பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார்.
மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம்.
இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எரிமலை இருந்த பள்ளத்தாக்கில் கயிறு மூலம் இறங்குகின்றார்.
சிறிது நேரத்தில், கொதிக்கும் எரிமலை குளத்திற்கு சில மீற்றர்கள் அருகில் சென்ற அவர், கைகளை விரித்தவாறு அங்கே சிறிது நேரம் நின்று எரிமலையின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கிறார்.
அப்போது, பல அடிகள் உயரத்திற்கு எரிமலை குழம்புகள் பொங்கி எழுந்தபோதும் அவர் அசையாமல் அங்கே நின்று அதனை கவனிக்கிறார்.
ஆளில்லா குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கமெராக்கள் இந்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளன.