ஹக்கீம் அவர்கள் மீண்டும் ஹசன் அலிக்கு அதிகாரமிக்க செயலாளர் பதவியை வழங்கவுள்ளார் !

rauff hakeem, hasen
எனது நப்சு கேக்கிறது, தலைமைப் பதவியை எனக்குத் தாருங்கள் என்று அழுது கேட்டுப் பெற்றவருக்கு இதுகள் என்னமாலும் வெளங்குமோ தெரியா?
ஸ்ரீ. ல. மு. கா. அரசியல் யாப்பு, அரசியல் கட்சியின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பினால், கட்சியின் ஸ்தாபக தவிசாளர் சேகுவிடம் எழுதுமாறு கோரப்பட்டு, சேகுவினால் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டது.
கட்சியின் கட்டுமானம் உயர் பீடம், அரசியல் பீடம், செயற் குழு, மாவட்டக் குழு மற்றும் கிராமியக் குழு என, சிறந்த உட்கட்டமைப்பு பேணப்பட்டது. தலைவரின் மரணத்திற்குப் பின் பல தடவை தற்போதைய சாணக்கிய தலைவரினால் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டது. இம்மாற்றங்கள் கட்சியின் கட்டுமானத்தில் பாரிய வீழ்ச்சியை கொண்டு வந்தது.

 
இம்மாற்றத்தில் மிகப் பிரதானமானது, புத்தள மகா நாட்டில் எடுத்த தீர்மானமான உயர்பீடம் மற்றும் அரசியல் பீடம் ஒன்றாக்கப் பட்டதாகும். இதற்கு கட்சியின் இரு பிரபல சட்டத்தரணிகள் பயன்படுத்தப் பட்டார்கள். அன்று இம்முடிவுக்கு கட்சியின் செயலாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பிற்பாடு கட்சி உட்கட்டமைப்பு செயலிழந்து தேர்தல் காலத்துக்காக மட்டும் வரும் மக்கள் பிரதிநிதிகள் முன்னுரிமைப் படுத்தப்பட்டனர்.

 
கட்சி யாப்பில் ஏற்படுத்தப்பட்ட அடுத்த பெரிய மாற்றம்தான் சர்ச்சைக்குரிய கண்டி தீர்மானம். இதில் ஆறாவது பிரதித்தலைவர் உருவாக்கப்பட்டு ஆறு மேலதிக செயலாளர்கள் ஒரு சிங்களவர் உட்பட கட்சியின் உயர்பீடத்திற்கு உள்வாங்கப்பட்டனர். இதில் உயர்பீட செயலாளர் 125,000 ரூபா சம்பளத்திற்கு உரியவராகவும் மற்றும் தேர்தல் ஆணையாளர் தொடர்பான விடயங்களுக்கும் தொடர்புடையவராக அறிவிக்கப்பட்டார். இவர் வேண்டிய நேரம் தலைவரினால் நியமிக்கப்படலாம் அல்லது விலக்கப்படலாம். அதாவது தொண்டமான் அதாஉல்லா கட்சி செயலாளர்கள் போன்றது.

 

இதன் கருத்து தலைவர் செயலாளர் ஒரு நபராக இருத்தல். உயர் பீட உறுப்பினர்களின் என்னிக்கை 90 ஆக அதிகரிக்கப்பட்டு இதில் 58 பேரை தலைவர் நேரடியாக நியமிக்க முடியும். இது ஐ. தே. க தலைவரின் செயற்குழு நியமன அதிகாரத்தை ஒத்தது.

 

இங்குதான் திருவிளையாடல் ஆரம்பமாகிறது! தலைவரினால் அங்கு அறிவிக்கப்பட்டது ஒன்று தேர்தல் ஆணையாளருக்கு வழங்கியது வேறு ஒன்று. தேர்தல் ஆணையாளருக்கு கொடுக்கப்பட்ட யாப்பில் பொதுச் செயலாளர் மற்றும் உயர்பீட செயலாளர் கட்சி செயலாளர் என்ற பதவி உள்வாங்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் கட்சியின் மூத்த இளைய உயர்பீட உறுப்பினர்கள் பேராளர்களுக்கு தெரியுமோ தெரியாது? இம்மாற்றம் சம்பந்தமான தேர்தல் ஆணையாளரின் எழுத்து மூல கோரல் கடிதம் பொதுச் செயலாளருக்கு மறைக்கப்பட்டு தலைவரின் ஒப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இவ்வளவும் செய்தது தலைவர், தனது பதவியைப் பாதுகாப்பதற்காக. தன்னை தலைவராக்கி அழகு பார்த்தவர்களின் பதவியை பறிக்கும் நன்றி கெட்ட தனமும், நயவஞ்சக தனமும் மிகைத்த தலைவருக்கு, பதவி கொடுப்பது இறைவன் என்பது சௌகரியமாக மறந்து போனது. கேட்டுப் பெற்ற பதவியை பாதுகாக்க எவ்வளவு திருகுதாளம்.

 

தேசியப்பட்டியல் விவகாரம், இவற்றை மறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாடகமாகும். உயர்பீட உறுப்பினர்கள், பேராளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்சியில் ஜனநாயா யகத்தைப் பேண தற்பொழுது உயர்பீட உறுப்பினர்கள் முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதன் பிரதிபலன் தலைவர் மற்றும் ஜனனாயகத்தைப் பேணும் குழு, கலாநிதி இஷாக் தலைமையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தியது. இச்சந்திப்பின் போது தான் தலைவர் தான் செயலாளர் ஒப்பந்தம் இடுவதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான கடிதத்தில் கையொப்பம்  இட்டதை அறிந்து கொன்டார். தமது நம்பிக்கைக்குரிய டம்மி எம்.பி. இதனை ஒப்புக்கொண்டார்.

 
தலைவர் தவறை ஒப்புக்கொண்டு இக்கடிதத்தை வாபஸ் பெறுவதாகவும் முழு அதிகாரத்தையும் பொதுச் செயலாளருக்கு வளங்குவதாகவும் வாக்குறுதி வளங்கியுள்ளார்.
போராளிகளே சிந்தியுங்கள்! மசூறா இல்லாத கட்சியின் முடிவுகள் இவ்வாறு பிரச்சினையில் முடிந்து பிளவுகள் ஏற்பட்டதுதான் வரலாறு. மசூறா இல்லாமல் விற்கப்படும் கரையோர மாவட்டம், பல்டியடிக்கும் பைலாகள், டம்மி எம்பிகள் இன்னும் எமக்குத் தேவைதானா?

 
போராளிகளே ஒற்றுமைப்படுங்கள்! உங்களது அரசியல் தந்தை அஷ்ரப்பினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாப்பை நடைமுறைப் படுத்தி கட்சி ஐனநாயாகத்தை நடைமுறைப்படுத்த மற்றும் எமது இலக்கான தென்கிழக்கு அலகு மீண்டும் விற்கப்படுவதை தடுப்பதற்கு ஒற்றுமைப்படுங்கள்.