வாயால் வண்டி ஓட்டுவது வேறு. வண்டியில் இருந்து வண்டி ஓட்டுவது வேறு

கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் கப்பல் தரித்து நின்றது. பணத்தை செலுத்தி எரிபொருளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்தது. மின்சாரம், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் இல்லை. பணவீக்கம் உச்சத்தை தொட்டிருந்தது, ரூபாயின் பெறுமதி மிக மோசமாக விழுந்தது, எங்கு பார்த்தாலும் வரிசை, வரிசையில் நின்றாலும் பொருள் கிடைக்காது என்கிற நிலைமை. மக்களின் அன்றாட வாழ்வே தலைகீழாய் நிலைகுலைந்து போயிருந்தது.

அப்பொதைய நாட்டு நிலமை Debt unsustainable. நாடுகள் கடன் கொடுக்கத் தயாரில்லை. முதலிடவும் தயாரில்லை. பணவீக்கம் அதிகம். பணத்தை அச்சிட முடியாது. Tax கூட்டவேண்டும். ஆனால் மிகையாகக் கூட்டவும் முடியாது. உள்நாட்டு வருமானம் குறைவு. State Owned Enterprises (SOE) நஷ்டம். பணம் treasury இலிருந்து தொடர்ந்து pump பண்ண முடியாது.

CEB, CPC Cost reflective price இல் இல்லை. நஷ்டத்தில் மக்களைக் குஷிப்படுத்திக்கொண்டிருந்தது அப்போதைய அரசாங்கம். உள்நாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடன் அதிகம். Unsustainable. வெளிநாட்டு இருப்பு சொற்பம். உடனடியாக வட்டி வீதம் அதிகரித்து Demand crush பண்ணி, கேள்வியைக் குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. Supply அதிகரிக்க காலம் எடுக்கும். உற்பத்தி ஏற்றுமதி எல்லாம் வளர்க்க காலம் எடுக்கும். குறுகிய காலத்தில் எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது? நாடே அல்லோலகல்லோலம்.

இன்னொரு பக்கம் பலர் இந்த நெருக்கடியை தமக்கு இலாபம் மிக்கதாக மாற்றிக்கொள்ளப் பார்த்தார்கள். கருப்புச் சந்தை வளர்ந்தது. சில ஆட்டோக்காரர்கள் ஆட்டோ ஓடுவதையே நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பி வந்து லீட்டருக்கு 2000 என்று விற்றார்கள். சமையல் எரிவாயு கருப்புச் சந்தையில் பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்கப்பட்டது. உரப் பிரச்சனையால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. விட்டால் உணவுப் பற்றாக்குறையும் வந்துவிடும் என்கிற நிலைமை. இதனால் பணவீக்கம் இன்னுமின்னும் கூடிக்கொண்டே போனது.

இத்தனைக்கும் இடையில் நாட்டை பொறுப்பெடுக்க யாரும் தயாரில்லை. யாரேனும் வந்து நாட்டை பொறுப்பெடுங்கள், இல்லாவிட்டால் சில தினங்களில் நான் பதிவி விலகிவிடுவேன் என்றார் மத்திய வங்கி ஆளுநர். இத்தனை நெருக்கடிக்குள்ளும் தேர்தலை நடாத்துங்கள் என்று கேட்ட லூசுத்தனமான எதிர்க்கட்சி கோஸ்டி. இப்படி நிறைய..நிறைய..நிறைய…

IMF போவதே கதியென்றானது.

அதுவரையும் IMF போகும்படி அறிவுரை கூறிக்கொண்டிருந்த ரணில் ஜனாதிபதி கதிரைக்கு வந்தார். கோட்டா கடைசி வரை முயன்று ஈற்றில் இயலாமல் வீடு சென்ற அதே அந்த IMF fund release ஐ ரணில் சாத்தியப்படுத்தினார். தன் art of negotiation உம் தன் பொருளாதார கொள்கைகளும் (MMT இல் இருந்து Traditional Monitory Policy) காரணமாகிப்போயின.

இத்தனைக்கும் இடையில் அப்போதைய AKD, IMF இடம் போக வேண்டாம் என்டார் when he was in last parliament in the Gotas regime.
போன போது, IMF இன் fund release சாத்தியப்படாது என்றார். சர்வதேச நாடுகள் ஒத்துழைக்காது என்றார்.

ஈற்றில் ரணிலால் சாத்தியமான போது வாயடைத்து போனார். கடனை அடைக்க இன்னுமொரு கடனா என்று நக்கலடித்தார்.

ரணில் new set of mps ஓடு வேலை செய்ய தொடங்கினார். பிரபலமற்ற (Non populist) முடிவுகளை எடுத்தார். SOE ஐ restructure பன்னினார்.

பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. பெற்றோல், சமையல் எரிவாயு வரிசைகள் நிறுத்தப்பட்டன. வங்கிக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது. இலங்கை ரூபாய் சக்தி பெற்றது.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முடிவுக்கு வந்தது.
நாடு bankrupt நிலையிலிருந்து மீண்டது. கடன் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினார்.

தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டது. அமைதியான தேர்தலும் நடாத்தப்பட்டது.

இது தான் முக்கியமான புள்ளி. குறிப்பாக NPP வந்தால் தேநாறு ஓடும். பாலாறு பாயும் என்ற தம்பிமார் நோக்க வேண்டிய புள்ளி.

தேர்தல் களம் ரொம்ப காமடியாக இருந்தது. Reality புரியாமல் NPP என்னவெல்லாமோ உலறிக் கொண்டிருந்தது.

AKD at his election campaign, IMF போக மாட்டம் என்றார். பின்னொரு அந்தி நேர தேர்தல் மேடையில் IMF போவோம் என்றார். பின்னொரு நாளில் terms and conditions ஐ revise பன்னுவம் என்றார்.

‘புகையிலை தின்ட ஓணான்’ போல மாறி மாறி stand எடுக்க வேண்டியாயிற்று. ஆனால் நாடெங்கும் AKD அலை.

மாத்தறை கூட்டத்தில் என்று நினைக்கிறேன் (பிழையென்றால் திருத்தவும்), ஆட்சிக்கு வந்து 24 மணிக்குள் அத்தியவசிய பொருட்கள் மீதான வரியை உடன் நீக்குவன் என்றார்.

திருகோணமலையில் இருந்து பெற்றோலை ஏற்றுமதி செய்யப்போகிறோம் என்றார். 6 மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு என்றார். இப்படி நாளொரு முடிவும் பொழுதொரு கொமிசன் கதைகளும் சொல்லிக்கொண்டு இருந்தார். காசா பணமா அடிச்சு விடுடா என்பது போல, அசாத்தியமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.

கதிரைக்கு வந்த பின்னர் தான் இதுவரை நாம் மேடையில் கர்ச்சித்தது வேறு. Reality வேறு என்று புரிந்து கொண்டார்.

அண்மையில் IMF terms and conditions ஐ சற்று revise பன்னியது. அதற்கு காரணமே ரணில் எடுத்த கஸ்டமான முடிவுகளால் வந்த பொருளாதார நிலமைகளின் முன்னேற்றம். முக்கியமாக GDP growth.(remarkable growth from minus -7 to plus +5)

அதனால தான், இந்த PAYE Tax குறைப்பு, vehicle import, other essential tax குறைப்பு பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பு எல்லாம்.

அதை தான், அடுத்த வருடம் நான் செய்வேன் என்று ரணில் சொன்னார். இன்று அவற்றை NPP இன் சாதனைகளாய் காட்ட போய் அது காமடியில் முடிந்தது.

இப்போதுதான் பதவிக்கும் அந்த கதிரைக்கும் settle ஆகி கொண்டிருக்கும் NPP,

‘கஸ்டமான முடிவுகளை எடுக்க நேரிடும்; மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்’ என்று சொல்வதை பார்க்கும் போது ‘குபீர்’ என சிரிப்பு வருகிறது.

ஏனென்றால், அதே reality ஐ ரணில் சொன்ன போது அவர்களே காட்டுக்கூச்சல் போட்டார்கள். மக்களை வீதிக்கு அழைத்தார்கள். அவர்களை ‘மீட்பர்கள்’ என புது NPP தம்பிமார் நம்பி தொலைத்தார்கள். இதை நினைத்து தான் அந்த சிரிப்பு.

எது எப்படியோ, NPP அரசாங்கம் இப்போது தான் வயதுக்கு வர தொடங்கியிருக்கிறது. வாழ்த்துகள். இப்போதாவது reality ஐ புரிந்து கொள்ளுங்கள். ஆனால் என்ன, நீங்கள் வந்தால் அந்த 150/- பெட்ரோல் கொமிசன் நிறுத்தப்பட்டு பெட்றோல் விலை அதே 150/- ஆல் குறையும் என்று நம்பி தொலைத்த அடித்தட்டு மக்கள் தான் பாவம்.

Welcome to the reality from fantasy.

வாயால் வண்டி ஓட்டுவது வேறு. வண்டியில் இருந்து வண்டி ஓட்டுவது வேறு.

-சல்மான் லாபீர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments