அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இப்போது வாய் திறப்பதில்லை.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் புதிய வரிமுறைமை சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தின் பிரகாரம் செயற்படுத்துவதுடன் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைவிட சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் ரணில் விக்ரமசிங்க நாணய நிதியத்துடன் இணங்கிய நிபந்தனைகளையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவருகிறது.

அவர்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில்இப்போது வாய் திறப்பதில்லை.

2025ஆம் ஆண்டில் அரசாங்கம் 4300 முதல் 4400 பில்லியன் ரூபா வரையான வருமான இலக்கை நெருங்க வேண்டி இருக்கிறது.

2020 கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, எமது வரி வருமானம் 1300 பில்லியனாக இருந்தது. அப்படியானால் இந்த வருடத்தில் 300 பில்லியன் மேலதிகமாக தேடிக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments