புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் பொதுமக்கள், அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு யோசனைகளை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த உபகுழுக்கள் பிரதமர் தலைமையிலான அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. 

இந்த அறிக்கையிலேயே மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக குழுவின் அங்கத்தவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் கூறியுள்ளார்.