அசாத்சாலியின் ஆக்ரோசமான ஊடகவியலாளர் சந்திப்பு , வீடியோ இணைப்பு !

கவர் போட்டோ_Fotor

அஹமட் இர்ஷாத் புகாரி 

வீடியோ அசாத்சாலியின் ஊடகவியலாளர் சந்திப்பு

இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தினை கடுமையான முறையில் விமர்சித்தும் தாக்கியும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வந்த மூன்னாள் நீதி அரசர் சரத் என் சில்வா அன்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான கருத்துக்களையும் அதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அன்மையில் மெதமுலானவில் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிப்பார்கள் என எதிர்பார்த்து மஹிந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் 12 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர் பதின்மூன்றாவது உறுப்பினராகவே சரத் என் சில்வா மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் முகமாக சமூகமளித்திருந்தார்.

 இவ்வாறு காலத்துக்காலம் தனது முடிவினையும், கருத்தினையும் மாற்றிக்கொள்ளும் சரத் என் சில்வாவினை பார்க்கும் பொழுது அவர் நீதியரசராக இருந்த காலத்தில் அவரினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது என இன்று 08.08.2015 இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்த அசாத்சாலி முதலில் இவருக்கு ஏதும் பிரச்சனைகள் உள்ளனவா என சிந்திக்க செய்யவும் தூண்டுக்கின்றது எனக் தெரிவித்தார்.

அதனோடு சேர்த்து இன்று ஐக்கிய தேசியக்கட்சியானது முஸ்லிம் பிரதி நிதித்துவங்களை குறைக்கின்ற வகையில் மூன்றுக்கும் அதிகமான பிரதிகளை தன்வசம் வைத்திருந்த கண்டி , கொழும்பு மாவட்டங்களில் இரண்டு வேட்பாளர்களை மட்டும் தேர்தலில் நிறுத்தி இருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் கவலை அளிக்கக்கூடிய விடயமாக காணப்படுக்கின்ற அதே சமயம் முஸ்லிம்கள் சார்பாக இதற்கான எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக முஸ்லிம் கவுன்சிலினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 அதனோடு சேர்த்து இந்த நாட்டில் தோல்விகளையே சந்தித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியினை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவருவதற்கு சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியமானதாக அமைந்தனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஆகவே வேட்பாளர் நியமனத்தில் பக்கசார்பில்லாமல் பிரதமர் ரணில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனோடு இன்று முக்கிய பதவியில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 63இலட்ச்சம் வாக்குகளை பெற்றமையானது இந்த நாட்டுமக்கள் மஹிந்தவின் அராஜக ஆட்சி ஒழிக்கப்பட்டு மீண்டும் மைத்திரியின் தலைமையின் கீழ் நல்லாட்சி இடம் பெற வேண்டும் என்பதற்காகவே. அதனை ஜனாதிபதி கருத்தில் கொண்டு செயற்பட கடமைப்பட்டுள்ளார். ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ்ஸவுக்கு தேர்தல் கேட்கும் அதிகாரத்தினை வழங்கி மஹிந்தவுடன் இருக்கும் நாற்பது திருடர்களையும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வதானது வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பாரிய துறோகமாகவே பார்க்கப்படுக்கின்றது எனக் கூறினார்.

 

Letter to Ranil 8-7-15