பாராளுமன்றத்தில் சமுதாயம் பற்றி பேச முடியாத முஸ்லிம் காங்கிரஸ் பொம்மைகள்!

 
risad hakeem
நேற்று(08/09/2016) பாராளுமன்றத்தில்  மத விவகார அமைச்சுக்கான குழு நிலை விவாதம் நடைபெற்ற போது இனங்களுக்கிடையே நடைபெறும் பிரச்சினை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறினார் 
 
முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி அமைச்சர் றிசாத் மிகவும் காரசாரமாக விரிவாக பேசினார் அவரின் பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து  செவிமடுத்ததை காணக்கூடியதாக இருந்தது அதுமட்டுமல்லாமல் அவரின் உரத்த குரல் பாராளுமன்றத்தையே அதிர வைத்தது 
 
அன்று முஸ்லிம் சமுதாயத்துக்காக பாராளுமன்றத்தில் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு சமுதாயத்துக்காக ஓங்கி ஒலித்த குரலாக அமைச்சர் றிசாத் அவர்களின் பேச்சு அமைந்ததையிட்டு மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் 
 
தலைவர் அஸ்ரப் மறைந்தாலும் அவரின் துணிவு பேச்சு கொள்கை என்பன இந்த உலகை விட்டு போகவில்லை என்று தான் கூற வேண்டும்  அவைகளை அல்லாஹ்  அமைச்சர் றிசாத் அவர்களிடம் ஒப்படைத்துள்ளான் அமைச்சர் றிசாத் அவர்களின் பேச்சு அவரின் பொன் சிரிப்பு கொண்ட இன்ப முகத்தை காண்கின்ற மக்கள் தலைவர் அஸ்ரப் அவர்களை காண்பது போல் இருப்பதாக அம்பாறை மாவட்ட  மக்கள் பேசுகின்றனர் 
 
இன்று முஸ்லிம் சமுதாயம் சின்ன அஸ்ரப் என்று பெருமையுடன் கூறும் அமைச்சர் றிசாத் அவர்களை  இந்த நாட்டின் முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலனாக சத்திய தேசிய தலைவர்  அமைச்சர் றிசாத் அவர்களை அல்லாஹ் தெரிவு செய்ததையிட்டு இந்த சமுதாயம் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றன 
 
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை வந்தாலும் உடனே அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு சமுதாய அரசியல்வாதி என்றால் அமைச்சர் றிசாத் அவர்கள் தான் என்று கூற வேண்டும் இப்படியான தலைவனுக்கு பின்னால் இன்று முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர்ந்து இருப்பது வரவேற்கதக்கது 
 
இன்னும் ஒரு கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்று கூறிக் கொண்டு  ஹக்கிம் அவர்களின் தலைமையில் இது வரை  மக்களை ஏமாற்றி சொகுசா வாழ்ந்து வருகிறது இந்த கூட்டம் தேர்தல் காலங்களில் மட்டும் தான் மேடையில் #ஆதவன் பாடலை போட்டு  சமுதாயத்தின் பிரச்சினை பற்றி பேசி மக்களின் வாக்குகளை சூரையாடி வெற்றி பெறுவது தான் இந்த முஸ்லிம் காங்கிரஸ் செய்யும் அரசியல் அதன் பின் கெபனட் அமைச்சரானால் அதன் தலைவர் சமுதாயத்தின் பிரச்சினை பற்றி பேசமாட்டார் அதாவது அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்ந்தமருதில் கூறியது போல் வேசம் போட்டு பேசுவார் இப்படியான தலைமை  சமுதாயத்துக்கு தேவையா ???
 
நேற்று பாராளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடந்த போது சமுதாய கட்சி நாங்கள் என்று வீராப்பு பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் அவர்களோ அல்லது அவரின் சகாபாக்கள் எவரும் வாய்திந்து பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை பற்றி  பேச முடியாமல்  பொம்மையாக இருந்தனர் பல ஆயிரம் மக்களின் குரலை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது அந்த மனிதர் வாய் பேச முடியாத மௌனியாக உருவம் மாறி பாராளுமன்றத்தில் உறங்கும்  போது சமுதாயத்தை எப்படி பாதுகாப்பது என்பதை மக்கள் சிந்தித்து முடிவு செய்து அமைச்சர் றிசாத் அவர்களை சமுதாய நாயகனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் இதனால்  மறைந்த தலைவரின் கொள்கைகளை நிலை நாட்ட முடியும் என்பதில் சந்தேகமில்லை 
 
எனவே  றவூப் ஹக்கிம் தலைவராக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு வாக்களித்த மக்களை அல்லது  சமுதாயத்தை பாதுகாக்கும் பேசும் என்று எவர்கள் நம்புகின்றார்களோ அவர்களைப் போன்ற மடையகள் இந்த உலகில் இல்லை என்றுதான் கூற வேண்டும் 
 
ஏன் பேசவில்லை என்று கேட்டால் மேடையில் பேசினோம் அறிக்கைகள் விட்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் குஞ்சு  போராளிகள் கூறுகின்றனர் 
 
பாராளுமன்றத்தில்  பேச தெரியதாவர்களுக்கு  பாராளுமன்ற கதிரையில் போய் இருக்க வெட்கம் இல்லையா ? இனிமேல் முஸ்லிம் காங்கிரஸ் என்று எந்த தேர்தல் வந்தாலும் வாக்கு கேட்டு வருபவர்களை எமது சமுதாயம் விரட்ட வேண்டும் அப்படி ஒரு நிலை வந்தால் மட்டுமே நாட்டில் நிம்மதியாக நாம் வாழ முடியும் 
 
இந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் வந்த பின் பாதிக்கப்பட்ட மக்கள்  அம்பாறை மாவட்ட மக்கள் தான் அவர்கள் இதுவரை ஹக்கிமை நம்பி ஏமாற்றம் அடைந்த அப்பாவி மக்கள் இன்று அமைச்சர் றிசாத் அவர்களை நம்பி வாழும் நிலைக்கு வந்து விட்டனர் 
 
இந்த கட்சியின் வளர்ச்சிக்கு அதன் மறைந்த  தலைவர் அஸ்ரப் அவர்களின் உயிரை பாதுகாக்க அன்று எனது உடன் பிறந்த சகோதரன் அகமது லெப்பை அப்துல் அஸீஸ் என்பவர் தனது உயிரையே நிந்தவூர் மண்ணில் தியாகம் செய்தார் அந்த அளவுக்கு கட்சியை வளர்த்த குடும்பம் கூட இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்கின்ற கரையான் கூட்டத்தில் இருந்து விலகியுள்ளேம் 
 
 தனது உயிரை பாதுகாத்த சகோதரர் அஸீஸ் அவர்களின் குடும்பத்தை இந்த கட்சி பாதுகாக்க வேண்டும் என்று தனது நாளேற்றில் அஸ்ரப் எழுதி வைத்துள்ளார் இப்படி கட்சியோடு பிண்னி பினைந்த குடுப்பம் இன்று அமைச்சர் றிசாத் அவர்களை ஆதரிக்கின்றது என்றால் இதன் மர்மம் என்ன ?
 
இன்று ஹக்கிமுக்கு பின்னால் இருக்கின்ற வாலாட்டிகள் பலர் என்னோடு விவாதத்துக்கு வரும் போது நீங்கள் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது உங்கள் அரசியல் தலைவன் யார் என்று கேட்டால் ஓடி விடுகின்றனர் 
 
சமுதாயம் பாதுகாக்க உருவான கட்சி சமுதாயத்தை அழிக்க வரும் போது அந்த பாவத்திலிருந்து விலக வேண்டும் என்ற முடிவுடன் சமுதாயாத்துக்காக அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த இன்று மக்கள் காங்கிரஸில் இனைந்து அதன் வளர்ச்சிக்கு எனதுயிர் உள்ள வரை உறுதுணையாக இருக்கவுள்ளேன்  
 
தற்போது முஸ்லிம் காங்கிரஸில் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சிறந்த பதில் கூறுவது என்றால் றவூப் ஹக்கிமின் தலைமையை விட்டு விலகி அமைச்சர் றிசாத் அவர்களின் தலையில் ஒன்று சேர்ந்து சமுதாயத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் இந்த நாள் மிக விரைவில் மலரும் காலம் கனிந்து கொண்டு வருகிறது அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்று சேப்பானாக ஆமீன்
 
ஜெமீல் அகமட் 
அ.இ.ம.கா.பொத்துவில் தொகுதி கொள்கைபரப்பு செயலாளர்