CATEGORY

வீடியோ

ஹக்கீமும், அப்துர் ரஹ்மானும் ஒரே அணியில் களமிறங்குகின்றனர்…..

அஹ்மத் இர்ஷாத்  இன்று 10.07.2015 முஸ்லிம் காங்கிரசின் தலைமை காரியாலையமான தாருஸ்ஸலாமில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் வருக்கின்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் சிறீலங்கா முஸ்லிம்...

அசாத்சாலியின் ஆக்ரோசமான ஊடகவியலாளர் சந்திப்பு , வீடியோ இணைப்பு !

அஹமட் இர்ஷாத் புகாரி  வீடியோ அசாத்சாலியின் ஊடகவியலாளர் சந்திப்பு இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தினை கடுமையான முறையில் விமர்சித்தும் தாக்கியும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வந்த மூன்னாள் நீதி அரசர் சரத் என் சில்வா...

துடிதுடிக்கப் பறிக்கப்பட்ட ஏறாவூரின் இதயம் தாவூத் மாஸ்டர் !

 அஹமட் இர்ஸாட் (வீடியோ செய்தி)., வீடியோ அஸ்ஸஹீத் தவூத் மாஸ்டரைப் பற்றிய மெளலானாவின் கருத்து:- video    ஏறாவூரில் உழைப்பாள் உயர்ந்த உத்தமனாகவும், அவ்வூரின் கல்வி முன்னோடியாகவும், ஒவ்வொருதரினதும் இதயத்தில் குடியிருந்த அஸ்ஸஹீத் யூ.எல்.தாவூத் மாஸ்டர் தமிழீழ...

அஸ்ரஃப் மரணிக்கும் முன்பே அடுத்த தலைவர் ரவூப் ஹக்கீம் எனக் கூறினார் , பேறுவளை அஸ்லம் எம்.பி. !

   அஹமட் இர்ஸாட் வீடியோ:- அஸ்லம் எம்.பி உடனான நேர்காணல் அஹமட் இர்ஸாட்:- நீங்கள் தேசியப் பட்டியல் மூலமாகபாராளுமன்றத்துக்கு காலடி வைத்ததன் பின்னர் ஐந்துவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாணமும்அதனுடன் சேர்த்து தேசிய ரீதியிலும் மக்கள் உங்களைப்பற்றி அறிந்து கொள்ளும் வகையில் உங்களின் அரசில்பயணத்தினைப் பற்றி கூற முடியுமா? அஸ்லம் எம்.பி:- நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்1988ம் ஆண்டு பெரும் தலைவர் அஷ்ரப் இருக்கும் பொழுதே இணைந்து கொண்டவன். முக்கியமாக சொல்லப்போனால்நான் யார் எனறு கேட்பவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸுக்கு எனக்கு பின்னர் வந்தவர்களாகத்தான்இருக்கும். இந்தக் கட்சியின் சார்பாக பிரதேச சபையில்பத்து வருடங்களும் மாகாண சபையில் பத்து வருடங்களும்பாராளுமன்றத்தில் பத்து வருடங்களுமாக சுமார் 25 வருடங்கள் எனது அரசியல் வாழ்க்கையில் பிரபல்யம் என்றஆயுதத்தினை பயன்படுத்தி மார்தட்டிக்கொள்ளும்அரசியல்வாதியாக நான் ஒரு போதும் வாழநினைக்கவில்லை. அதனால்தான் நீங்கள் இவ்வாறானகேள்வியினை தொடுத்திருக்கின்றீர்கள் எனநினைக்கின்றேன்.   எங்களுக்கு மக்கள் தந்துள்ள இந்த பெருமதிமிக்கஆணையை ஒரு அமானிதமாக நாங்கள் கருத்தில் கொண்டுஅதனைப் பேணி நடக்க வேண்டிய பொறுப்பு எங்கள்மத்தியில் இருக்கின்றது. அந்த வகையிலே ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸுக்கும் கட்சிக்கும் அபிமானிகளுக்கும்இந்த நாட்டு மக்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்உறுப்பினர் என்ற வகையிலும் முஸ்லிம்களின் கட்சி என்றரீதியிலும் என்னுடைய பணியினை செய்து வருகின்றேன். இன்று எல்லோரும் பிரபல்யத்தினை எதிர்பார்த்தவர்களாகஇருக்கின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்கள்மற்றும் ஊடகங்கள் என எல்லாவற்றிலும் தாங்கள் பிரபல்யம்அடைந்து கொள்வதற்கே எதிர்பார்க்கின்றனர். என்னைப்பொறுத்த மட்டிலே நான் செய்துள்ள பணிகளை நான் எனறஎன்னத்தோடு ஒரு போதும் கூறியது கிடையாது. கட்சிசமூகம் என்ற ரீதியில் என்னுடைய பணியினை மிகவும்உளத்தூய்மையோடு, முக்கியமாக கட்சிக்கு எந்தஅவதூறுகளும் ஏற்படாத வண்ணம் செய்து வருகின்றேன்என்ற மனத்திருப்தி எனக்கிருக்கின்றது.   அஹமட் இர்ஸாட்:- நீண்டகாலமாக கட்சியில் இருந்துவருகின்றீர்கள் எனக் கூறினீர்கள் அந்த வகையிலே பெரும்தலைவர் அஷரப்புக்கும் உங்களுக்கும் இடையில்காணப்பட்ட உறவினைப் பற்றி கூறமுடியுமா? அஸ்லம் எம்.பி:- அக்காலப்பகுதியில் எனது சகோதரர்பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதற்குப் பின்னர்நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்போம் எனநினைத்த வேளையில் என்னை அரசியலுக்கு அழைத்தும்நான் மறுத்து விட்டேன்.  இந்த நிலையிலேயே பெரும்தலைவர் அஷ்ரபினுடைய உறவும் நட்பும் எனக்குகிடைத்தது. அவர் என்னிடம்வேண்டிக்கொண்டதற்கினங்கதான் நான் அரசியலில்பிரவேசித்தேன் அதற்குப் பின் நானும் அவரும் மிகவும்அன்னியோன்னியமாக பழகியதோடு அவர் மீது அதிகமரியாதை உடையவனாகவும் நான் இருந்து வந்தேன். எனதுஅரசியல் பயணத்தில் மிக முக்கியமான குருவாகவும் நான்அவரைப் பார்க்கும் அதேநேரம், என்னை இறைவன்கைவிடமாட்டான் என இரண்டு தடைவைகள் என்னிடம்கூறி எனக்காக இறைவனிடம் பிரார்த்தித்தும் உள்ளார்.  அஹமட் இர்ஸாட்:- பெரும் தலைவர் அஷ்ரபுடன் சிறந்தநட்பினை பேணி வந்த நீங்கள் அவருடைய மறைவிற்குபின்னர் தற்போதைய தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீமுடன்சுமூகமாக உறவினை பேணி வருகின்றீர்கள். அந்தவகையில்கிழக்கில் உதித்த தலைமை கிழக்கிற்கு வெளியில் உருவானதலைமை என்ற வேறுபாட்டினை நீங்கள் எந்தக்கோணத்தில் பார்க்கின்றீர்கள்? அஸ்லம் எம்.பி:- அடுத்த தலைவர் யாரென நீங்கள் ஏன்இன்னும் கூறவில்லை என்று மறைந்த தலைவர் அஷ்ரபிடம்அவர் உயிரோடு இருக்கும் பொழுது நான் வினவிய போதுஅவர் அமைதியான புன்முறுவல் பூத்தவராக மௌனமாகஇருந்து விட்டார். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அதேகேள்வியினை அவரிடம் கேட்டபொழுது அதற்கும் பதில்கூறாத பெரும் தலைவர் ஆறு மாதங்கள் கழிந்தன் பின்னர்நான் தனியாக நின்று அவரிடம் அதே கேள்வியினை மீண்டும்தொடுத்த நேரத்தில் பெரும் தலைவர் அஷ்ரப் என்னைவிடவும் இக்கட்சிக்கு சிறந்த தலைவர் ஒருவர்கிடைப்பாரானால் அது ரவூப் ஹக்கீமைத் தவிர வேறுயாராகவும் இருக்க முடியாது எனக்கூறினார். அஹமட் இர்ஸாட்:- அப்படியென்றால் பெரும் தலைவர்அஷ்ரப் உயிருடன் இருக்கும் பொழுதே எனக்குப் பின்னர்கட்சியின் தலைமைப் பதவிக்கு தகுதியானவர் ரவூப்ஹக்கீம்தான் எனக் கூறாமைக்கான காரணம் எதுவெனநீங்கள் நினைக்கின்றீர்கள்? அஸ்லம் எம்.பி:- அன்று கிழக்கிலே எல்லோரும்வடகிழக்கிற்கு வெளியில் கட்சியின் தேவை தேவைப்படாதுஎனவும் கிழக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி என்றுகூறுகின்ற யுகமாகத்தான் பெரும் தலைவருடையஅக்காலகட்டம் காணப்பட்டது. அதன் அடிப்படையில்கிழக்கில் பல பிரச்சினைகளை முகம் கொடுக்க நேரிடலாம்என நினைத்து பெருந் தலைவர் தனது முடிவினைபகிரங்கமாக அறிவிக்காமல் இருந்திருக்கலாம்.கட்சியானது முழு இலங்கை வாழ் மக்களுக்கும்உருவாக்கப்பட்ட கட்சியாகும் அந்த வகையில்இலங்கையின் எந்தப்பாகத்திலிருந்தாவது கட்சியின்தலைமைப் பொறுப்பினை எவராலும் முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதில் என்ற கருத்துடனேயே பெருந்தலைவர்அன்று காணப்பட்டார். அஹமட் இர்ஸாட்:- அப்படியென்றால் கிழக்கிற்கு மட்டும்மட்டுப்படுத்தப்படக்கூடாது என நினைத்துத்தான்பெருந்தலைவர் உயிருடன் இருக்கும் பொழுதே சகலபிரதேசங்களிலும்  உள்ள சகல மக்களையும் இணைத்துஅரசியல் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக நுஆ எனும் தேசிய ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அப்படியென்றால் நீங்கள் கூறுவதற்கும்இவ்வாறு அஷரப் நடந்து கொண்டைமையையும் எவ்வாறுபார்க்கின்றீர்கள்? அஸ்லம் எம்.பி:- பாராளுமன்றத்தில் இருக்கின்றபெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள்உறுப்பினர்கள் எல்லோரும் அஷ்ரபை பார்த்து நீங்கள்மிகவும் திறமையானவர். உண்மையிலே நேர்மையானவர்ஆகவே எங்களுக்கும் உங்களுடைய கட்சியில் இணைந்துஅரசியல் செய்வதற்கு ஆசை இருக்கின்றது. ஆனால்முஸ்லிம் காங்கிரஸ் என்று கூறிக்கொண்டு சிங்களபிரதேசங்களில் எங்களால் அரசியல் செய்ய முடியாது எனக்கூறியதன் விளைவாகவே அன்று அஷ்ரப் சகசமூகங்களையும் இணைத்துக்கொண்டு தேசியத்திலேஅரசியலினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நுஆகட்சியினை ஆரம்பித்தார். மாறாக கட்சியின் தலைமைதனக்குப் பின் ரவூப் ஹக்கீமிடம் கொடுக்கப்பட வேண்டும்என்பதில் ஒருமித்த கருத்துடன் இருந்தமை அவருடன்நெருங்கிப் பழகியவன் என்ற அடிப்படையில் எனக்குநன்றாகத் தெரியும். அஹமட் இர்ஸாட்:- நாட்டில் இன்று ஆட்சிமாற்றம்ஏற்படுத்தப்பட்டுள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம்மஹிந்தவின் அரசாங்கத்தில் பேருவளையில்முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அட்டூழியங்கள்தான்முக்கிய காரணமாக பேசப்படுகின்றது. அந்தவகையில்நீங்கள் பேருவளையினை பிரதி நிதித்துவப் படுத்தியும்ஜனாதிபதித் தேர்தலில் நீங்களும் உங்களுடைய கட்சியும்கடைசி நேரம் வரைக்கும் மஹிந்தவுடன்ஒட்டிக்கொண்டிருந்தமைக்கான காரணம் என்ன? அஸ்லம் எம்.பி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது இந்தநாட்டில் எல்லா அரசாங்கங்களோடும் ஆட்சி அமைப்பில்பங்காளியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அன்று மஹிந்தஅரசாங்கத்துக்குள் இருந்து கொண்டேதான் நாம்முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களுக்கு குரல்கொடுத்து வந்தோம். வெளியில் இருந்து கொண்டு குரல்கொடுப்பதினை விடவும் அரசாங்கத்திற்கு உள்ளிருந்துகொண்டு குரல் கொடுக்கும் சக்தியானது வலுவானசக்தியாக அன்று காணப்பட்டது. அந்த வகையில் நீதிஅமைச்சராக இருந்த எமது தேசியத் தலைமை மட்டுமேஅன்று பேருவளை பிரச்சினையை சர்வதேசத்துக்குக்கொண்டு சென்று இலங்கையில் சிறுபான்மை சமூகம்நிம்மதியாக வாழவேண்டும் என்றால் ஆட்சிமாற்றம்உடனடியாக தேவை என்பதனை சர்வதேசம் உணரும்வகையில் செயற்பட வைத்தது. அஹமட் இர்ஸாட்:- பேருவளையில் மறக்க முடியாத துயர்சம்பவமொன்று இடம்பெற்று தற்பொழுது ஒருவருடம்பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் நீங்கள்பேருவளையினை பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர் என்றவகையில் தற்பொழுது அங்குள்ள மக்களின் நிலைமைஎவ்வாறு இருக்கின்றது.? அஸ்லம் எம்.பி:- அன்றைய அந்த சம்பவத்துக்காகஉண்மையில் எவ்வளவுதான் நஷ்டஈடுகள்கொடுக்கப்படாலும் உடைந்த எமது மக்களின் மனங்களைஒன்று சேர்க்க முடியாது என்பது நிதர்சனம். கட்டங்களைதிருத்தியமைக்கலாõம் அல்லது அதற்குறிய பெருமதியினைகொடுக்கலாம். ஆனால் அந்த மக்கள் கடந்த ரமழானில்அனுபவித்த துன்பங்கள் எத்தனை ரமழான்கள் களிந்தாலும்அழிந்து விடப்போவதுமில்லை வரலாறு திருத்திஅமைக்கப்பட போவதுமில்லை. எங்களால் ஒரு போதும்வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகவேஅதுஇருக்கின்றது. அஹமட் இர்ஸாட்:- குர் ஆன் ஹதீசினை அடிப்படையாகவைத்து அரசியல் செய்யும் உங்களுடைய கட்சியானது ஏன்முஸ்லிம் கலாசார அமைச்சினை எடுத்து முஸ்லிம்களுக்குஅபிவிருத்திகளை செய்வதில் பின் நிற்கின்றது? அஸ்லம்...

அதி நவீன துப்பாக்கி தோட்டாவையும் தாங்கும் ஐபோன் ! அசத்தல் வீடியோ

  அதி நவீன துப்பாக்கி தோட்டாவையும் தாங்கும் ஐபோன்! அசத்தல் வீடியோ  க்ளைமாக்சில் வில்லன் துப்பாக்கியால் சுடும்போது கழுத்தில் போட்டிருக்கும் டாலரோ, பாக்கெட்டில் வைத்திருக்கும் பொருளோ ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம்....

காரசாரமான கேள்விகளுக்கு மனந்திறக்கின்றார் ஹரிஸ் எம்.பி ! ( வீடியோ )

அஹமட் இர்ஸாட் அஹமட் இர்ஸாட்:-  19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்? அந்த வகையில் இருபதாவது திருத்தச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டால் அதற்கும் உங்களது...

England vs New Zealand 5th ODI Full Highlights 2015 HD

https://www.youtube.com/watch?v=0U1v5bT55sg

எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர் (VIDEO) !

பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...

சங்காவின் ஓய்வு பெறும் தீர்மானம் சரியானதா? ( வீடியோ )

http://youtu.be/26F3HnOqA8s இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது சொந்த...

அண்மைய செய்திகள்