ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் !

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

உலகின் நம்பர் 5 வீரரும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என முதல் இரு செட்களை வென்றார். 3வது செட்டை 1-6 என என இழந்தார்.

இறுதியில் 4வது செட்டை 7-6 (7-4) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.