இந்திய நடுவர்களின் பிழையான தீர்மானங்களே இலங்கையை தோல்வியடையச் செய்தது : தயாசிறி !

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவ நேரிட்டது என  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்… 

thayasri

இந்திய நடுவர்களின் பிழையான தீர்மானங்களே இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கான காரணமாகும். 

கடந்த போட்டித் தொடரில் பின்னடைவு ஏற்பட்டது. 

எந்த நேரத்திலும் மீண்டெழக்கூடிய அணியொன்று எமக்கு உண்டு. வலுவாக ஆசிய சாம்பியனாகி, உலகக் கிண்ணப் போட்டித் தொடரை எதிர்நோக்க வேண்டும். 

இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது டுவன்ரி20 போட்டியில் நடுவர்களின் தீர்ப்பினால் தோல்வியைத் தழுவ நேரிட்டது. எனினும் எதிர்வரும் போட்டித் தொடர்களின் போது அவ்வாறான பிரச்சினை ஏற்படாது. 

இந்திய நடுவர்களை விடவும் நல்ல நடுவர்கள் எமக்குக் கிடைப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

12718338_1769688419729024_5044115107267817515_n