இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ரோஹித்த கைது செய்யப்படலாம் ?

rohitha abay
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைய இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 30ஆவது சரத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

 2004ஆம் ஆண்டுக்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 41.1 மில்லியன் ரூபாவை எப்படி சம்பாதித்தார் என்பதை வெளியிட முடியவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 23 (அ) பிரிவின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டப் பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நபரை கைது செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியும் எனினும், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அனுமதி கோராமை தொடர்பிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.