யுத்தத்தால் தனது கரங்கள் இரண்டையும் இழந்த நபருக்கு வாழ்வாதார உதவித் திட்டம் !

News_Fotor

பாரூக் சிஹான் 
யுத்தத்தால் தனது கரங்கள் இரண்டையும் இழந்து வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு வாழ்வாதார உதவித் திட்டம் – வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர்…
கடந்த யுத்தத்தின் வடுக்கள் எத்தனையோ இன்னமும் இங்கு இருந்துகொண்டே இருக்கின்றது, யுத்தத்தால் தனது இரு கரங்களையும் இழந்த நபர் ஒருவர் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் தனது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்த வேளை அவருக்கான வாழ்வாதார உதவி திட்டத்தை வழங்க அமைச்சர் முன்வந்து உறுதியும் அளித்துள்ளார். 
அதே வேளை எதிர்வரும் மாதம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் திரட்டப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகள், யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் என்ற அடிப்படையிலான வாழ்வாதார உதவித்த்திட்டம் ஆரம்பிக்க உள்ள நிலையில், இதே போன்ற பல்லாயிரக்கணக்கான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் நமது நாட்டிற்கு, புலம்பெயர் சமூகங்கள் தமது உதவிகளை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்…