அரசாங்கம் 30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான கேள்விகோரலுக்கான அனுமதிப் பத்திரங்களை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த கேள்வி அனுமதிப் பத்திரங்கள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளதோடு முதல் கட்டத்தில் 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டத்தில் 10,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்படவுள்ளதோடு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விநியோகிக்கப்படவுள்ளது.