இலங்கை வங்காளதேசத்துடன் வெற்றி பெறுமா?

Asia-CUp-2016-1

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 4 லீக் ஆட்டம் முடிந்து விட்டன. இந்தியா 4 புள்ளியுடன் முதல் இடத்திலும், இலங்கை, வங்காளதேசம் தலா 2 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. பாகிஸ்தான்– வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

5–வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணி வங்காள தேசத்தை வீழ்த்தி 2–வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை 14 ரன்னில் வென்று இருந்தது.

இதேபோல வங்காளதேச அணியும் 2–வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணியும் தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை 54 ரன்னில் வீழ்த்தி இருந்தது.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் 4 ஆட்டத்திலும் இலங்கையே வெற்றி பெற்றது.