அஹமட் இர்ஸாட்
(வீடியோ செய்தி).,
வீடியோ அஸ்ஸஹீத் தவூத் மாஸ்டரைப் பற்றிய மெளலானாவின் கருத்து:- video
ஏறாவூரில் உழைப்பாள் உயர்ந்த உத்தமனாகவும், அவ்வூரின் கல்வி முன்னோடியாகவும், ஒவ்வொருதரினதும் இதயத்தில் குடியிருந்த அஸ்ஸஹீத் யூ.எல்.தாவூத் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளால் 03.07.1990 இரவு துடிதுடிக்க கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இம்மாதத்துடன் இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன.
உமறுலெப்பை, இலவப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வராக 04.04.1936ல் ஏறாவூரில் பிறந்த தாவூத் மாஸ்டர், இளம் வயதில் தந்தை காலமாகிவிட தாயின் ஆதாரவில் வளர்ந்தார். குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியதுடன், இளமைப்பராயம் சவாலும், சோதனையும் மிகுந்ததாக காணப்பட்டது. எனினும் உண்மை, நேர்மை, துனிச்சல், மன உறுதி போன்றவற்றை ஆயுதமாக பயண்படுத்தி வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். ஏறாவூரில் உள்ள தற்போதைய அலிகார் மத்திய கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை ஆரம்பித்த அஸ்ஸஹீத் தாவூத் ஆசிரியர் மாணவ பருவத்தில் கல்வியிலும் ஏனைய புறகிருத்திகளிலும் சிறந்து விளங்கினார். 1945ல் எஸ்.எஸ்.சீ. பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியர் நியமனத்துடன் ஏறாவூர், மூதூர், கொழும்பு பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு சிறந்த ஆசிரியராக விளங்கினார்.
பேராதனை பல்கலைகழக வெளிபட்டப்படிப்பினை 1969ல் பூர்த்தி செய்து ஏறாவூரின் முதலாவது பட்டதாரி எனும் பெயர் அஸ்ஸஹீத் தாவூத்தின் கைவசமே இருக்கின்றது. 1980களில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்லோமாவை நிறைவு செய்த கையோடு தான் கல்விகற்ற பாடசாலையான ஏறாவூர் அலிகார் பாடசலைக்கு ஆசிரியர் நியமணம் பெற்று வந்தார். 1970ல் அலிகார் மகா வித்தியாலையத்தின் நிரைவேற்று அதிபராக நியமிகப்பட்டதானது அப்பாடசாலையின் முதலாவது ஏறாவூரை சேர்ந்த அதிபர் என்ற பெறுமையையும் அவருக்கு கொடுத்தது. அதே போன்று ஓட்டமாவடி மத்திய கல்லூரி, ஏறாவூர் அல்-முனீறா மகளிர் வித்தியாலையம் போன்றவற்றில் அதிபராக கடமையாற்றி உள்ளதுடன், மூன்று கால கட்டங்களில் அலிகார் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி 1980முதல் அவருடைய இறுதிக்காலம் வரை அப்பாடசாலையிலேயே இருந்து இன்று அலிகார் முழுமையான பாடசாலையாகவும் தேசியத்திலே பேசப்படும் பாடாசாலையாகவும் விளங்குகின்றது என்றால் அது அஸ்ஸஹித் தாவூத்தினால் பரிபாலிக்கப்பட்ட பாடாசாலை என்பதில் ஏறாவூர் புத்தி ஜிவிகளிடத்தில் மாற்றுக் கருத்திருக்காது என்பது நிதர்சனமே.
அதிபராக இருந்தது மட்டுமல்லாமல் எழுத்துப்பணியிலும் தன்னை பகுதிநேர எழுத்தாளனாக உறுவாக்கிக்கொண்டவர் தனது கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை தேசியப் பத்திரிகைகளில் பிரசுரமாகச் செய்ததுடன் வானொலி கலந்துரையாடல்களிலும் அடிக்கடி கலந்து கொண்டார். அத்துடன் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் பதவிகளை சிறப்பாக செய்தவருமவார். அதனோடு சேர்த்து ஏறாவூர் வை.எம்.எம்.ஏ செயலாளராகவும், மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர், பல நோக்கு கூட்டுரவுச் சங்கத்தின் பணிபாளர் சபையின் தலைவர், ஏறாவூர் புணர்வழ்வு சபையின் பொதுச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்து சமூகத்துக்கு காத்திரமான பங்களிப்புகளை ஆற்றியமையும் இவரது படுகொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என்பது வெளிச்சம் போட்டுக்காட்டக்கூடிய விடயமாக உள்ளது என்பதையும் எவறாலும் மறுக்க முடியாது.
அஸ்ஸஹீத் தாவூத் சமூகப்பற்று இனப்பற்று, மார்க்கப்பற்றுமிக்கவராக விளங்கிவந்தார். சமூகத்திற்கு அநீதிகள் ஏற்படும் சந்தர்பங்களில் அதற்கு எதிராக குரல் எழுப்பியவாராகவும் காணப்பட்டார். இவ்வாறான பன்புகள் இவரது கடத்தல்களுக்கும் படுகொலைக்கும் வித்திட்ருக்கலாம் என சர்வசாதாரனமாக ஊகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்திற்காக பாடுபடுபட்டவர்கள், குரல் எழுப்பியவர்கள், முஸ்லிம் கல்விமான்கள், புத்தி ஜீவிகள் போன்றவர்களை முக்கியமான முஸ்லிம் சமூகத்தின் ஆணிவேர்கள் என இனம் காணப்பட்டு அவர்களை முதலில் கலையெடுபுச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 03.07.1990ம் நாள் இரவு அவரது வீட்டுக்குள் பிரவேசித்து உடுத்த உடையுடன் கடத்திச் சென்றனர். ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை அவர்களை பின் தொடர்ந்து சென்ற அவரது புதல்வர் ஒருவரையும் தாக்கிவிட்டு டிரக் வண்டியில் மாயமாய் மறைந்தனர். எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவரை விடுக்கமுடியவில்லை. மார்க்க கடமையைச் செய்யுமாறு கூறிய விடுதலைப்புலிகள் நல்லடக்கத்துக்காக அவரின் ஜனாசாவினை கூட ஒப்படைக்க மறுத்தமையானது கடத்தல் ஏன் நடந்தது? படுகொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? எனும் வினாக்களுக்கான விடைகள் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருக்கின்றது.
மறுநாளான 04.07.1990 தியாகத்திரு நாள், புனித ஹஜ்ஜுப் பெருநாள். யூ.எல். தாவூத் மாஸ்டரை சுவர்களத்தியாகம் செய்த ஏறாவூர் சமூகம் மாறாத சோகத்துடன், ஆறாத்துயரில் மூழ்கிக் கிடந்தது. புலிகளின் மின் துண்டிப்பினால் ஏறாவூர் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தமையினால் ஹஜுப் பெருநாள் என்பது சிறுவர்களுக்குக் கூட கொண்டாடக்கூடிய பெருநாளாக அன்றைய நாள் இருக்கவில்லை.
நான்கு ஆண்மக்களின் தந்தையான அஸ்ஸஹீத் தாவூதின் இழப்பினை பிள்ளைகளினால் தாங்க்கிக்கொள்ள முடியவில்லை.உயர்தர வகுப்பில் சித்தி பெற்றிருந்த அவர்களில் இருவர் உடனடியாக இரானுவத்தில் இனைந்து கொண்டனர். இரண்டாவது லெப்டினனக இணைந்த ஒருவர் பல பதவி உயர்வுகளைப் பெற்று தற்பொழுது மேஜர் தரத்துக்கு உயர்ந்துள்ளார். அத்துடன் விரைவில் அடுத்த பதவி உயர்வினையும் எதிர்பார்த்துள்ளார். மற்றையவர் கோப்ரலாக பணியாற்றி இராணுவத்திலிருந்து விலகி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார். அடுத்தவர்கள் இருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், கூட்டுரவு பரிசோதகராகவும் அரச சேவையில் இணைந்து நல்ல நிலையில் உள்ளனர். கணவர் பத்து வருடத்தின் பின்னர் விடுவிக்கப்படுவார் என்ற நப்பாசையுடன் 2000ம் ஆண்டுவரை உயிரினை பிடித்துக் கொண்டிருந்த அவரது துணைவியார் ஈற்றில் ஏமாற்றம் அடைந்தவராக நோய்வாய்ப்பட்டு 2006ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
இராணுவ அதிகாரியான புதல்வர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், பதவியா, மன்னார்,வவுனியா, போன்ற இராணுவ முகாம்களில் பணிபுரிந்தபொழுது தனது தந்தையின் கடத்தலுக்கும்,படுகொலைக்கும் காரணமாக விடுதலைப்புலிகளை ஆராய்ந்து அறிந்து அறிக்கை பெற்றுள்ளார். புலிகள் இயக்கத்திலிருந்து விலகி பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மட்டக்களப்பு புலித்தலைவர்களும் இவரது புலன் விசாரனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு பெரும் அனர்த்தங்களை விளைவித்து வடமாகாணதுக்குச் சென்று அங்குள்ள முஸ்லிம்களை 24 மணி நேரத்தில் உடுத்த உடையுடன் வெளியேற்றிய மட்டக்களப்பு புலிகளும் அவரது தந்தையின் கொலையாளிகளும் புலன் விசாரனையின் பொழுது இனங் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தலைமை யூ.எல்.தாவூத் உயிர்வாழ்த காலத்தில் எஸ்.எல்.ஈ.எஸ் நேர்முகப்பரீட்டைக்கு தோற்றியிருந்தார். அவர் கடத்தப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பதவி உயர்வுக்கான நியமணக்கடிதம் கிடைத்த பொழுது அதனை அனுபவிப்பதற்கு அவர் இருக்கவில்லை. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட யூ.எல்.தாவூதுக்கு அல்லாஹ் மறுவுலகில் சகல பாக்கியத்துடனான பதவியுயர்வுகளையும், ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தினை வழங்குவதற்காக பிரார்த்திப்பதோடு, முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளாக வாழ்ந்து சமூகத்தினால் மதிக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்த காரணத்தினால் ஓட்டமாவடி சேர்ந்த புஹாரி விதானை, சரீஃப் அலி, ஏ.ஜி.ஏ. உதுமான்,ஆசிரியர், மற்றும் வாழைச்சேனை, மீராவோடையை, சேர்ந்த, வை.அஹமட், முகம்மது முத்து சேர்மன் போன்றவர்களும் தாவூத் மாஸ்டரைப் போலவே கடத்திச் செல்லப்பட்டும், நடு வீதியில் வைத்தும் பலிக்காடாக்கப்பட்டார்கள்.