காமில் முஹம்மத்
சுபைர் சேர் ரொம்ப ரொம்ப துள்ளுகிறார், துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்பது சுபைர் சேருக்கு தெரியுமோ தெரியாது. பல்கலைக்கழகத்திலே செக்கியூரிட்டி காட்டாக இருந்த சுபைர் சேருக்கு இதுவெல்லாம் எப்படித்தெரியப்போகுது. ஏற்கனவே துள்ளிய இரண்டு மாடுகள் முன்னாள் எம் பி என்ற குறியுடன் பொதி சுமந்து கொண்டிருப்பது சுபைர் சேருக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் அரசியலில் சொந்த முகவரியில்லாது பிறர் வீட்டு விலாசத்தில் வளர்ந்தவர் தான் இந்த சுபைர். அரசியலில் அரிச்சுவடி தெரியாத ஏறாவூரைச்சேர்ந்த இந்த எம் எஸ் சுபைரை அரசியலுக்குள் கொண்டுவந்து மனிதனாக்கியது அவரது வாயால் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட அமீரலி சேர் தான்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் அவரை உள் வாங்கி தேசிய அமைப்பாளர் என்ற அந்தஸ்தையும் வழங்கி, மாகாண சபை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுத்தது யார்? அமீரலியும் ரிசாட்டும் இல்லாவிட்டால் ஏறாவூரில் நூறு வோட்டுத்தானும் இல்லாத இந்த சுபைர் அரசியலில் இப்படி ஆட்டம் போடுவாரா? கிழக்கு மாகாண சபையில் நஜீப் ஏ மஜீத் முதலைமைச்சராக இருந்த போது அந்த அப்பாவியை என்ன பாடு படுத்தினார், மாகாண சபை அமர்வொன்றில் சற்றுக்கண்ணயர்ந்த முதல்வரை தனது மொபைல் போனில் படம் எடுத்து பத்திரிகைக்கு கொடுத்து அவமானப்படுத்தியவர் தானே இவர். சமூகத்தைப்பற்றி கதைப்பதற்கு இவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை.
ஹக்கீமுக்கே தண்ணி காட்டிய ஹாபீஸ் நசீர் அஹமட்டுடன் மோதி மூக்குடை பட்டார். றிசாட் இவருக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொடுக்கவில்லை என்ற அங்கலாய்ப்பில் ஏதேதோ பிதற்றி வருகிறார். நல்லாட்சி அரசாங்கத்தில் ரிசாட் ’50 மில்லியன்’ பெற்றதாக இவர் கூறுகிறார். அதுவும் முதுகெலும்பில்லாத இவர் கட்டாரில் வைத்து இந்த பொய்க் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். மகிந்தவிடமிருந்து வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மைத்திரியுடன் இணைந்த போது இவருந்தானே கட்சியிலிருந்தார்.
அப்படியானால் ஏறாவூரிலிருக்கும் இவரது இரண்டு வீடுகளும் கொழும்பு கிராண்ட்பாஸில் வாங்கியிருக்கும் இவரின் இன்னொரு வீடும் இந்தப்பணத்திலா பெறப்பட்டது? இதனை சுபைர் தெளிவு படுத்த வேண்டும் அல்லது மாகாண அமைச்சராக இருந்த போது தொழில் தருவதாக ஏமாற்றி வாங்கிய பணமா இது? ஹபீஸ் நஸீரிடம் பத்துப்பேருக்கு வேலை கேட்டு போய் அவர் மறுத்ததால் இப்போது ஹாபீஸையும் இல்லாத பொல்லாத கதைகள் வைத்து திட்டுகின்றார். அடுத்த மாகாண சபைத்தேர்தலில் தனது வாக்குகளை எண்ணும்போது தனது உண்மையான மக்கள் செல்வாக்கை சுபைர் அறிந்து கொள்வார்.