கோலாகலமாக நிறைவு பெற்ற கல்முனை ஸாஹிறாவின் இல்ல விளையாட்டுப் போட்டி !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

 

 கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (01) செவ்வாய்ககிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

IMG_0530_Fotor

 

இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.றகுமான், சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளானபொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால்மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

 

IMG_0715_Fotor

இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின்அணி வகுப்பு மற்றும் கராட்தே உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 222 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் இவ்வருடத்திற்கானசம்பியனானது. 219 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 214 புள்ளிகளைப் பெற்றுஅறபா இல்லம் மூன்றாம் இடத்தையும் 213 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் நான்காம் இடத்தையும்பெற்றன.

IMG_0679_Fotor

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களைபிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

IMG_0785_Fotor