதும் திறந்த கண்னீர் மடல்..
அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..
வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள்
என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.எமது...
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதம் தலை தூக்கி இருந்த மஹிந்தவின் அதே காலப்பகுதியில்தான் மியன்மார்முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் தலை தூக்கியிருந்தது.இலங்கையைவிடவும் அந்த இனவாதம்வெற்றியளித்திருந்தது.மியன்மார் முஸ்லிம்களுக்கு எதுவித உதவியும் கிடைக்காததால் அவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.
மியன்மார் போன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதற்கு பேரினவாதிகள் முயற்சித்தபோதிலும்,ஆட்சிமாற்றம் அந்தத்திட்டத்தைத் தோல்வியடையச் செய்தது.ஆனால்,மியன்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும்,அந்த நாட்டு முஸ்லிம்களுக்குஎதிரான நிலைமையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.
முன்பைவிடவும் இப்போதுதான் அங்கு அதிக தேசங்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.முஸ்லிம்கள் அனைவரையும்கொன்றொழிப்பதற்கான சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு அத்திட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இலங்கையில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எவ்வாறு பொது பல சேனாசெயற்படுகின்றதோ அதுபோல்,மியன்மாரில் பௌத்த தேரர்கள் செயற்படுகின்றனர்.சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என்றுவர்ணிக்கப்பட்டு வரும் அஷின் விராது தேரர் இங்கு ஞானசாரவைப்போல் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
எவருடை உதவியுமின்றி தனித்துவிடப்பட்ட அப்பாவி முஸ்லிம்களால் இந்த வன்முறையை எதிர்த்து நிற்கும் வல்லமைஇல்லை.இதனால்,அவர்கள் செத்து மடிகின்றனர்.முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க பௌத்தபயங்கரவாதம் அங்கு முஸ்லிம்களை வேரோடு அழித்து வருகின்றது.மிக விரைவில் முஸ்லிம்கள் எவரும் இல்லாத ஒரு நாடாகமியன்மார் மாறும் என்றே தோன்றுகின்றது.
கடந்த ஆறு வாரங்களில்மாத்திரம் அங்கு 1200 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.முஸ்லிம் கிராமங்கள் முழுமையாகஅழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.இதனால்,பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அயல் நாடான பங்களாதேஷிற்குத் தப்பி ஓடும்நிலை ஏற்பட்டுள்ளது.கடலைக் கடந்து படகுகளில் செல்லும்போது படகுகள் கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணிக்கும் நிலையும்ஏற்படுகின்றது.
மியான்மார் இராணுவமே இந்த இன அழிப்பை முன் நின்று நடத்துகின்றது.இந்த இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும்முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கிங் மாநிலத்திற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ ஊடகவியலாளர்களோ செல்லமுடியாது.சர்வதேச தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டே இந்த இன அழிப்பு நடத்தப்படுகின்றது.
ஏமாற்றிய ஆங் சாங் சூகி
சர்வதேசத்தால் ஒரு ஜனநாயகவாதியாக புகழப்படும் ஆங் சாங் சூகியின் கட்சி 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 25 வருடஇராணுவ ஆட்சிக்குமுற்றுப் புள்ளி வைத்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையும் நிறுத்தப்படும் என்று முஸ்லிம்கள் நம்பினர்.
ஆங் சாங் சூகி ஒரு ஜனநாயகவாதியாக அறியப்பட்டதாலும் சமாதானத்துக்கான நோபல் பரிசை அவர் வென்றதாலும் அவரது தேர்தல்வெற்றி மியன்மார் முஸ்லிம்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது.இந்த இன அழிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பார் என்றுமுஸ்லிம்கள் நம்பினர்.ஆனால்,இப்போது அந்த நம்பிக்கையெல்லாம் வீண்போய்விட்டது.
அவர் ஜனநாயகவாதி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓர் இனவாதி என்பதை ஆங் சாங் சூகி வெளிப்படுத்தியுள்ளார்.தினமும்ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதையும் இடம்பெயருவதையும் வீடுகள்,பள்ளிவாசல்கள் அழிக்கப்படுவதையும் அவர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார் அல்லது அழிப்புக்கு அவரே திட்டமிடுகின்றார்.அதுமாத்திரமன்றி,அப்படியானதோர் இன அழிப்புஇடம்பெறவில்லை என்று மறுக்கின்றார்.
அதைவிடமும் கேவலமாக சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக முஸ்லிம்களே அவர்களின் வீடுகளை அழிக்கின்றனர் என்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையும் அவரது அரசு வெளியிட்டு வருகின்றது.இதனால்,முன்னைய அரசை விடவும் ஆங் சாங்சூகியின் அரசு இந்த இன அழிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவது நிரூபிக்கப்படுகின்றது.
கணக்கிடமுடியாத அளவுக்கு உயிர் இழப்புகள் இடம்பெறுகின்றன என்று தப்பி ஓடும் முஸ்லிம்கள் பங்களாதேஷ்-மியன்மார்எல்லைகளில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கூறி வருகின்றனர்.
அழிக்கப்பட்ட கிராமங்களின் செய்மதிப் படங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.ஆனால்,மியன்மார் அரசோ அதற்கு வேறுஅர்த்தம் கொடுத்து வருகின்றது.ஐ.நா வழமைபோல் இந்த இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றபோதிலும்,அந்தஅழிவைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை.
முஸ்லிம் நாடுகள் தொடர் மௌனம்
எப்போதுமே சொந்த நலன்கள்மீது மாத்திரம் அக்கறை செலுத்தும் முஸ்லிம் நாடுகள் மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைதொடர்பிலும் அவ்வாறுதான் செயற்படுகின்றது.குறிப்பாக,மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் அவை அனைத்தும்பாராமுகமாகவே இருக்கின்றன.
இதேவேளை,இந்நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.சுன்னிமுஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக ஷிஆ முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தங்களின் சொந்தநலன்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில்தான் இந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
தங்களுக்கு அரசியல் லாபம் எதுவும் ஏற்படாது என்று தெரிந்தால் எந்தவொரு முஸ்லிமையும் காப்பாற்றுவதற்கு இந்த நாடுகள்முற்படாது என்பது மியன்மார் முஸ்லிம்களின் விடயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மார் அரசு ஒருசாதகமான முடிவை எடுப்பதற்கு -இன அழிப்பை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.மியன்மார் அரசை தன் வழிக்குகொண்டுவரக்கூடிய துருப்புச் சீட்டுக்கள் சில இந்நாடுகளிடம் இருந்தும்கூட,அவற்றைப் பயன்படுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள்முன்வராமை கவலைக்குரிய விடயமாகும்.
கேவலம்,அயல்நாடான பங்களாதேஷ்கூட இந்த மக்களுக்கு உதவ மறுக்கின்றது.ஆகக் குறைந்தது மியன்மாரில் இருந்து உயிர் தப்பிவரும் மக்களுக்கு தஞ்சம் கொடுப்பதற்குக்கூட பங்களாதேஷ் முன்வருவதில்லை.இப்படியானதொரு நிலையில் அந்த மக்களைமுற்றாக அழித்தொழிப்பது மியன்மார் அரசுக்கு இலகுவான காரியமாகும்.
எம்.ஐ.முபாறக்
மாற்றம் வேண்டும்
ஒரு வீட்டிலுள்ள கிணற்றில் பூனையொன்று விழுந்து இறந்து விட்டது. அதனால் வீட்டுக்காரருக்கு பெரும் அசூசையாகிப் போனது. உடனே தான்சார்ந்த மதப் போதகரிடம் போய் இவ்விடயத்தைச் சொன்னார். அவர் '50 வாளி தண்ணீரை...
தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரை தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனராக சித்தரிப்பது தவறானதாகும் – அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்
GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம்...
நிக்கவரட்டிய, சிலாபம், கல்முனை, முல்லைத்தீவு, கிழிநொச்சி மாவட்டங்கள் புதிதாக உருவாக வேண்டும் என்று மொறகொட கொமிஸன் சிபாரிசு செய்தது. அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டம் யாழ்பாண மாவட்டத்தில் இருந்து 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்டது பின்னர்...