CATEGORY

விளையாட்டு

இந்திய நடுவர்களின் பிழையான தீர்மானங்களே இலங்கையை தோல்வியடையச் செய்தது : தயாசிறி !

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவ நேரிட்டது என  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று...

நான் முழுமையான உடல் தகுதியுடன் உள்ளேன்: முகமது சமி

    இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்சனைகளில் ஒன்று, தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. சிறப்பாக பந்து வீசி வந்த முகமது சமி காயம் காரணமாக பல மாதமாக அணியில் இடம்பெறாமல் போனது இந்திய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் வீரர்களுக்கு வரவேற்பு !

ஹாசிப் யாஸீன்   இந்தியா குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி அசாம்விமான நிலையத்திலிருந்து விசேட  விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை கட்டுநாயக்காவிமான நிலையத்தில் வைத்து பெற்றோலிய கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலானபாராளுமன்ற உறுப்பினர்களான ராஜ கர்ணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின்அதிகாரிகள் சகிதம் வரவேற்றனர்.   இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திம வீரக்கொடி, நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அதிக பதக்கங்களைப் பெற்றுசாதனை படைக்க காரணமாக இருந்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதோடு இதற்கு களம்அமைத்துக் கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி  ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும்பாராட்டுகின்றேன் எனத் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், தெற்காசிய விளையாட்டு போட்டியில் எமது நாட்டு வீரர்கள் 186 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனைஒன்றினை படைத்துள்ளனர். இச்சாதனையினை படைத்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளையும்இவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களையும் எமது வீரர்களுக்கான வசதி வாய்ப்புக்களைஏற்படுத்திக் கொடுத்த அமைச்சின் அதிகாரிகளையும் பாராட்டுகின்றேன்.  விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கை அதிகூடிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்ததையிட்டுவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.  இவ்விலக்கினை அடைவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை விளையாட்டுத்துறை மூலம் சர்வதேசத்தில் புகழை எட்டியுள்ளதுடன் எமது நாட்டைசர்வதேசத்தை திரும்பிக் பார்க்கவும் வைத்துள்ளது. இதன் மூலம் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பல்வேறுநன்மைகள் சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

இலங்கை வீரர்களை உச்சாகப்படுத்தும் பணியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மும்முரம் !

ஹாசிப் யாஸீன்   இந்தியா குவாத்தியில் இடம்பெறும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீரர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, பணிப்பாளர் நாயகம் ரொஷான்...

செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி : சானியா ஜோடி சாம்பியன் !

  செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹென்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர்...

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் உலகக் கிண்ணத்தை இழந்த இந்தியா !

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.  பங்களாதேஷில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.  ஆடுகளம் வேகப்பந்து...

நாட்டுக்கு பெருமை தேடித் தந்த வீரர்களை வாழ்த்துகின்றேன் : ஹரீஸ் !

  ஹாசிப் யாஸீன்,எம்.எம்.ஜபீர்   இந்தியாவில் இடம்பெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர்ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடம்பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்ற பொத்துவில் மண்ணைச் சேர்ந்தஅஷ்ரஃப்பிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்தெரிவித்துள்ளார். மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில், அஷ்ரஃப் பெற்ற வெண்கலப்பதக்கத்தின் மூலம்  கிழக்கு மாகாண மக்களும், குறிப்பாக அம்பாறை மாவட்டமக்கள் மகிழ்ச்சியடைவதுடன் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெருமையை எமது பிரதேசத்தை சேர்ந்த மகன்ஒருவர் பெற்றுக்கொடுத்ததையிட்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில்பெருமையடைகின்றேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு மேலும் பெருமை தேடித்தந்தஏனைய வீர, வீராங்கனைகளுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எமது நாட்டு வீர, வீராங்கனைகளை இப்போட்டிக்கு தயார் படுத்திய பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டுஅமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி களத்தில் நின்று நாட்டின் வீர, வீராங்கனைகளை உச்சாகப்படுத்தி வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பணிப்பாளர்நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில்மகிழ்ச்சியடைவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர் !

இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது...

கட்டார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழா!

சஜா. எம். அனைஸ்  கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மைதர் விளையாட்டுமைதானத்தில்  கத்தார் வாழ்...

(வீடியோ) வேகப் பந்துவீச்சினால் இந்தியாவை துவம்சம் செய்த இளம் இலங்கை அணி !

  இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ரஜிதா எனற...

அண்மைய செய்திகள்