மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த ஒரு தலைவர் , பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த தலைவர் அல்ல – சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பைக் குறைத்தமை தொடர்பில் களனி நுங்கம்கொடவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “முப்பது வருடகால யுத்தத்தின் போதும் முன்னாள் மகிந்த ராஜபக்சவுக்கு மரண அச்சுறுத்தல் இருக்கவில்லை

2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து சமாதானம் பேசி இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தான் போரை ஏற்கவில்லை. போரினால் விடை காண முடியாது என்பது மகிந்தவின் சிந்தனை.

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த ஒரு தலைவர் , பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த தலைவர் அல்ல.

போர் முடிவடைவதற்கு மூன்றே மாதங்கள் இருந்த போது 31.01.2009 முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை போர் நிறுத்தம் வழங்கப்பட்டது.நாங்கள் அதனை வேண்டாம் என்றோம்.

வெற்றியை கண்ணுக்கெட்டிய நிலையில் மகிந்த போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். போர்நிறுத்தம் வழங்கப்படாவிட்டால், மூன்று நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்போம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொல்ல விடுதலைப் புலிகள் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாட்டார்கள்.” என்றார். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments