வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர்

அபு அலா 

விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

4_Fotor

அவர் மேலும் கூறுகையில்,

ஒலுவில் இலவன் ஸ்டார் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று மாலை (26) ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.

5_Fotor

பாடசாலைகளில் விளையாட்டை ஊக்குவிக்க வாரத்தில் ஒருநாளை உறுவாக்கி அதில் ஒரு நாள் எல்லா மாணவர்களும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் எமது நாட்டிலுள்ள எல்லா மாகாணங்களிலும் சிறந்த வீரர்களை உறுவாக்கலாம். அதற்கு எமது நல்லாட்சி அரசாங்கம் வாரத்தில் ஒருநாள் பாடசாலைகளில் விளையாட்டுக்கு என்று ஒரு தினத்தை ஒதுக்கி எமது மாணவர்களிடத்தில் விளையாட்டுக்களை ஊக்குவித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உறுவாக்க முன்வரவேண்டும் .

விளையாட்டுக் களம் மட்டும்தான் அந்தந்த விளையாட்டு சார்ந்த அணைத்து வீரர்களின் சமூகக் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் களமாக இருப்பதால் ஆசிரியர்கள் விளையாட்டு பற்றிய தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் திறமையை தெரிந்துகொண்டு அந்தந்த துறைகளில் அவர்களை  ஊக்குவிக்கவும் நாம் செயற்படவேண்டும்.

3_Fotor

கிரிக்கட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் இதர விளையாட்டுகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எல்லா விளையாட்டுக்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க முனையவேண்டும் என்றார்.