CATEGORY

கட்டுரை

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா பாலமுனையில் மேடையமைத்துக் கொடுத்தனர்?

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா பாலமுனையில் மேடையமைத்துக் கொடுத்தனர்? ரணிலும் மைத்திரியும் முஸ்லிம்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? -இப்றாஹீம் ஜனாதிபதி மைத்திரி – ரணில் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகள் முஸ்லிம்கள்...

அக்கரைப்பற்றும் – தேசிய நீர் வழங்கல் சபையின் பிராந்திய காரியாலயமும்  !

தேசிய நீர் வழங்கல் சபைக்கு அம்பாறையில் ஒரு பிராந்திய காரியாலயமும் அக்கரைப்பற்றில்  ஒரு பிராந்திய காரியாலயமும் இவற்றிற்கு மேலாக தற்போது 3வது பிராந்திய காரியாலயம் ஒன்றும் கல்முனையில் நிறுவப்படவுள்ளது இக் கல்முனை பிராந்திய காரியாலயத்திறகான நிருவாக...

சொல்வது வேறு, செய்வது வேறு ஹக்கீமின் அரசியல் ராஜதந்திரம் இது தான் !

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீனும் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள்அமைச்சர் அதாவுல்லாவும் பாலமுனை மாநாட்டில் பங்கேற்கமுடியுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்ச ரவூப்ஹக்கீம் விடுத்த அழைப்பு ஒரு பம்மாத்தானது. முஸ்லிம்சமூகத்தில் ஒற்றுமையை தாம் விரும்புவதாக அந்தச்சமூகத்திடம் பாசாங்கு காட்டுவதற்காக ஹக்கீம் விடுத்தஅழைப்பாகவே இதானைக் கருத முடியும். அதாவுல்லாவும், ரிஷாட்டும் பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் தலைவர்கள். எனவே அவர்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டு ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். கிழக்கிலே ஒரு குட்டி அரசனாக கணிக்கப்படும் அதாவுல்லா வடக்கிலே ஒரே ஒரு கெபினட் அமைச்சராக இருந்துகொண்டு தனிக்கட்சியொன்றைத் தொடங்கி மக்கள் பணிசெய்யும் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வீதிகளில் அலைந்துதிரிபவர் அல்ல. ஹக்கீமைப் போல் அஷ்ரப்பின் மரணத்தின்பின்னர் கட்சியின் தலைமைப் பதவியை தட்டிப் பறித்தவர்களும் அல்ல. மாறாக அவர்கள் சொந்தக் காலில் நின்றுகட்சியமைத்து மக்கள் பணி செய்தவர்கள். ஹக்கீமிடம் இதயசுத்தியான அழைப்பு இல்லையென்பதை சில சம்பவங்கள்மூலம் எடுத்துக் காட்டலாம். உதாரணமாக மடவளையில் முன்னணி பாடசாலையொன்றின்நிகழ்வொன்றுக்கு அமைச்சர் ஹலீம் பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார். அந்த விழாவில் கௌரவ அதிதிகளாகஹக்கீமும், ரிஷாட்டும் அழைக்கப்பட்ட போது பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட ஹக்கீம் ரிஷாட்டை அழைத்தால் தான் வரப்போவதில்லை என  அடம்பிடிக்கிறார். அதே போன்று கண்டி அக்குரணை பாடசாலை ஒன்றின்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட்அழைக்கப்படுகிறார். அந்த விழாவுக்கு கௌரவ அதிதியாகமுஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்எம் எச் எம் சல்மான் அழைக்கப்படுகின்றார். இதைக்கேள்வியுற்ற ஹக்கீம் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு ரிஷாட்டை அழைத்தால் சல்மான் வரமாட்டார் என்று எச்சரிக்கைப் பாணியில் கதைத்துள்ளார். இது தான் முஸ்லிம் சமூகக் கட்சித்தலைவரின் ஒற்றுமைக்கான செயற்பாடுகள். நாளை 19 ஆம் திகதி அக்கறைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரியில் திறக்கப்படவுள்ள நீச்சல் தடாகம் அமைச்சர்அதாவுல்லாவின் முயற்சியினால் கட்டப்பட்ட ஒன்று. ஆனால் நாட்டுத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின்அழைப்பிதழில் அந்தப் பிள்ளையைப் பெற்ற அதாவுல்லாவின் பெயர் இடம்பெறவில்லை. யாரோ பிள்ளையைப் பெற ஹக்கீமும் தவமும் இணைந்து பெயர் வைக்கப் போகின்றனர்.இது தான் முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகள். இவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கும் புரியாதஒன்றல்ல!!! முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென ஹக்கீம் வெளியுலகத்திற்கு கூறி வருவது பச்சப்பொய். அமைச்சும் பதவிகளுக்காகத் தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பலர்சென்றார்கள் என்றும் அவர்கள் உள்ளே வந்தால் அமைச்சுப்பதவிகள் தொடர்பில் சில கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டுமென்றும் ஒலுவில் ஊடகவியலாளர் மாநாட்டில்     ஹக்கீம் கூறியுள்ளார். இதே ஹக்கீம் தான் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர்கொழும்பு தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர்மாநாட்டில் “முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இனி அமைச்சுப்பதவியை பொறுப்பேற்காது” என பகிரங்கமாகக்கூறியவர். ஹக்கீம் தனது 15 வருட கால அரசியல் வரலாற்றில் சொல்வதுவேறு, செய்வது வேறு, இதை அவர் தனது அரசியல் சாணக்கியமென நினைத்துக்...

ஹக்கீம் அவர்கள் மீண்டும் ஹசன் அலிக்கு அதிகாரமிக்க செயலாளர் பதவியை வழங்கவுள்ளார் !

எனது நப்சு கேக்கிறது, தலைமைப் பதவியை எனக்குத் தாருங்கள் என்று அழுது கேட்டுப் பெற்றவருக்கு இதுகள் என்னமாலும் வெளங்குமோ தெரியா? ஸ்ரீ. ல. மு. கா. அரசியல் யாப்பு, அரசியல் கட்சியின் ஸ்தாபக தலைவர்...

பாலமுனை மாநாடு எதற்காக? தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? !

தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? குடைந்து குடைந்து கேட்கின்றனர் மு கா அதிருப்தியாளர்கள்      பாலமுனையில் நாளை மறுதினம் 19ஆம் திகதி நடைபெற இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம்...

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும் !

   கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும்  இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதியாக இருக்குமானால் அதனை பயங்கரவாத செயலாகவே நினைக்கிறது  வேண்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணியிலிருந்து ஏற்பட்ட மின் துண்டிப்பானது நாடெங்கும்...

தமிழர்களின் வட்டுக்கோட்டை மகாநாட்டினை நினைவூட்டும் மு. கா.வின் பாலமுனை மகாநாடு!

முகம்மத் இக்பால்     முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் தேசிய மகாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்றது.  முஸ்லிம்...

அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ் !

   கல்முனை முபாரிஸ்   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹரீஸ் பிரதியமைச்சராக பதவியுயர்வு பெற்ற பின்னர் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாக மாறிவிட்டார். ஹக்கீமை கடந்த காலங்களில் எவ்வளவு மோசமாக தூஷித்தாரோ அதே போன்று...

பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை !

பாலமுனை மாநாட்டில் பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை! ஹக்கீமிடம் வேண்டுகோள்     அம்பாறை புத்திஜீவிகள்   பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா...

மு.கா. தேசிய மாநாடு : இன்னுமொரு சாணக்கியம் ?

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விடுதலை வீரன். காற்றினால் தீயினால் வெள்ளத்தினால் அழிக்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென்று நாங்கள் கனவு கண்டோம். துப்பாக்கி ரவைகளினால் சுடப்படாத முடியாத ஒரு தலைமைத்துவம்...

அண்மைய செய்திகள்