CATEGORY

கட்டுரை

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பில் NFGG யின் நிலைப்பாடு என்ன?

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் ஒரு விசேட சந்திப்பினை அண்மையில் மேற்கொண்டிருந்தது.   இந்தச் சந்திப்பு தொடர்பில் (NFGG)...

1972ம் ஆண்டைய குடியரசு யாப்பினை தயாரிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை ஏன் தேவைப்பட்டது?

ஓட்டமாவாடி அஹமட் இர்ஸாட்   அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் - 4.வை.எல்.எஸ்.ஹமீட் வரலாற்று பின்னணி-  சோல்பரி அரசியல் யாப்பு (Soulbury Constitution) ----------------------------------------------------   1946ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சோல்பரி யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யாப்பின் பிரகாரம் சட்டவாக்க சபை அதாவது பாராளுமன்றம் மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும் 01- ஆளுனர் நாயகம் (Governor General)  02- மேல் சபை (Senate) (30 அங்கத்தவர்கள் - இதில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப் படுபவர், 15 ஆளுனர் நாயகத்தினால் நியமிக்கப் படுபவர்) 03- பிரதி நிதிகள் சபை (House...

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள் !

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள்  “கலகொட அத்தே ஞானசார தேரர்”  இனவாதத்தின் மறு பெயர். முஸ்லிம் விரோத மொத்த வடிவம். BBS பொதுச் செயலாளர். இவர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தினார். குர்ஆனை தூசித்தார். பெருமானாரை பழித்தார். ஹலால்,...

இந்தியாவில் 16 விகிதம் முஸ்லிம்கள் இருந்தும் அரசியலில் பலமற்ற ஒரு சமூகமாக இருப்பதற்கு காரணம் இந்தியத்தேர்தல் முறையாகும் !

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    இந்தியாவில் 16 விகிதம் முஸ்லிம்கள் இருந்தும் அரசியலில் பலமற்ற ஒரு சமூகமாக இருப்பதற்கு காரணம் இந்தியத்தேர்தல் முறையாகும்.  வை.எல்.எஸ்.ஹமீட் அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம்-03.  யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் பாதிக்கப்பட்ட ஒரே சமூகம் முஸ்லிம்காளாகும்   1977ம் ஆண்டு வரை இந்த நாட்டில் தொகுதி முறைதேர்தல் இருந்து வந்தது நாம் அறிந்ததே. இத்தொகுதிமுறைத் தேர்தலின் விசேட அம்சம் 50 விகிதத்திற்கும்குறைவான வாக்குகளைப் பெற்று 50 விகிதத்திற்கும்அதிகமான ஆசனங்களைப் பெறுவதாகும்.   தொகுதி முறை தேர்தல் நடைமுறையில் இருந்த காலத்தைஎடுத்து நோக்கினால் ஒரு தனிக்கட்சி ( அது ஐக்கியதேசியக் கட்சியாக இருக்காலம் அல்லது சிறீலங்காசுதந்திரக் கட்சியாக இருக்கலாம்) அறுதிப் பெறும்பான்மை, மூன்றில் இரண்டு அல்லது ஆறில் ஐந்து பெறும்பான்மைகளைப் பெற்ற வரலாறு நம் நாட்டில்இருக்கின்றது. அச்சந்தர்ப்பங்களிலெல்லாம் இக்கட்சிகள்50 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையேபெற்றிருக்கின்றார்கள் 1977ம் ஆண்டுத் தேர்தலைத் தவிர. அத்தேர்தலில் 50.92 விகித வாக்குகளைப் பெற்று 5/6 விகிதஆசனங்களைப் பெற்றார்கள் . இதற்கு காரணம் ஒருதொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள்போட்டியிடுகின்ற பொழுது வெற்றி பெற்ற வேட்பாளரின்வாக்குகளை விட தோல்வியுற்ற வேட்பாளர்களின் கூட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை பெரும்பாலானசந்தர்ப்பங்களில் அதிகமாகும். சில நேரங்களில் சிலவிதிவிலக்குகள் இருந்த போதிலும் கூட. ஏனெனில் ஒருதொகுதியில் வெற்றி பெருகின்ற வேட்பாளர் ஒருவர்தோல்வியடைகின்ற வேட்பாளர்கள் பலர். அதே நேரம் இவ்வாறு 50 விகிதத்திற்கு குறைவானவாக்குகளைப் கொண்டு 50 விகிதத்திற்கு அதிகமானஆசனங்களைப் பெறுகின்ற பொழுது அவற்றில் சிறுபான்மைசமூகங்களுக்கு உரித்தான ஆசனங்களும் கணிசமானஅளவு அக்கட்சிகளினால் அள்ளிச் செல்லப்படுகின்றன. இதுஎவ்வாறு நடைபெறுக்கின்றது என தேர்தல் முறைகள்தொடர்பாக ஆராய்கின்ற போது பார்க்கலாம். இதுசிறுபான்மை சமூகங்கள் நில சார் சமூகங்களாக (Territorial  Community) இல்லாத இடங்களில்ஏற்படுகின்றது.அதனால்தான் இந்தியாவில் முஸ்லிம்கள் 16 விகிதம் வாழ்ந்தாலும் அரசியலில் பெறுமானமற்ற சமூகமாகவாழ்கின்றார்கள். இந்திய பராளுமன்றத்தில் 545 ஆசனங்கள்இருக்கின்றன.எனவே முஸ்லிம்களுக்கு ஆக குறைந்தது 85  ஆசனங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் அதில் ¼ பங்குகூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தியஅமைச்சரவையில் அத்தி பூத்தாற் போல் ஒரு அமைச்சரவைஅந்தஸ்துள்ள அமைச்சர் இடம்பெறுவார். பெரும்பாலானசந்தர்ப்பங்களில் ஒன்று அல்லது இரண்டு இராஜாங்க அல்லது பிரதி அமைச்சு பதவிகள்தான் கிடைக்கும். இதன்காரணமாக இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்தும் அதனைதட்டிக்கேட்க முடியாத சமூகமாக அவர்கள்வாழ்கின்றார்கள். உலகில் அதிகளவில் முஸ்லிம் சனத்தொகையினைகொண்ட நாடு இந்தோனேசியாவாகும். அண்ணளவாக 25கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இரண்டாவதுஅதிக  முஸ்லிம்  சனத்தொகையினை கொண்ட நாடுஇந்தியா. கிட்டத்தட்ட18 கோடி முஸ்லிம்கள்வாழ்கின்றார்கள். அதற்கு அடுத்ததாகத்தான் முஸ்லிம்நாடான பாக்கிஸ்தான் இருக்கின்றது. எனவே உலகில் இரண்டாவது முஸ்லிம் சனத்தொகையினைகொண்ட இந்தியாவில் அரசியல் அனாதைகளாக ஒருகபினெட் அமைச்சு பதவியினை பெறுவதற்குகூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அருகதை அற்றசமூகமாக முஸ்லிம்கள் வாழ்வதற்கு காரணம் இந்தியதேர்தல் முறையாகும். எனவே ஒரு ஜனநாயக நாட்டில்அரசியல் பலம் என்பது அந்த நாட்டின் தேர்தல்முறையில்தான் தங்கியிருக்கின்றது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் சுமார் 8 கோடிப்பேர் வாழ்கின்றார்கள். இவர்களில் ஒரு கோடிக்குமேற்பட்டவர்கள் முஸ்லிம்கள், ஆனால் உரிய காலம்தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து விடுவிக்கப்படுகின்றவிடயத்தில் கூட முஸ்லிம்களுக்கு சட்டத்திற்கு அப்பால்வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆனால்இதனை தட்டிக்கேட்க பலமான அரசியல் பிரதி நிதித்துவம்இல்லை.பாதிக்கப்பட்டவர்களின் மனைவிமார் அல்லதுபெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதுமட்டும்தான் அவர்களால் முடிந்தது. ஆயினும்பலனேதுமில்லை. ஒரு கோடி தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்குஇரண்டொரு சட்டசபை உறுப்பினர்கள் மாத்திரமே அங்குஇருக்கின்றார்கள். இதுதான் தொகுதிமுறை தேர்தலின்விந்தை.   சுருங்க கூறின் நில சார் சமூகமாக (Territorial Community) இல்லாமல் சிதறி வாழும் சமூகங்களை பொறுத்தவரைஅவர்களுடைய தேசிய விகிதாசாரம் எதுவாக இருந்தாலும்அவர்களால் உரிய பிரதி நிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளமுடியாது. இலங்கையை பொறுத்தவரையில் மூன்றில்இரண்டு பங்கு முஸ்லிம்கள் நில சார் சமூகமாக இல்லாமல்சிதறி வாழ்கின்ற சமூகமாகவே இருக்கின்றோம் என்பதனைஇங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தபின்னணியில்தான் இலங்கையில் தேர்தல் முறைமாற்றம்தொடர்பாகவும் சிந்திக வேண்டி இருக்கின்றது.   விகிதாசார தேர்தல் முறை....   தற்போது இருக்கின்ற வீதாசார முறை நூற்றுக்கு நூறுவிகிதம் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளுக்கேற்றஆசனங்களை வழங்குகின்றது என்று கூற முடியாவிட்டாலும்அண்ணளவாக அவ்விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களைவழங்குகின்றது எனலாம். அதாவது 50 விகிதமானவாக்குகளை தேசிய ரீதியாக எந்தவொரு தனிக் கட்சியும்பெறறுவது நடமுறைச் சாத்தியமில்லை என்பதனால்எந்தவொரு கட்சியும் தனித்து 50விகித ஆசனங்களைபெறுவதில்லை. எனவே ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மைகட்சிகளினதும், சிறு கட்சிகளினதும் தயவு தேவை. இங்குதான் சிறுபான்மைகளின் பலம் சிறுபான்மைகட்சிகளினூடாக வெளிப்படுகின்றது. சிறுபான்மை கட்சிகள்அப்பலத்தினை சரியான முறையில் பாவித்தார்களா? என்பதுவேறு ஒரு தலைப்பின் கீழ் ஆராயப்பட வேண்டியவிடயமாகும். அது நாம் தெரிவு செய்கின்றதலைமைதுவங்களினதும், பிரதி நிதித்துவங்களினதும்செயற்பாட்டில் தங்கியுள்ளது.  ஆனால் இன்றைய தேர்தல்முறைமையின் கீழ் சிறுபான்மையின் தயவுடன்தான்எந்தவொரு கட்சியும்ஆட்சியமைக்க முடியும். அவ்வாட்சியை தக்க வைக்கவும்முடியும் என்பதுதான் யதார்த்தமாகும்.   எனவே சுருங்க கூறின் ஜனாதிபதி தேர்தல் முறைமையின்கீழ் எவ்வாறு முஸ்லிம்கள் ஆட்சியாளர்களை தெரிவுசெய்வதில் பலம்பொருந்திய சமூகமாக இருக்கின்றார்களோஅதே போன்றுதான் பாராளுமன்ற ஆட்சியினையும் தெரிவுசெய்வதில் இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அரசியல் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டமைஅல்லது சமூக நன்மைகளாக பாவிக்கப்பட்டமை ( இங்குவராலாறு விபரிக்கப்பட வேண்டும் தெளிவுக்காக). -------------------------------------------------- மறைந்த தலைவர் எவ்வாறு 1989ம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் முறைமை மூலம் முஸ்லிம்களுகு கிடைத்த அரசியல்பலத்தினை பாவித்து எவ்வாறு வெட்டுப்புள்ளி திட்டத்தினைகுறைத்தாரோ அல்லது இல்லாமல் செய்தாரோ (மாகாணமற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறைமைகளில்) அதேபோன்று பொதுத்தேர்தல் முறைமை மூலம் முஸ்லிம்களுக்குகிடைத்த அரசியல் பலத்தை 17 வருட ஐக்கிய தேசியகட்சியின் ஆட்சியினை மாற்றுகின்ற விடையத்தில் 1994ம்ஆண்டு பாவித்தாரோ, அதே போன்று இந்த நாட்டுமுஸ்லிம்களின் அரசியல் இருப்பையே பாதுகாகின்றவிடையத்தில் இப்பலம் 2004ம் ஆண்டு பாவிக்கப்பட்டது.   அதாவது 2001ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கதலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெளியேற்றத்தின் மூலம்வீழ்த்தப்பட்டது நாம் அறிந்த விடயமாகும். அப்பொழுதான்இந்த நாட்டில் சிறுபான்மையில் தங்கி ஆட்சிநடாத்துவதற்கு காரணமான பொதுத்தேர்தல் முறைமைமாற்றப்பட வேண்டும்; என்ற எண்ணக்கரு இந்த நாட்டின்ஆட்சியாளர்கள் மத்தியில் பலமாக வேறூன்றியது. சிறுபான்மைகள் நினைத்தால் ஆட்சியினைஉருவாக்குவதற்கும் சிறுபான்மைகள் நினைத்தால்ஆட்சியினை வீழ்த்துவதற்கும் வழிசமைக்கின்ற ஒரு தேர்தல்முறை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒருநாட்டில் எவ்வாறு தொடர அனுமதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் சிறுபான்மைகள் நினைத்த மாத்திரத்தில்கவிழ்க்க கூடிய ஒரு ஆட்சி முறையின் நிச்சயமற்றதன்மையின் கீழ் ஸ்திரமான அரசினை நிறுவி நாட்டைஎவ்வாறு அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்என்ற கேள்விகள் அன்று எழுந்தன. நமது பாதுகாப்பிற்காக நமது கைகளில் பலமானஆயுதம் தரப்படுகின்ற பொழுது அதை மிகக் கவனமாகநம்மைபாதுகாக்க மாற்று வழியில்லாத இக்கட்டான சூழ்நிலையில் மாத்திரமே பாவிக்க வேண்டும். அதை விடுத்துபட்டதற்கும், தொட்டதற்கும் அதனைப் பாவிக்க முற்பட்டால்அவ்வாயுதத்தை பறித்தெடுக்க சக்தியுள்ளவர்கள்அனைவரும் ஒன்றிணைவர்; என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது அரசியல் பலத்தை ஆட்சியை உருவாக்க, தக்கவைக்க பயன்படுத்துவது என்பதும் ஆட்சியை கவிழ்க்கபயன்படுத்துவது என்பதும் இரு வெவ்வேறான தாக்கங்களைஉருவாக்க கூடியவை என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும். அன்று ஆட்சியினை கவிழ்ப்பதற்கு இருந்த வெளிப்படைகாரணம் சந்திரிகா அம்மையார் றவூப் ஹக்கீமை விடபேரியல் அஸ்ரஃப் அவர்களுக்கு முக்கியதுவம் கொடுத்தார்என்பதாகும். அதற்கு கொடுக்கப்பட்ட வியாக்கியானம்சந்திரிக்கா அம்மையார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினைஅழிக்க முற்படுகின்றார். எனவே கட்சியினை காப்பாற்றவேண்டும் என்பதாகும். ஆட்சியில் இருக்கும் தலைவர்கள்சிறுபான்மை கட்சிகளை அழிக்க முடியும் என்றால் இந்தநாட்டில் சிறுபான்மை கட்சிகளேஇருக்காது.வாக்களிக்கின்றவர்கள் மக்களே தவிர கட்சிதலைவர்கள் அல்ல. யதார்த்தில் அன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்பட்டநெருக்கமான உறவும் அரசியல் தொடர்பான அனுபவமுதிர்ச்சி இன்மையும்தான் அந்த ஆட்சி கவிழ்ப்பிற்குகொண்டு சென்றது என்பதுதான் உண்மையாகும். அன்றுநாம் விட்ட அந்த தவறின் தாக்கம் இன்று வரை புதியதேர்தல் சீர்திருத்த விடையத்திலும் தொடர்கின்றதுஎன்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கையும் முஸ்லிம்களும்....   இந்த பின்னணியில் 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிஆட்சியமைத்தது. விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தஒப்பந்தத்தை செய்தது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தகாலத்திலும் விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதான்கொடுமைகளை நிறுத்த வில்லை. இந்த நாட்டில் எல்லா சமூகங்கலளும் யுத்த காலத்தில்பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்தகாலத்திலும் பாதிக்கப்பட்ட ஒரே சமூகம்முஸ்லிம்காளாகும்.இந்த நிலையில் சிறீலங்காமுஸ்லிம் காங்கிரசினால் இருந்த அரசாங்கம் பதவிகவிழ்க்கப்பட்டு ஐக்க்ய தேசியக் கட்சியினை நிறுவியதற்குகைமாறாக விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதுகட்டவிழ்த்த அட்டகாசங்களைக் கண்டும் ஐக்கிய தேசியக்கட்சி வாளாவிருந்தது.   வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம் வாலிபர்களைகொலை செய்து அவர்களின் ஜனாசாக்களை அவர்களதுபெற்றோரின் கண்முன்னாலேயே விடுதலைப் புலிகள் தீயிட்டுகொழுத்திய பொழுது படையினர் கையாலாகாத் தனமாகநின்றிருந்தார்கள்., மூதூரில் முஸ்லிம் காங்கிரசின்உயர்பீடகூட்டத்தினை விடுதலைப் புலிகளின்அட்டகாசத்தினால் இடை நடுவில் விட்டு தப்பினோம், பிழைத்தோம் என நாம் ஓடிய பொழுது படையினர் கையறுநிலையில் நின்றிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரசினால்கொண்டுவரப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு நடந்தஅநியாயங்களினால் முஸ்லிம்கள் வெதும்பிப் புண்ணாகிகொண்டிருந்த போதுதான் 2004ம் ஆண்டு பாராளுமன்றம்கலைக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லதுஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதா?   2004ம் ஆண்டு பாராளுமன்றம் கலைந்ததும் சிறீலங்காமுச்லிம் காங்கிரசின் உயர் பீடம் (Politburo) கூடியது.அக்கூட்டத்தில் புத்தளம் பாயிஸ் கலந்துகொண்டிருக்கவில்லை. நானுட்பட அதில் கலந்து கொண்டஅத்தனை பேரும் ஐகிய தேசியக் கட்சியுடன் சேர்ந்துபோட்டியிடக் கூடாது, தனித்தே போட்டியிட வேண்டும்என்று வாதாடினோம். ஒருவர் கூட மாற்றுகருத்தினைகொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் கட்சிதலைவருக்கு வழமை போன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன்சேர்ந்து போட்டியிட வேண்டும் என்றே விருப்பம். எனவேஉயர் பீடத்திற்கு (Politburo) முடிவெடுக்கும்அதிகாரமில்லை.இன்னும் இரண்டு நாட்களில் அதியுயர்பீடம் (HIGH COMMAND) கூடி முடிவெடுக்கும் என்றார்.   நாட்கள் இரண்டு கழிந்தன. அன்றிரவு 9.30 மணிக்குஅல்லது10.00 மணிக்கு அதியுயர் பீடக் (HIGH COMMAND) கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில்தனித்து போட்டியிட வேண்டும் என்று  வாதாடவேண்டுமென்று அதற்கான நியாயங்களை எல்லாம் மனதில்அசை போட்டுக்கொண்டு கூட்டத்திற்கு செல்லதயாராகிக்கொண்டிருந்த பொழுது இரவு ஒன்பது மணிக்குதொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள்ஒரு கூட்டத்தில் பேசும் போது தேர்தல் முறைமாற்றியமைப்பதற்காக அரசியல் அமைப்பிற்கு திருத்தம்கொண்டு வரப்பட வேண்டும், மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மையுடனோ, இல்லாமலோ (The constitution must be amended with or without...

துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது சுபைருக்கு தெரியுமோ தெரியாது !

காமில் முஹம்மத்   சுபைர் சேர் ரொம்ப ரொம்ப துள்ளுகிறார், துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது சுபைர் சேருக்கு தெரியுமோ தெரியாது. பல்கலைக்கழகத்திலே செக்கியூரிட்டி காட்டாக இருந்த சுபைர் சேருக்கு இதுவெல்லாம் எப்படித்தெரியப்போகுது....

முஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்      அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -01 பாகம் ஒன்றில்அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்கள் மீது நேரடியாகதாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்கள்தரப்பட்டிருந்தன.இத்தலைப்புக்களை முஸ்லிம்களின்கோணத்தில் இருந்து ஆராய்கின்ற பொழுது மூன்று பிரதானஅம்சங்களை அடையாளம் காணலாம். 01.ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒழித்து பாராளுமன்றஅட்சி முறையினை கொண்டுவருதல். 02.தேர்தல் சீர்திருத்தம் 03.அதிகார பரவலாக்கள். இம் மூன்று தலைப்புக்களும் விரிவாக ஆராயப்படல்வேண்டும். ஏனெனில் இம்மூன்று தலைப்புக்களும் முஸ்லிம்களின் எதிர்காலத்தினை பதம்பார்க்க கூடியதாகஇருகின்றது. இம்மூன்றுதலைப்புக்களையும் விரிவாகஆராயும் முன் அவை முஸ்லிம் சமூகத்தின் மீது செலுத்தக்கூடிய தாக்கத்தின் வீச்சை சுருக்கமாக பார்த்த பின் மீண்டும்விரிவாக ஆராயலாம். அந்தவகையிலே ஜனாதிபதி ஆட்சி முறைபற்றி பார்ப்போமானால்..இந்த நாட்டில் ஜனாதிபதியினைதீர்மானிப்பதிலும் அவரை மாற்றுவதிலும் சிறுபான்மைசமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கினை கடந்ததேர்தலில் நடைமுறையில் கண்டோம். ஜனாதிபதி ஆட்சிமுறைமை நீக்கப்படுமாயின் இந்தநாட்டின் ஆட்சியாளரைதெரிவு செய்வதில் நமக்குஇருக்கின்ற பங்கு இல்லாமல்போகின்றது.   இரண்டாவதாக தேர்தல்சீர்திருத்தத்தினைபார்க்கின்றபொழுது... புதிய தேர்தல்முறையில் ஒருதனிக்கட்சி சுயமாக 50 வீதத்திற்கு அதிகமானஆசனங்களை பெற்று தனியாக ஆட்சி அமைக்கின்றவிதத்தில் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. அதில்அவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சியை தீர்மானிப்பதில்அல்லது ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்றநிலைமையில் இருந்து சிறுபான்மை சமூகங்கள்,குறிப்பாகமுஸ்லிம் சமூகமானது தனது நிலையினைஇழக்கப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்தியஆட்சியில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதுவிதபங்கும்இருக்கப் போவதில்லை. மூன்றாவதாக அதிகாரப்பகிர்வினைபார்க்குமிடத்து.....இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரத்தின் கணிசமான பகுதியினை எடுத்துமாகாணங்களுக்கு வழங்கப்போகின்றார்கள். இதனை மறுவார்த்தையில் கூறுவதாயின் இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரமையத்தின் வீரியம் குறைக்கப்பட்டு மேலும் பலமானஒன்பது அதிகார மையங்கள் உருவாக்கப்பட போகின்றன. (இன்று இருக்கின்ற மாகாண சபைகள் வெறும்பெயரளவிலேயே இயங்குகின்றன என்பது கவணத்தில்கொள்க.) அவ்வாறு உருவாக்கப்படுகின்ற ஒன்பது அதிகாரமையங்களுள் கிழக்கினை தவிர  ஏனைய பிரதேசங்களில்வாழுகின்ற முஸ்லிம்கள் அரசியல் பலமுள்ள ஒரு சமூகமாகஇல்லை என்பது தெளிவான விடயமாகும். அவ்வாறான சூழ்நிலையில் அம் மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின்நிலைமை கஸ்டமானதாக மாறப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்தியிலும், மாகாணக்களிலும்ஒரு செல்லாக்காசான சமூகமாக மாறுவதற்கானவாய்புஇருக்கின்றது. இந்நிலையில் !!.முஸ்லிம்இளைஞனே! தூங்குவதற்கு உனக்கெங்கேநேரமிருக்கின்றது? நாம் செல்ல வேண்டிய பாதை பரந்துவிரிந்து கிடக்கின்றது.!! என்ற அல்லாமா இக்பாலின்கவிதையினை நினைவு கூர்ந்தவர்களாகநாம்விழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஆபத்தான நிலையில் இருந்து நம்மைகாத்துக்கொள்ள நம்மால் முடிந்த ஜனநாயகவரம்பிற்குட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டியிருக்கின்றது. ஓவ்வொரு முஸ்லிம் சகோதரனும், சகோதரியும் இது எனது பிரச்சனை என்ற உணர்வைஉள்வாங்கி செயற்பட்டாக வேண்டும். தவறுவோமாயின்நமது எதிர்காலம் மாதிரமல்லாமல் நமது பலதலைமுறைகளின் எதிர்காலமும்கேளிவிக்குறியாக்கப்படலாம். நாம் இரண்டாம் தரபிரஜைகளாக மாற முடியாது. இந்த நாடு நமக்கும் உரியது.இந்தநாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம் நம்மைபலிக்காடாவாக்க முன்னர் நாம் விழித்துக்கொள்வோம்.ஆகவே இவைகளின் ஆழ, அகலங்களை தெளிவாக புரிந்துகொள்வதற்காக அவற்றை விரிவாக ஆராய்வோம். ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலம் சென்றமதிப்பிற்குறிய சோபித்த தேரரின் தலைமையில் இயங்கியஅமைப்பானது பொது வேட்பாளர் தேடும் முயற்சியில்இறக்கியதன் முக்கிய நோக்கம் ஜனாதிபதி ஆட்சிமுறைமையினை ஒழித்து பாராளுமன்ற ஆட்சிமுறைமையினை கொண்டு வருவதாகும். இதற்கான காரணம்ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரமானதுசர்வதிகாரத்திற்கு இட்டுச் செல்கின்றது என்பதாகும். ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரத்தினைசீர்திருத்துவதன் மூலம் நியாயமான அதிகாரத்தினைகொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சி முறைமையினை கொண்டுவருவதினை மாற்றுத் தீர்வாக முன்வைத்திருக்கலாம். ஆனால் இது தொடர்பாக எவரும் பேசவில்லை. பொதுவேட்பாளர் அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்களுக்குமுன்பாகவே இவ்விடயம் தொடர்பாக குறித்த தேரர்தலைமையிலான  அமைப்புடனும் ஐக்கிய தேசியக்கட்சியுடனும் முஸ்லிம் கட்சிகள் பேச வேண்டும் என்றஅடிப்படையில் நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள்கைகூடவில்லை என்பது துரதிஸ்ட்டவசமான விடயமாகும். அதுதொடர்பாக நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை.இந்தநிலையில் எதிரணியினர் ஜனாதிபதி ஆட்சி ஒழிப்புத்தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல்மேடைகளிலும் பகிரங்க வாக்குறுதி வழங்கியநிலையில்அதனை கட்டயம் செய்ய வேண்டிய நிலையில்இன்றையஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். 19வது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின்அதிகாரங்களில் சில குறைவுகள் செய்யப்பட்டாலும்ஏற்கனவே குறிப்பிட்ட பகிரங்க வாக்குறுதிக்கமையஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்என்பதில்ஜனாதிபதி உட்பட பல தரப்புக்களிலிருந்தும்முனைப்புக்காட்டப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் முறைமையில் சிறுபான்மையின் பலம்... ஜனதிபதியின் அதிகாரம் நியாயமானசீர்திருத்தத்திற்குஉட்படுவதில் சிறுபான்மையினருக்குமுரண்பாடு இருக்கமுடியாது. ஆனால் சிறுபான்மையினருக்குஇந்த நாட்டின்ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்றஉரிமையைவிட்டுக் கொடுக்க முடியாது என்பதே சிறுபான்மைகளின் அடிப்படை நிலைப்பாடாகும். ஜனாதிபதி தேர்தல் முறைமையின் படி ஜனாதிபதியாகவருகின்றவர் 50விகிதத்திற்கு சற்று அதிகமானவாக்குகளைப் பெற வேண்டும். இந்தநாட்டில் சிங்களபெளத்தர்கள் 70 விகிதம் வாழ்கின்றார்கள். (இவர்களில்தேசிய விகிதாசாரத்தில்) 50 விகிதத்திற்குஅதிகமானோர்ஒரு பக்கம் சாய்வது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமானாலும்நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை. எனவேசிறுபான்மையினரின் தயவு இல்லாமல் ஒருவர்ஜனாதிபதியாக வர நினைக்க முடியாது. யுத்த வெற்றியின் அலையினை தவறாக புரிந்து கொண்டமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள்சிங்களபெளத்த மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுநிரந்தரமாக ஜனாதிபதியாக இருக்கலாம் எனததப்புக்கணக்கு போட்டார். சிங்களபெளத்தர்கள்பெரும்பான்மையாக அவருக்குதான்வாக்களித்தார்கள்.ஆயினும் சிறுபான்மையினரின் ஆதரவுஇல்லாமல் அவரால் ஜனாதிபதியாக முடியாது என்பதுநிரூபிக்கப்பட்டது. இதே ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கைக்கு சுதந்திரம்கிடைத்த பொழுது அறிமுகப்பட்டிருந்தால் பெரும்பாலும்SWRD.பண்டார நாயக்க தனிச்சிங்கள சட்டத்தினைகொண்டு வந்திருக்கமாட்டார். ஏனெனில் தமிழ்பேசும்மக்களின் வாக்குகள் அவருக்கு தேவைப்பட்டிருக்கும்.இந்தநாடும் முப்பது வருட யுத்தத்திற்குள்தள்ளப்பட்டிருக்காது. தனிச்சிங்கள சட்டத்தினை விடவும் மிக ஆபத்தானஒன்றுதான் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பில்அறிமுகப்படுத்தப்பட்ட 12 ½ விகிதாசார தேர்தல்வெட்டுபுள்ளியும், 5விகித ஏனைய தேர்தலுக்கானவெட்டுப்புள்ளியுமாகும். தேசியக் கட்சிகளில் முஸ்லிம் பிரதி நிதித்துவங்கள் பேசாமடந்தைகளாக இருந்த நிலைமை முஸ்லிம் வாலிபர்களை விரக்த்தியின் விளிம்பிற்குள் தள்ளி 80களின்நடுப்பகுதியில் அவர்களும் ஆயுத இயக்கங்களில் சேர்ந்ததுவரலாறு. இந்திய அமைச்சர்களான சிதம்பரமும்,பண்டாரியும் இலங்கையில் முஸ்லிம்கள் என்ற ஒருதனித்துவ சமூகம்இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.முஸ்லிம்களும் தமிழர்களே. தமிழர்களுக்குள் கோவிலுக்குசெல்கின்ற, தேவாலையத்திற்கு செல்கின்ற,பள்ளிவாயலுக்கு செல்கின்ற தமிழர்கள் இருகின்றார்கள்.மொத்தத்தில் உங்கள் வணக்கஸ்தளங்கள் வித்தியாசமேதவிர  நீங்களெல்லாம் தமிழர்களே என்று நமதுதனித்துவத்தினை அன்று இந்திய அரசு ஏற்க மறுத்தபொழுது அதனை வாய் மூடி மெளனியாக கேட்டுக்கொண்டுதிரும்பி வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இருந்த ஒருகாலத்தில்தான் எமது வாய்களுக்கு போடப்பட்ட பூட்டுக்கள்உடைதெறியப்படவேண்டும் என்றும் எமது கைகளுக்கும்கால்களுக்கும் போடப்பட்ட அடிமைச் சங்கிலிதகர்த்தெறியப்பட வேண்டும் என்ற கோசத்துடன் நமதுதனித்துவ பயணம் அன்று ஆரம்பித்தது. அதனால் தான் மறைந்த தலைவர் மர்ஹூம்எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் "முஸ்லிம் வாலிபர்கள் ஆயுதபோராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுத்தது சிறீலங்காமுஸ்லிம் காங்கிரசின் வருகை "என அடிக்கடி கூறினார்.இவ்வாறு ஒரு தனிக்கட்சி உருவாகி இருந்தாலும் அன்்றைய 12 ½ விகித வெட்டுப்புள்ளி 5விகிதமாக குறைக்கப்படாமல்இருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேதனித்துவ அரசியல் ஒருபோதும் சாத்தியப்பட்டிருக்காது. அதுபோலவே இன்று தேசிய தலைவர் பதவிக்குசிலர்ஆசைப்படுவதற்கு சந்தர்ப்பமே இருந்திருக்காது. ஜனாதிபதி தேர்தல் முறைமை என்று ஒன்று இல்லாமல்இருந்திருந்தால் 1989ம் ஆண்டு இதுசாத்தியப்பட்டிருக்காது. மறைந்த ஜனாதிபதி பிரேமதாசமுஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்காகவே மறைந்ததலைவருடைய கோறிக்கையினை ஏற்று 12 ½ விகிதத்தினை5 விகிதமாக்கினார். இதைத்தான் பேரம் பேசும்சக்தி என்கின்றோம். துரதிஸ்ட்டவசாமக பேரம் சக்திக்குவேறு அர்த்தம் தலைவரின் மறைவிற்கு பின்உள்வாங்கப்பட்டது வேறு விடயமாகும். இந்த பின்னணியில்தான் ஜனாதிபதி எனும் பதவிஇருக்கும்வரை ஜனாதிபதியானவர் சிறுபான்மைகளைஅரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில்இருக்கின்றார். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸ்சகற்றுக்கொண்ட பாடத்தின் பின்னணியில் எதிர்காலத்தில் இன்னும் கவனமாக இருப்பார்கள். இந்நிலையில்இச்சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பினூடாகஇல்லாமலாக்கப்பட போகின்றது. ஆகவே இதை தடுத்துநிறுத்த நாங்கள் செய்ய போவது என்ன? ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒப்பந்தத்தினூடாக இதற்குஒருதீர்வு காண்பதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு சந்தர்ப்பம்இருந்தது. மறு வார்த்தையில் கூறுவதாயின்பேரம்பேசக்கூடிய சூழ் நிலை இருந்தது. ஏதோபேசினார்கள், தனக்காக பேரம் பேசினார்கள்.சமூகத்திற்காக பேரம் பேச தவறிவிட்டார்கள்.அதனால்தான்நாங்கள் இன்று அங்கலாய்க்கின்றோம். பரவாயில்லை. இப்பொழுதாவது நம்மால் முடிந்ததைசெய்வோம். பஸ் போன பின் கை காட்ட வேண்டாம்.. 3ம் பாகம் தொடரும்.. குறிப்பு-முதலாம் பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள்கீழுள்ள வலைத்தளங்களின் லிங்கினை கிளிக் செய்வதன்மூலம் பார்வை இடலாம். லங்காஃபுறன் நியூஸ்:- www.lankafrontnews.com/?p=24152

தமிழர் தாயகம் என்று கூறிவந்த தமிழ்த்தலைமையினர் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசியல் தீர்வொன்றை எடுத்தியம்பத் தவறிவிட்டனர் !

புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னரேயே அரசியல் ரீதியான தாக்கம் ஒன்றைத் தமிழ்ச்சமூகம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிட்டது .  இலங்கை அரசியல் எனும் போது அதில் முஸ்லிம்களின் பங்கு மிகையானது. பிரித்தானிய காலனித்திலிருந்து விடுபட்ட இலங்கைக்கு...

முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா ? , புளியும் மீனும் ஒன்றிணைந்து சுவை தருமா ?

முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா..?? ஒரு ஊரில் பல மீன் வியாபாரிகள் உள்ளனர்.அந்த ஊரில் மீன் கறியை சுவையாக்கக் கூடிய பொருட்களான உப்பு,புளி போன்றவற்றை பெற்றுக்கொள்வது கடினமாகும்.இதனால் தங்களது மீன்களை விற்கும் பொருட்டு அக் குறித்த...

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டமையும் , கற்றுத்தந்த பாடங்களும் !

  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சாதாரண கைதிகள் போன்று சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுசென்றபோது அவரது தந்தை மட்டுமல்ல அதனை கண்டுகளித்த பலரது...

அரசியல் அமைப்பு மாற்றச் சட்டம் பாகம் -01 வை.எல்.எஸ்.ஹமீட் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    புதிதாக கொண்டுவரப்படவுள்ள  அரசியல் அமைப்புச்சட்டம் சம்பந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாலர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மக்களை விழிப்பூட்டும் அடிப்படையில் தொடர் பாகங்களாக எழுதும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் சம்பந்தமான கட்டுரை...   அரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் இன்று நாட்டின் பிரதான பேசும் பொருளாக மாறிவருக்கின்றது.பொதுமக்களிடத்திலிருந்து இது தொடர்பான கருத்துக்களை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக 24பேர் கொண்ட குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் சமூதாயம் போதியளவு விளிப்படைந்திருக்கின்றதா? மாற்றப்பட இருக்கின்ற அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் மீது நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் எவை? அவைகள் எந்தவிதத்தில் இடம் பெற்றால் முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற விடயங்களில் தெளிவுகள், ஒருமித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ளனவா?  இன்று சில முஸ்லிம் அரசியல் கட்சிகள்  எவராவது வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தால் அவர்களை சந்தித்து முஸ்லிம்களின் நலன்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக்கூறியதாக அறிக்கைகளை விடுகின்றார்கள். அவர்கள் கூறிய அந்த நலன்கள் என்ன? அவைகளைப்பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடுவதில்லை. காரணம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நாங்களும் பேசியிருக்கின்றோம் என்று கூற வேண்டும் என்பதற்காக அறிக்கை விடுகின்றார்கள்.  இன்னும் சில முஸ்லிம் கட்சிகள் வடகிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடன் உடன்பட தயார் என வெளிநாட்டு பிரமுகர்களிடம்கூறியதாகவும் அறிக்கை விடுக்கின்றனர். வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களுக்கு சாதகமானதா? அல்லது பாதகமானதா? என முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தினை கோரினார்களா? அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்ற சாதக பாதக விடயங்களைப்பற்றி சிந்தித்தார்களா? அல்லது முஸ்லிம் சமூகமாவது சிந்திக்கதயராக இருக்கின்றதா? என்ற கேள்விகள் ஒரு புறம்இருக்க மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த வடகிழக்கைப்பற்றியும் சமஸ்டியைப்பற்றியும் அதிகமாக பேசுகின்றார்கள். சில விடயங்களில் மறைமுகமாக இவர்களுக்குஉத்தரவாதங்கள் கிடைத்திருப்பதாகவும் ஊகங்கள் நிலவுக்கின்றன.  அடுத்த புறத்தில் இந்தியா என்ற வல்லரசும் மேற்கத்திய அரசுகளும் தமிழ் தரப்பிற்கு பக்கபலமாக இருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் இந்த சக்திகளுக்குபின்னால் மிக வேகமாக செயற்பட்டுகொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்துக்கள் மிக வேகமாக உலாவுகின்றது. இவ்வாறு அரசியல் அமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரபரவலாக்கல் போன்ற விடயங்களில் பல சக்திகள் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் சிலர் ஆங்காங்கே அக்கறைகளை காட்டினாலும் பாரியளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிர்புணர்வு ஏற்படவில்லை. கட்சிகளுக்கு வாக்களித்ததோடு தமது பணி முடிவடைந்து விட்டது; மிகுதியை அவர்கள் பார்துக்கொள்வார்கள் என்பதுவே பலரது நிலைப்பாடாகஇருக்கின்றது. தாம் வாகக்ளித்து தெரிவு செய்தவர்களில் எத்தனை பேர் வரவிருக்கின்ற அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரபரவலக்கல் போன்ற விடயங்களில் ஆழமான அறிவினைஅல்லது அகலமான தெளிவினை கொண்டிருகின்றார்கள்? அல்லது இவ்விடயங்கள் சமபந்தமாக பாராளுமன்றத்தில் எத்தனை பேர்கள் உரத்து குரல் கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்? போன்ற விடயங்களை தெரிவுசெய்கின்ற பொழுது முஸ்லிம் சமூகம் சிந்திக்க தவறிவிடுகின்றது. இப்போதாவது கண்விழித்து அவர்களுக்கு பின்னால் உந்துசக்தியாக இருந்து தமது நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் படியாக உறுதி செய்வதற்கு தயாரா? என்பது தொடர்பாக எத்தனை பேர்கள் சிந்திக்கின்றோம்? அரசியல்கட்சிகள் சமூகத்தினை புறக்கணித்து யார் யாரையோ திருப்திப்படுத்த முடிவுகளை எடுத்து அம் முடிவினை சமூகத்திற்கான சிறந்த முடிவென்று காட்ட முற்படுக்கின்ற பொழுது அம்முடிவுகள் உண்மையாகவே சிறந்ததா? அல்லது பாதகமானதா? என்பதைப்பற்றி சிந்திப்பதற்கும் அதுதொடர்பான தமது நிலைப்பட்டினை வெளிப்படுத்தி கட்சிகள் பிழையான முடிவுகளை எடுக்கின்ற பொழுதுஅவற்றினை மாற்றச் செய்வதற்கும் அல்லது கட்சிகள் பெயருக்கு சில உணர்ச்சி பேச்சுக்களை பேசி தங்கள் தொண்டர்களுக்கு முகநூல்களில் புகழ்பாட உற்சாகம் கொடுத்துவிட்டு அரசியல் அமைப்பு மாற்றத்தினால் என்னென்ன விடயங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு கூட சக்தியில்லாமல் இருக்கின்ற பொழுது அவர்களைதட்டியெழுப்பி இவைகள்தான் முஸ்லிம் சமூதாயத்தின்நிலைப்பாடு இதனை போய் கூறுங்கள் என அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் சமூதாயத்திற்கு மத்தியில் தெளிவுகளையும் ஒருமித்த கருத்துக்களையும் ஏற்படுத்த ஏதாவது முயற்சிகள் நடக்கின்றனவா? என்பவைகள்தான் இன்று எம்முன்னால் உள்ள கேள்விகளாகும். எனவேதான் இத்தொடர் கட்டுரை மூலமாகஉத்தேசிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றப்படவிருக்கின்ற பிரதான அம்சங்கள் என்ன? அவை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் எவ்வகையான தாகத்தினை ஏற்படுதப்போகின்றது? அத்தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள எவ்வகையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம்? போன்ற விடயங்களை சமூகத்தின் முன்முன்வைக  முயற்சிக்கப்படுகிறது.  இதற்கான பிரதான காரணம் இந்த அரசியல் அமைப்பு சட்டமானது முஸ்லிம்களை பொறுத்தவரையில் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதாகும். இதில் நமக்குபாதிப்புக்கள் ஏற்பட்டால் அப்பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய நூறு ஆண்டுகள் கூட போகலாம். அதே நேரம் எமதுஅரசியலைப்  பொறுத்தவரையில் அரசியல் அமைப்பு மாற்றத்தினை சிந்திக்கக் கூடிய போதுமான அளவு பிரதிநிதித்துவங்கள் இல்லாமை ஒரு புறமிருக்க ஓரளவு சிந்திக்கக்கூடிய பிரதி நிதித்துவங்கள் வேறு சக்திகளின் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டு தமது எஜமான்களின் நிலைப்பட்டை தமது சமூகத்தின் நிலைப்பாடாக காட்டி சமூதயத்தினை திசை திருப்பக்கூடிய நிலைமையகும். எனவே உறுதியான சமூக நிலைப்பட்டினை மிகவிரைவாக கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம்இருக்கின்றது. அதற்கான ஒரு பங்களிப்பாக இத்தொடர்கட்டுரை இடம்பெறுகின்றது.  அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படயிருக்கின்ற பிரதானாஅம்சங்கள்  ----------------------------------------------------- Nature of the State -நாட்டின் தன்மை,    Form...

அண்மைய செய்திகள்