போர்ட் சிட்டி தொடர்பான திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தும் வகையிலேயே அமைச்சர், சீனா நோக்கி பயணமாகவுள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனா நோக்கி பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது போர்ட் சிட்டி திட்டம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், போர்ட் சிட்டி திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதியில் 20 ஹெக்டெயர் சீனாவிற்கு சொந்தமானதாக கருதப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரமே இந்த உடன்படிக்கை மீண்டும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.