செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹென்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 56 நிமிடங்களில் விரா டஷிவினா (ரஷியா), பார்போரா கிரெஜிகோவா (செக்குடியரசு) இணையை தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றது.
உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் சானியா – ஹென்கிஸ் கூட்டணி தொடர்ச்சியாக பெற்ற 40-வது வெற்றி இதுவாகும். அத்துடன் இவர்கள் ஜோடியாக கைப்பற்றிய 13-வது பட்டம் இதுவாகும்.