குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழித் தேவையை பிரித்தானிய அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்தியை படித்திருப்பீர்கள்.
Family route ஊடாக தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கு விண்ணப்பம் மேற்கொள்ளும் ஐரோப்பிய (EEA) நாடுகளைச் சாராத பெற்றோர்கள் மற்றும் கணவன் மனைவி விண்ணப்பதாரர்களுக்கு இந்த புதிய ஏ2 (A2) ஆங்கில மொழி தேவைச் சட்டம் 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நடமுறைக்கு வருகின்றது.
இதில் உள்ள முக்கியமான விடயம் என்னவென்றால், உங்களுடைய விசா 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியன்று அல்லது அதற்குப் பின்பு முடிவடையுமாயின், நீங்கள் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலும் A2 விதிமுறையை பின்பற்றவேண்டும் என்பதாகும்.
(இணைப்பு:- பந்தி 18, பக்கம் 06)
உள்விவார அமைச்சு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள புதிய விண்ணப்பப்படிவத்திலும் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இணைப்பு:
https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/606322/FLR_M_-04-17.pdf
ஆகவே 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் விசா முடிவடையும் விண்ணப்பதாரிகள் உங்கள் ஆங்கில மொழித் தேவைக்குரிய விதிமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்துங்கள்.