அஹமட் இர்ஸாட்
அஹமட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்? அந்த வகையில் இருபதாவது திருத்தச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டால் அதற்கும் உங்களது கட்சியும் நீங்களும் ஆதரவளிப்பீர்களா?
ஹரிஸ்:- 19வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமையனது கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவும் கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒட்டிய முடிவாகவுமே பார்க்கின்றேன். அதனை நாங்கள் ஒரு புதிய விடயமாக பார்க்கவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான அனுகூலமான விடயங்கள் அதில் இருக்கவில்லை. இருந்தும் நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டே நாம் அதற்கு ஆதரவளித்தோம்.
அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் பொழுது ஆளுனரின் தலையீடுகள் அதிகம் இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டினை முதலமைச்சர் நசீர் அஹமட் ஆளுனர் மீது சுமத்துகின்றார். நசீர் அஹமட் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதனை எந்த வகையில் பார்க்கின்றீர்கள்?
ஹரிஸ்:- ஆளுனர் முதலமைச்சர் இலுபரியானது இன்று நேற்றல்ல மாகாண சபை உறுவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறான குற்ரச்சாட்டுக்கு அப்பால் வெளிநாட்டு நிதி உதவிகளையும் மாகாணத்துக்கு கொண்டுவருவதோடு, மத்திய அரசாங்கத்துடன் சுமூகமான உறவினைப் பேணிவருவதோடு கொண்டு வரப்படுக்கின்ற வெளிநாட்டு நிதிகளில்லிருந்து மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அஹமட் இர்ஸாட்:- அரசின் பங்காளி கட்சியாக இருந்து ஏன் நீங்கள் ஆளுனரின் ஒருதலைப்பட்ச தலையீட்டினை ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை?
ஹரிஸ்:- இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஆளுனரை சிபார்சு செய்திருந்ததே முஸ்லிம் காங்கிரசின் தலமையாகும். அந்தவகையில் குறுகிய காலத்தில் சிபார்சு செய்த நபரையே குற்றம் சுமர்த்தி ஜனாதிபதியிடம் செல்வதேன்பது முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைமைக்கும் சங்கடமான நிலமையினை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- அகில இலங்கை மக்கள் காங்கிரசானது உங்களுடைய கோட்டையான அம்பாறைக்குள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றமையினை நீங்கள் எவ்வாறு கருதுக்கின்றீர்கள்?
ஹரிஸ்:- அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறையில் அங்கத்தவர்களை கூட்டிகொள்ள முயற்சிக்கின்றது என்ற விடயம் சம்பந்தமாக நான் அலட்டிக்கொள்ளவில்லை. ஏன்னென்றால் பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக சாவாலினை ஏற்படுத்தக்கூடிய வல்லமை அவரிடம் இல்லை என்றே கூற வேண்டும். கட்சியின் செயலாளர் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் அம்பாறையில் இருந்தும் கூட கடந்த காலப்பகுதியில் அம்பாறைக்கு என்று எந்த பணிகளையும் அவர்களால் செய்ய முடியவில்லை. அந்த வகையில் அவர்களுடைய ஊடுறுவளை நான் பெரிதுபடுத்தவில்லை.
அஹமட் இர்ஸாட்:- சீறாஸ் மீராசாஹிப் தெரிவித்த கருத்தில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அமைச்சர் அதாவுல்லாவுடன் சேர்ந்து சாய்ந்தமருத்துக்கு தனியான நகர சபை கொண்டுவருக்கின்ற பொழுது பிரதேசத்தின் முக்கியமான அரசியல் பிரமுகர் கல்முனைகுடி பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினை தூண்டிவிட்டு அவருடைய முயற்சியினை தடை செய்ததாக பெயர் குறிப்பிடாமல் உங்களைச் சுட்டிக்காட்டினார். அவருடைய அந்த கூற்றுக்கு உங்களுடைய பதில் என்ன?
ஹரிஸ்:- சிறாசினுடய இந்த கூற்றினை சிறுபிள்ளைத்தனமானதாகவே நான் கருதுக்கின்றேன். அமைச்சர் அதாவுல்லா உள்ளூராட்சி அமைச்சராக கடந்த நாலு வருடங்களாக இருக்கின்றார். அதே போன்று அதாவுல்லாவுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக சீறாஸ் உறவினைப் பேணி வருக்கின்றார். அந்த வகியில் ஜனாதிபதி தேர்தலின் பொழுதே சாய்ந்தமருதுக்கான நகர சபை கோரிக்கையினை மக்கள் மத்தியில் வெளிக்காட்டி மக்களை ஏற்மாற்றும் விடயமகும். ஏன்னென்றால் இரவோடிரவாக அக்கறைப்பற்றினை மாநகர சபையாகவும், இன்னுமொரு பிரதேச சபையினையும் உறுவாக்கியவர்தான் அதாவுல்லா. அவர் நினைத்திருந்தால் உடனடியாக சாய்ந்தமருதுக்கு ஒரு தனியான சபையினை எடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவுமில்லை. அவர்களால் செய்யவும் முடியாது. அதற்கு என்மேல் குற்றம் சாட்டி அரசியல் இஸ்திரம் தேடுவதானது சிறாசின் அரசியல் முதிர்ச்சியினை வெளிச்சம் போட்டுக்காட்டும் விடயமாகவே பார்க்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கட்சியின் தலைமை படித்தவர்களை விரும்புவதில்லை என்றும், அதனால்தான் கட்சியானது தன்னை வெளியில் போட்டதாகவும் ஒரு கருத்தினை சிறாஸ் மீராசாஹிப் தெரிவித்திருந்தார். அதற்கான உங்களுடைய பதில் என்ன?
ஹரிஸ்:- அவர் எமது கட்சிக்குள் வருக்கின்ற பொழுது கட்சியின் மத்திய குழு உறுப்பினராக கூட இருக்கவில்லை. கட்சி மட்டுமல்ல சமூகத்துக்கு அப்பாற்பட்டு தானும் தனது வியபாரமுமாக இருந்தவர். அந்தவகையில் அவருக்கு சமூகத்தின் ஒரு பாரிய பொறுப்பினை அதாவது சமூகத்தின் தலைமைகளாக இருந்தவர்களின் சிபார்சுக்கு அமைவாகவே மக்கள் வழங்கியிருபார்கள் என்பது உண்மை. அந்தவகையில் அவருக்கு சாய்ந்தமருதில் 3000க்கும் அதிகமான வாக்குகளே கிடைத்தது. மற்றைய வாக்குகலெல்லாம் எனது ஆதரவாளர்களினால் அவருக்கு கிடைத்த வாக்குகளாகும். ஆனால் தன்னுடைய திறமையினால்தான் அதிக விருப்புவாக்குகள் பெற்றதாக இந்த 45நாள் கதையினை கூறிக்கொண்டு திரிவதானது அவர் என்ன படித்துள்ளார் என்ற கேள்வியினை அவரைப்பார்த்து கேட்க தோன்றுக்கின்றது. ஆனால் இங்கு முக்கியமான விடயத்தினை நான் கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். அதாவது அவருடைய முதல்வர் பதவியானது பறிக்கப்பட்டதனை நான் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர் யாரிடமும் ஆலோசனை செய்யாமலே தன்னியாகச் சென்று இராஜினாம கடிதத்தில் ஒப்பமிட்டுக்குக் கொடுத்துள்ளார். இவ்வாறு அவரிடமிருந்து மதல்வர் பதவி பறிக்கப்பட்டால் எதிர்காலத்தில் பிரதேச ரிதியாக பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என கட்சியின் தலைமைக்கு நான் கூறியிருந்தேன். ஆகவே சீறாசின் முதலமைச்சு பதவி பறிக்கப்பட்டமையினை நான் எதிர்த்தவனாகவே இன்றும் இருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கல்முனை சாய்ந்தமருது பிரதேசவாதமானது எதனால் உறுவாகின்றது இதற்கு ஏதும் அரசியல் பின்னணிகள் இருக்கின்றதா?
ஹரிஸ்:- இந்த பிரச்சனையினை சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களுக்கிடையிலான பிரச்சனை எனக்கூறுவதானது தவறான விடயமாகும். ஏனென்றால் சாய்ந்தமருது கல்முனை என்பது ஒரே ஊரினைப் போன்ற மனோநிலையினை கொண்ட நட்பு ஊர்களாகும். எல்லா விடயங்களிலும் அவர்களுக்கிடைய ஒற்றுமைத்தன்மை காணப்படுக்கின்றது. சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை என்பது கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டமையின் விளைவாகவே நான் பார்க்கின்றேன். அந்த மக்கள் இனியாரிடமும் கெஞ்சதேவையிலை என நினைத்து அவர்களுக்கான தனியான நகர சபையினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். அதனை நான் தலைமைக்கும் எடுத்துக் கூறியுள்ளேன். ஆகவே பிரதேசவாதம் என்பது மக்களிடத்தில் இல்லை. அது தூண்டப்படுக்கின்றது. இதில் அரசியல் குளிர்கய நினைப்பதும் தவறான விடயமாகவே பார்க்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- தேசியத்திலே பேசப்படும் பாடசாலையாக இருக்கின்ற கல்முனை சாகிறா கல்லூரியின் அன்மைக்கால பெறுபேறுகள் பிந்தங்கிய நிலையில் இருக்கின்றமைக்கு ஏதும் அரசியல் புறக்காரணிகள் இருக்கின்றதா?
ஹரிஸ்:- கல்லூரியின் பெறுபேறுகளில் பின்னடைவும் குறிப்பிட்ட ஒருகாலத்தில் காணப்பட்டமை உண்மையான விடயமகும். அது சம்பந்தாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புத்திஜீவிகள் உட்பட பாடசலையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து கவலைப்பட்டவர்களாக இரவு பகலாக சிந்தித்து அதற்காக என்ன முடிவினை எடுக்க முடியுமோ அவைகள் எடுக்கப்பட்டு இன்று பாடசலையின் பழைய நிலைமைக்கு பாடசலையானது மாறிக்கொண்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் இபொழுது எங்கே இருக்கின்றார். கட்சிசார்பான கூட்டங்களுக்கோ அல்லது ஊடக அறிக்களுக்கோ ஏன் அவர் வருவதில்லை. வருக்கின்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி அவர் போட்டியிடுவாரா?
ஹரிஸ்:- உண்மையில் கட்சியின் தவிசாளர் கட்சியின் தவிசளாராக இருந்து கொண்டே இருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு கட்சியின் பலகூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிவதென்பது அவருடைய தீர்மானதும் கட்சி எடுக்கின்ற முடிவுமாகும்.
அஹமட் இர்ஸாட்:- கட்சியின் தலைமை கிழக்கு மாகாணத்தில் போட்டிடவுள்ளதாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தலைமை போட்டியிடுவதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஹரிஸ்:- கட்சியின் தலைமை கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறுகள் இருக்கின்றன. மீண்டும் தலைமை அம்பாறை மாவட்டத்தில் அல்லது வேறு மாவட்டங்களில் போட்டியிட வேண்டு எனக்கருதினால் அதனை வரவேற்றவனாக இருப்பேன் என்பதில் என்னிடம் மாற்றுகருத்தில்லை.
அஹமட் இர்ஸாட்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய தேர்தல் பிரச்சார ஆயுதமாக பயண்படுத்தப்பட்டு வந்த கரையோர மாவட்ட கோரிக்கையானது எந்த நிலையில் இருக்கின்றது?
ஹரிஸ்:-கரையோர மாவட்ட கோரிக்கையானது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்களின் தாகமுமாகும். அதனோடு முஸ்லிம்களின் தனி அலகுக்கான அத்திவாரமுமாகும். முக்கியமாக இது மறைந்த தலைவருடைய இலட்சிய கணவாகவும் இருக்கின்றது. இதனை அவருடைய மறைவுக்கு பின்பு வந்த அரசாங்கங்களில் நாங்கள் பல கோரிக்கைகளை வைத்தும் அவைகள் காலத்துக்காலம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இந்த கோரிக்கையை நாங்கள் ஜனாதிபதி தேர்தல் கலத்தில் மைத்திரிபலவிடம் சமர்பித்திருந்தோம் அவர் அதற்கு சாதகமான பதிலினை தந்திருந்தும். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் இஸ்தீர தன்மை காரணமாக தெற்கில் இன ரீதியான பிரச்சாரங்களை கரையோர மாவட்ட கோரிக்கையினை வைத்து மைத்திரிபால அரசாங்கத்துகெதிராக எழுப்பப்படும் என்ற சந்தேகத்தின் பெயரில் ஜனாதிபதியும் பிரதமரும் மெளனம் காக்கின்றனர். ஆனால் எங்களுடைய தாகமான கரையோர மாவட்ட கோரிக்கையினை நாங்கள் அரசியலில் இருக்கும் வரைக்கும் கைவிடப்போவதில்லை.
அஹமட் இர்ஸாட்:- வருக்கின்ற பொதுத்தேர்தலில் தனித்தா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தா போட்டியிட தீர்மானித்துள்ளீர்கள்?
ஹரிஸ்:- கட்சியானது இதுவரைக்கும் ஐக்கியதேசியக் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருக்கின்றது. தேர்தல் என்று வரும் பொழுது சில மாவட்டங்களில் தனித்தும் சில மாவட்டங்களில் கூட்டாகவும் போட்டியிட தீர்மானிதுள்ளோம். இதற்கான முடிவினை கட்சியின் உட்சபீடம் கடைசி நேரத்தில் தீர்மாணமாக எடுக்கும்.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் பசில் ராஜபக்ஸ்ஸவுடன் சேர்ந்து பொருளாதார அமைச்சில் இருக்கும் பொழுது பல அபிவிருத்திகளை செய்துள்ளீர்கள். அதில் அதிகமான முதல் கையாளப்படல் சம்பந்தமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுக்கின்றது. அவைகள் சம்பந்தமாக எதைக் கூற விரும்புகின்றிர்கள்?
ஹரிஸ்:- அபிவித்திகளை நான் செய்கின்ற பொழுது எனக்கெதிரான எதிர்மறையான கருத்துக்களையே என்னுடைய எதிரிகளினால் பரப்பப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அபிவிருத்தி செய்வதற்கு தகுதியற்றவர் எனக்கூறியவர்கள் ஈற்றிலே பொருளாதார அமைச்சினூடாக கிடைக்கப்பெற்ற பல கோடி ரூபாய்களை நான் கொள்ளையடித்து விட்டதாக கூறினார்கள். அவ்வாறு நான் செய்திருந்தால். இது சம்பந்தமாக என்மீது அவர்களால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதே போன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவிடம் என்னைப்பற்றிய முறைப்பாடுகளை அவர்களால் செய்யமுடியும். அதற்கெல்லாம் முகம் கொடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய தந்தையும், உங்களுடைய குடும்பமும் பெரும் தலைவர் அஸ்ரபுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர்கள் என்ற ரீதியிலும், காங்கிரசின் போராலியாக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக மாறி. கட்சிக்கு சவால்கள் விடுக்கப்படும்போதெல்லாம் கட்சியையும், தலைமையையும் பாதுகாத்து வருக்கின்ற உங்களுக்கு ஏன் இன்னும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை?
ஹரிஸ்:- இது பரவலாக அடிமட்ட போராலிகளும், புத்திஜீவிகளும் என்னிடம் கேற்கின்ற கேள்வியாகும். இது சம்பந்தமாக தனக்கு இதுவரைக்கும் அமைச்சுப்பதவி தரப்படாமைக்கு யார் காரணம் என அறியும் பொருட்டு ஊரில் உள்ள அனைத்து முக்கிய அமைப்புக்களுன் ஒன்று சேர்ந்த பொழுது கட்சியின் கட்டுகோப்பு பாதுக்கக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இதுவரைக்கும் அமைதி காத்து வருக்கின்றேன். இன்று வரைக்கும் எனக்கு அமைச்சுப் பதவியானது தலைமையினால் தரப்படாமையானது மிகவும் கவலை தரும் விடயமாகவே இருந்து வருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- சாய்ந்தமருதினை சேர்ந்த ஜெமீலுக்கு முதலமைச்சுப் பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் ஏன் ஹாபிஸ் நசீர் அஹமட் திடீரென உள்வாங்கப்பட்டு அவருக்கு கொடுக்கப்பட்டது?
ஹரிஸ்:- முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையினை பொறுப்பெடுத்த விடயமானது மிகவும் பிரச்சனைகள் நிறைந்த கொண்ட நிலைமையாக இருந்ததாகவே நான் கருத்துக்கின்றேன். அந்த நிலையில் அம்பாறை மாவடத்துக்கு முதலமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கட்சியின் தலைமை ஒரு முடிவுக்கு வந்து மட்டக்களப்பை சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியினை வழங்கியது. கட்சியின் தலையின் முடிவென்ற படியினால் அதற்கு கட்டுபட்டு நடக்கும் கடமை எல்லோருக்கும் இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- சாய்ந்தமருது மக்கள் தனியான நகர சபை கோரிக்கையினை முன்வைப்பது போல கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இருக்கின்ற மருதமுனை, மற்றும் அண்டியுள்ள தமிழ் பிரதேசங்களும் தனிஒயா பிரதேச சபைகளை கோறுவதாக அறியக்கிடைக்கின்றது இது சம்பந்தமாக நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
ஹரிஸ்:- ஆம் சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபை கோரிக்கைக்கு பிற்பாடு அன்மையில் கட்சியின் தலைமையையும் என்னையும் மருதமுனையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சந்தித்து தங்களுடைய பிரதேசத்துக்கும் தனியான உள்ளூரட்சி சபையினை பெற்றுத்தருமாறு வேண்டியவர்களாக அதற்கான கோரிகையினையும் எங்களிடம் கையளித்திருந்தார்கள். அதற்காக கட்சியின் தலைமை இக்கோரிகையினை முன்னெடுது செல்லும் முகமாக உபகுழு ஒன்றினை நியமித்துள்ளது. அதே நேரத்தி கல்முனைய அண்டியுள்ள தமிழ் பிரதேசத்தில் வாழும் மக்கள் இவ்வாறானதொரு கோரிக்கையினை எங்களிடம் முன்வைக்கவில்லை அனால் நான் அறிந்த மட்டில் கல்முனை மாநகர சபையானது தமிழ் பிரதேசங்களை புறக்கணிப்பதாகவும், தமிழ் மக்களை பழிவாங்குவதாகவும், சபையில் இருக்கின்ற உறுப்பினர்களும், அவர்களைச் சேரர்ந்த முகியஸ்தர்களும் அதற்கு தீர்வாக தங்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை தேவை என அறிக்கை விட்டிருந்துடன் அமைச்சர் அதாவுல்லா அதற்கான தீர்வினை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அறிக்கைகள் விட்டிருந்தனை அறியக்கிடைத்தது.
அஹமட் இர்ஸாட்:- ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் வேட்பாளரை கட்சியின் தலைமை தீர்மாணிக்கின்றது?
ஹரிஸ்:- கட்சியின் தலைமைதான் வேட்பாளரை தீர்மாணிக்க வேண்டும். மற்றும் அங்குள்ள மக்களின் ஆலோசனைகளையும் தலைமை உள்வாங்கத்தான் செயகின்றது.
அஹமட் இர்ஸாட்:- கடைசியாக நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்துக்கின்ற அம்பாறை மாவட்டத்து மக்களுக்கு வருக்கின்ற பொதுத்தேர்தலில் களமிறங்குவது பற்றி என்ன சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
ஹரிஸ்:- நான் வருக்கின்ற பொதுத்தேர்தலில் களமிறங்குவதா இல்லையா என்பதனை எனது மக்கள்தான் தீர்மாணிக்க வேண்டும். அவர்களின் முடிவின் படியே எனது எதிர்கால அரசியலினை முன்னெடுதுச் செல்வதா அல்லது இடைநிருத்துவதா என்ற முடிவினை எடுக்கவுள்ளேன். இப்போது இருக்கின்ற உறுதியற்ற நிலைமை என்பது மக்களுக்கும் எனக்கும் இடைவெளி இருக்கின்றது என சிலர் நினைக்கலாம். அனால் அம்பாறைமாவட்டத்தில் மிகவும் என்னை மக்கள் நேசிக்கின்றார்கள். அனுதாபத்துடன் பார்க்கின்றார்கள். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகக ஏதவது வழிமுறைகளை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள். அவ்வாறு மக்களுடன் ஒன்றாக கலந்தவன் என்ற ரீதியில் வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக அதன் இறுதித் தீர்மானத்தினை எனது மக்களின் கையிலே விட்டுள்ளேன்.