இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்சனைகளில் ஒன்று, தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது. சிறப்பாக பந்து வீசி வந்த முகமது சமி காயம் காரணமாக பல மாதமாக அணியில் இடம்பெறாமல் போனது இந்திய அணியின் சமீபகால தோல்விகளுக்கு முக்கிய காரணமாக மாறியது.
இந்நிலையில் 20 ஓவர் ஆசியக்கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான அணிக்கு முகமது சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமி, “நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். தற்போது எவ்வித காயத்தாலும் அவதிப்படவில்லை. என்னால், 20 ஓவர் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முடியும் என்று முழுமையாக நம்புகிறேன். 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


