லைலதுல் கத்ரின் சிறப்புகள் : ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…!

4d49d606-400e-48ec-b596-b913ea425571_S_secvpf.gif

 தொகுப்பு : முஹம்மட் றின்ஸாத் 

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…

 மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5) 

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (35)

 லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.

 அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழுஇருபத்தி ஒன்பதுஇருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்கள்: புகாரி (49)முஅத்தா (615)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போதுஅது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டுயார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),

நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 2123252729 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்றுவணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். 

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்துகொண்டால் அதில் என்ன கூறவேண்டும் எனக் கேட்டேன்.{ஆயிஷாரலி இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.அல்லாஹும்ம இன்னக்க அஃபூவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்க கூடியவன்.மன்னிப்பை விரும்பகின்றாய் என்னை மன்னிப்பாயாக.

விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும் இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும்வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகிறான்.

அதாவது இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையைவிட விட அதிக நன்மை கிடைக்கிறது.இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவைஅடைந்துக் கொள்வதற்க்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில்இஃதிகாஃப் இருப்பார்கள் “83 வருடம் வாழ்வோமா?” என்பதே கேல்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதனால் அந்த நன்மையேஅல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகிறான்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமலான் மாதத்தின்மற்ற 20 நாட்களை விட இந்த பத்து நாட்களில் நபியவர்கள் அதிகவணக்கத்தில் ஈடுப்படுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல் செய்திருக்கும் போது நம்மைப்போன்ற சாதாரனமானவர்கள் எவ்வளவு அதிகமாகஅமல்களில் ஈடுப்பட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்!

ஆகவே அச்சிறப்பான் இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர்செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்றநற்கருமங்களை அதிமதிகம் செய்து விட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள்இது நல்ல முடிவல்ல. நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர்இரவைப்பற்றி சொல்வதற்க்காக வெளியில் வந்தார்கள்.

 அல்லாஹ்அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்துக்கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் சில அடையாளங்களைரமலான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்இப்படி கூறுவதினால் “ரமலான் மாதத்தின் மற்ற 20 நாட்கள்”அமல்கள் செய்ய தேவையில்லை” என்று விளங்கிக் கொல்லக்கூடாதுமற்ற 20 நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்கள் செய்யவேண்டும்.

நாம் அனைவரும் ஒற்றைப்படை நாளில் அதிகமாக தொழுது, திக்ர், செய்து, குர்ஆன் ஓதி லைலத்துல் கத்ர் சிறப்பை தேடிக்கொள்வோமாக.

♣  (ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.

அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)புகாரி 2024

♣  அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம், லைலத்துல் கத்ர் இரவை (இதுதான் என) அறிந்துகொண்டால் நான் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டபோது, “அல்லாஹூம்ம இன்னக்க அஃபூவன் துஹிப்புல் அஃப்வஃ ஃபு அன்னி – யா அல்லாஹ்!’ (அல்லாஹ்வே! நீ எப்போதும் மன்னிப்பவனாக இருக்கின்றாய். நீ மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே, என்னையும் மன்னிப்பாயாக!) எனும் துஆவை ஓதுமாறு பணித்தார்கள்.

திர்மிதி, இப்னு மாஜா