இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ரஜிதா எனற வேகப்பந்து வீச்சாளரும், டிக்வெல்லா என்ற விக்கெட் கீப்பரும் டி20 தொடரில் அறிமுகமானார்கள்.
இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக ரகானே சேர்க்கப்பட்டார். முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா அவுட் ஆனார். கடைசி பந்தில் ரகானே அவுட் ஆனார். அறிமுகமான முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே ரஜிதா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்களை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. அதிக அளவில் ஸ்விங்கும், பவுன்சும் இருந்தது.
இதனால் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின் மட்டும் சிறப்பாக ஆடி 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 18.5 ஓவரிலேயே 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 102 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த போதும், 18-வது ஒவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக பெற்றது.
கேப்டன் தினேஷ் சந்திமால் 35 ரன்களும், கபுகேத்ரா 25 ரன்களும் எடுத்து அந்த அணி வெற்றி பெற உதவினார்கள். இந்தியா தரப்பில் அதிகப்பட்சமாக அஸ்வின் மற்றும் நெக்ராவும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
ஆட்டநாயகனாக 3 விக்கெட்களை விழ்த்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா தேர்வு செய்யப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=INfWSb8EUZI