CATEGORY

விளையாட்டு

கோலாகலமாக நிறைவு பெற்ற கல்முனை ஸாஹிறாவின் இல்ல விளையாட்டுப் போட்டி !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (01) செவ்வாய்ககிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.   இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.றகுமான், சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளானபொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால்மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.   இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின்அணி வகுப்பு மற்றும் கராட்தே உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன. நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 222 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் இவ்வருடத்திற்கானசம்பியனானது. 219 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 214 புள்ளிகளைப் பெற்றுஅறபா இல்லம் மூன்றாம் இடத்தையும் 213 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் நான்காம் இடத்தையும்பெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களைபிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை வங்காளதேசத்துடன் வெற்றி பெறுமா?

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற...

மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிக்கு திரும்பும் ரோஜர் பெடரர்!

  மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வரும் சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர்,...

20 ஓவர் உலக கோப்பை: இங்கிலாந்து வீரர் ஸ்டீவன்பின் விலகல்!

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவன்பின் காயத்தால் விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு...

வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர்

அபு அலா  விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஒலுவில் இலவன் ஸ்டார் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று மாலை (26) ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...

தோனி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ?

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி டாக்கா சென்றுள்ளது.  முதல்...

ஆசியக் கிண்ணம் : வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா !

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. 167 ஓட்டங்கள் என்ற இந்திய அணியின் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்தியாவின் பந்து வீச்சை...

ஆசிய கோப்பை : ஹொங்கொங் அணி வாய்ப்பை இழந்தது !

  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளோடு தகுதி சுற்றில் இருந்து ஒரு அணி ஆக மொத்தம் 5 அணிகள் விளையாடும். தகுதி சுற்று ஆட்டம் கடந்த 19–ந்தேதி...

மெஸ்சி 300 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்!

  அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஸ்பெயினின் லா லிகா போட்டியில் ஸ்போர்ட்டின் கிஜோன் அணிக்கு எதிராக அவர்...

எனது 99 சதவீத பந்து வீச்சுகள் சரியான அளவிலேயே உள்ளன :சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல்.  சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசுகிறார் என கடந்த 2014ம் ஆண்டு போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதுவரை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய...

அண்மைய செய்திகள்