- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்வதற்காக அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

புத்தாண்டுக்கு பின்னர், குறைகள், தாமதங்களை போக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....

இறக்காமம் அனர்த்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது , அமைச்சர் றிசாத் அவர்களும் விஜயம்

எம்.ஏ.றமீஸ் உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த சுமார் ஆயிரத்திற்கும்அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் கிராமத்தில் உள்ளமுஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்தமையால் அவ் உணவினை உட்கொண்ட மூவர் மரணடைந்ததுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தனர். இவ்வாறு வைத்திய சிகிச்சை பெற்று வந்த இறக்காமம் பிரதேச வைத்தியசாலையிலேயே அதிக எண்ணிக்கையானோர்அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 22 நோயாளர்களே இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வேறு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதுடன் பெரும்எண்ணிக்கையானோர் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இதேவேளை இதனோடு தொடர்புடைய அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களில் கணிசமானோர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவ்வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள்தெரிவிக்கின்றன. கந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட உணவு நச்சுத் தன்மை ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறியும் வகையில் நேற்று மாலைஅப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோயியல் நிபுணத்துவ உயரதிகாரிகள் பொதுமக்களுக்குவழங்கப்பட்ட உணவு மாதிரிகள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பகுப்பாய்விற்காக கொண்டுசென்றுள்ளனர். குறித்த பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 48 மணித்தியாலங்கள் முதல் 72 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள்ளேயே வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதால் இதற்கான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாய் அமையும் என இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடும் வகையில் அப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சுகம் விசாரித்ததோடு அங்கு சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் ஒரு தொகைப் பணம் வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தார். அத்தோடு இறக்காமம் உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றுதுக்கம் விசாரித்ததுடன் வருமானம் குறைந்த இரு குடும்பத்தவர்களுக்காக இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதுடன் மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஒரு தொகைப் பணத்தினையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஷ்யாம் குமார் தங்கம் வென்றார்

உலகின் முன்னணி குத்துச்சண்டை தொடரான தாய்லாந்து குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பட்டாயா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற தேசிய எலைட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் ஷ்யாம் குமார்...

பிரித்தானியா குடும்ப விசா- மே மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய சட்டம் நடமுறைக்கு வருகின்றது

குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழித் தேவையை பிரித்தானிய அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்தியை படித்திருப்பீர்கள். Family route...

அக்கரைப்பற்று வலயம் பொத்துவிலுக்கான அதிகாரத்தை இன்றிலிருந்து வழங்குகின்றது : ALM.காசிம்

  பொத்துவில் கல்வியானது அபிவிருத்தியடைய வேண்டுமென நான் பலமுறை முயற்சித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ஆனால் பலர் பொத்துவில் உப வலயத்திற்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அதிகாரங்களை கொடுக்காமல் தடுத்து வைத்துள்ளார் என...

சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடி பறிமுதல்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு...

எதிர்வரும் 10 ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளனர். ஜப்பான் செல்லும் பிரதமர், ஜப்பானிய...

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் பொதுமக்கள், அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு...

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா செல்லவுள்ளார்

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கை (எட்கா) உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்த இறுதி...

சந்தோசத்தில் விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா விதமான இரண்டு சரீர பிணைகளிலும் பாராளுமன்ற...

Latest news

- Advertisement -spot_img