முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான நிதி மோசடி விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் எந்தவொரு மோசடி தொடர்பாகவும் இதுவரை வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான நிதிமோசடி விசாரணைகளை துரிதப்படுத்தி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் மேலிடம் தற்போதைக்கு கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் பசில் ராஜபக்ச தொடர்பில் விமல் வீரவங்சவின் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கவனம் திரும்பியுள்ளது.