ஹக்கீமும், அப்துர் ரஹ்மானும் ஒரே அணியில் களமிறங்குகின்றனர்…..

கவர் போட்டோ_Fotor

அஹ்மத் இர்ஷாத் 

இன்று 10.07.2015 முஸ்லிம் காங்கிரசின் தலைமை காரியாலையமான தாருஸ்ஸலாமில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் வருக்கின்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மரச்சின்னத்தில் களமிறங்கப் போவதாக தெரிவித்தனர். அதனடிப்படையில் கருத்து தெரிவித்த ந்முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களை முஸ்லிம்காங்கிரசின் மரச்சின்னத்தில் களமிறக்குவதோடு வன்னி மாவாடத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து யானைச்சினத்தில் ஒருவரை களமிறக்கப் போவதாக தெரிவித்தார். அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரில் தவிசாளர் அப்துர ரஹ்மான களமிறங்குவதோடு மற்றையவர் கல்குடாவில் புதுமுக வேட்பாளராக பேசப்பட்டு வரும் கணக்கறிஞர் றியால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக கல்குடாவில் களமிறக்கப்படாலம் என்பதனை ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூஃப் ஹக்கீம் தெரிவிக்கையில் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் மரச்சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை, திருகோணமலை, புத்தளம், கம்பஹா, களுத்துறை, அனுராதபுரம்,குருனாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக கூறிய அதேவேலை அம்பாறை மாவட்டத்தில் ஐந்து வேட்பாளர்கலும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரசில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விடியல் ஊடகவியலாளர் றிஃப்தி அலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது தெரிவித்தார்.

heah_Fotor