“இப்போது அக்கரைப்பற்று மாநகரைத் தோற்கடிக்க எவருமே இல்லை , நாங்கள் அனைவரும் கட்சி,நிற பேதங்களை மறந்து பூரண ஒத்தழைப்புக்களை இச்சபைக்கு வழங்குவோம் “
தனது கன்னிப்பேச்சில் மாநகர சபை உறுப்பினர் அஹ்பரோஸ் றூஹி தெரிவிப்பு
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.”
இந்த உன்னதமான சபைக்கு தலைமை தாங்கும் கௌரவ முதல்வர் அவர்களே! கௌரவ உறுப்பினர்களே, சபையின் செயலாளர் அவர்களே, ஊழியர்களே, அக்கரைப்பற்று மாநகர மக்களே, பார்வையாளர்களே!
உங்கள் அனைவரக்கும் எனது இதயம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ!
இந்த மகோன்னதமான சபையில் உரையாற்றக் கிடைத்தமைக்காக முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
“அல்ஹம்துலில்லாஹ்”!
தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தேசியத் தலைவருக்கும் நன்றி கூர்ந்தவளாகவும், என்னைத் தேர்ந்தெடுத்த தொழில் நுட்பக் கல்லூரி வட்டார மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டவளாக எனது உரைக்குள் நுழைகின்றேன்.
கௌரவ மாநகர முதல்வர் அவர்களே!
கடந்த காலங்களில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக இருந்து இச்சபைகள் தொடர்பாக உங்களது பதவிக் காலத்தில் அமைச்சரவையில் எத்தனையோ மசோதாக்களை நிறைவேற்றி இருப்பீர்கள் என்பதனை என் மனம் அலசிப் பார்க்கின்றது.
அப்படிப்பட்ட சட்ட மூலங்களை இந்த நாட்டின் உள்ளுராட்சி சபைகளுக்கு முன் வைத்த நீங்களே அந்த சட்டங்களின் ஆட்சியில் உரைக்கல்லாக மாறியிருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல; இலங்கை வரலாறும் தான்.
கௌரவ முதல்வர் அவர்களே!
பெற்றோர் அதிகாரம் செலுத்திய இடத்தில்; பிள்ளைகள் அதிகாரம் செய்வதை நாங்கள் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அது ஒரு மரபு வழியும்தான்!
ஆனால், உங்கள் தனையன் வீற்றிருந்த இடத்தில் ஒரு ஆட்சியாளராக அரங்கேறியுள்ளீர்கள்.
இது, எப்படி இருக்கின்றது என்றால்;
“ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”
எனும் வாக்கைப் புரட்டிப் போட்ட மாதிரி உள்ளது. ஆகவே, இதுவும் ஒரு வரலாறு தான்.

இதன் யதார்த்தம் என்னவென்றால்; வல்ல இறைவன் உங்களை இந்த மண்ணின் முதற்குடி மகனாக மகிமைப்படுத்தி இந்த மண்ணிற்கு உங்களால் ஆகுமான அனைத்துப் பணிகளையும்,சேவைகளையும் இந்த மாநகர மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்பதற் காகவேயல்லாமல்.வேறில்லை.
இன்ஷா அல்லாஹ்!
கௌரவ முதல்வர் அவர்களே!
நீங்கள் முன்பு வகித்த பதவிகள் அனைத்தையும் விட, இப்போது நீங்கள் வகிக்கின்ற இந்த முதல்வர் என்ற பதவி தனித்துவமானதும், தன்னிச்சையாக இந்த மாநகர சபை சார்பாக சர்வதேச மாநகரங்களுடன் ஒப்பந்தங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக வல்ல நாயன் அல்லாஹ் உங்களுக்கு இதை அருளியுள்ளான்.
மாஷா அல்லாஹ்.
உங்களுக்கு எனது மாநகர மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தேர்தல் காலத்தின் போது கருத்தியல் சமரால் பெரும் பிரளயமே நடைபெற்றதெனலாம். என்னைப் பொறுத்த வரை இந்தப் பிரளயம் ஏன் ஏற்பட்டது என்பதனை சிந்தித்துப் பார்க்கும் போது; பிறந்த மண்ணுக்கு தன்னாலான ஏதேனும் சேவைகளை செய்ய வேண்டுமென்ற ஆத்ம திருப்திக் காகவேயன்றி வெறோன்றுமில்லை.
இன்று இந்த ஆர்வமெல்லாம் ஒன்றிணைந்து 22 கௌரவ உறுப்பினர்களாக மாண்புறும் இந்த சபா மண்டபத்தில் அமர்ந்துள்ளனர்.
இதில் விசேடம் என்னவென்றால்; என்னைப் போன்று அரசியலுக்கு புதிதான கௌரவ உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் அரசியல் அனுபவங்களுடன் கூடிய திறமைசாலிகளாகவும், கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளாகவும் இந்த சபையை அலங்கரிக்கின்றனர்.
அனைத்து கௌரவ உறுப்பினர்களுக்கும் தொழில்நுட்பக் கல்லூரி வட்டார மக்கள் சார்பாக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கௌரவ முதல்வர் அவர்களே!
எமது மாநகரின் அபிவிருத்திப் பணிகள், மாற்றங்கள் தொடர்பில் சிந்தித்துப் பார்க்கும் போது; எங்களை தேவையான போது வழிநடாத்துபவர்களாகவும் , ஆலோசனைகள் பலவற்றை முன்வைக்கக்கூடியவர்களாகவும் எங்களுடைய வெளிநாட்டு வாழ் உறவுகள் காணப்படுகின்றார்கள். இப்பெரும் சக்தியாக விளங்கும் எங்களுடைய வெளிநாட்டு வாழும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு திறந்த அழைப்பொன்றை விடுக்க ஆவல் கொண்டுள்ளேன்.
Hon.Mayor
I want to extend a special invitation to the akpians who are living abroad and who hold the key to our city’s future;
our incredible youth and our cherished brothers and sisters!! This is for u all.
You are the heartbeat of our city, the innovators, the dreamers, and the leaders of tomorrow.
We recognize your boundless energy, your fresh perspectives, and your innate understanding of what our city needs to thrive in the modern world.
We don’t just want to build for you; we want to build with you. Your voices are essential, your ideas are invaluable, and definitely your passion will fuel our progress.
While distance may separate us, your love for our motherland remains strong, and your dedication to its prosperity is undeniable. Many of you have gained invaluable experience, knowledge, and skills from living in diverse environments.You’ve seen what works, what doesn’t, and what can be adapted to our unique context.We want to tap into that wealth of global experience.
Your insights, your advice, and your willingness to collaborate on projects,whether its big or small, can significantly accelerate our city’s development.
Join us!
This isn’t just a call for help; it’s an open invitation to partnership on behalf of our Hon Mayor and Hon members of this Sabha. We welcome your advice on best practices, sustainable solutions, and innovative approaches .
We believe that true progress comes from collective effort. Surely,
your direct involvement is crucial. We are ready to listen, learn, and work hand-in-hand with each and every one of you.
கௌரவ முதல்வர் அவர்களே!
இப்போது அக்கரைப்பற்று மாநகரைத் தோற்கடிக்க எவருமே இல்லை.
எல்லோருமே கட்சி,நிற, பேதங்களை மறந்து நமது மாநகரை இலங்கைத் தாய்த் திருநாட்டின் முதன்மை பெற்ற மாநகரமாகவும், ஏன் சர்வதேச தரத்திலான மாநகராகவும் மிளிரச் செய்ய நாங்கள் அனைவரும் பூரண ஒத்தழைப்புக்களை இச்சபைக்கு வழங்குவோம் என்பதை இதய சுத்தியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி!
நம் எல்லோர் மீதும் அல்லாஹ்வின் அருள் உண்டாவதாக!


