- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தான் வீரர்களின் இந்தியப் பயணத்துக்கு திடீர் தடை!

  ஆறாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.  இந்தியா-பாகிஸ்தான்...

வெளிநாடுகளில் வாழ்கின்ற 1500 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது :நாவீன்ன

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…  அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, இத்தாலி...

எமது கட்சியில் பயணிக்கும் அரசியல்வாதிகள் பணியாற்றவில்லையென்றால் தேர்தல்களில் அவர்களை நிராகரித்துவிடுங்கள்: ரிஷாட்

  ஊடகப்பிரிவு    கட்சிகளும் சின்னங்களும் அவற்றின் நிறங்களும் மார்க்கமெனநம்மவர்களில் சிலர் கருதும் போக்கு இல்லாமல் போனால்தான்நமது சமூகம் விமோசனம் பெறும். கட்சிகள் விடும் தவறுகளைதட்டிக் கேட்கும் திராணியும் நமக்கு இருக்க வேண்டும்இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   புத்தளம் அக்கரவெளியில் இடம்பெயர்ந்து வாழும் அடம்பன்பள்ளிவாசல்பிட்டி அகதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாம் அரசியல்செய்கின்றோம். எமது கட்சியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்மக்களுக்கு பணியாற்றவில்லையென்றால் அவர்களால்சமூகத்துக்கு பயன் கிட்டாவிட்டால் தேர்தல்களில் அவர்களைநிராகரித்துவிடுங்கள். பெயருக்காக, புகழுக்காக கட்சிஅரசியலை நாம் நடாத்த விரும்பவில்லை. இடம்பெயந்தமக்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்மல்ல. அகதி முகாமிலிருந்த நான் அரசியலுக்குள் வந்த நோக்கம்மக்களின் கஷ்டங்களை போக்கவே. நான் வகித்த பதவியைஇராஜினாமா செய்துவிட்டு ஏதோ ஓர் அசட்டுத்துணிவில்இறைவனை முன்னிறுத்தி அரசியலுக்குள் வந்தேன, நான்அரசியலில் ஈடுபடுவேன் என ஒருபோதும்நினைத்திருக்கவில்லை. இறைவனின் நாட்டம்இதுவாகவிருந்தது. குறுகிய காலத்தில் எமது கட்சி வளர்ந்துவிருட்சமாகியுள்ளது. அரசியலில் நான் என்றுமே வீறாப்புப்பேசியதில்லை. ”சாரதியும் நானே நடத்துனரும் நானே” என்றுகூறிக் கூறி நாம் மமதை அரசியல் நடத்தவும் விரும்பவுமில்லை.இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த சந்திப்பை வடமாகாண மஜிலிஸுஷ் ஷூராத் தலைவரும்தில்லையடி முஹாஜிரின் அரபுக்கல்லூரி ஸ்தாபகப்பணிப்பளரும் அதிபருமான அஷ்ரப் முபாரக் (ரஷாதி) ஏற்பாடுசெய்திருந்தார். இந்த சந்திப்பில் பங்கேற்ற அகதிமக்கள் அக்கரவெளியில் தாம்எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துக்கூறினர்.அக்கரவெளியில் சிறுவர் பூங்கா ஒன்றையும் தமது மாணவர்கள்கல்வி கற்கும் தாரக்குடிவில்லு முஸ்லிம் வித்தியாலயத்திற்குகட்டிடம் ஒன்றையும் அமைத்து தருமாறு கோரிக்கைஒன்றையும் விடுத்தனர். மீளக்குடியேற விரும்புவோருக்குவசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் வேண்டினர்.

ஜனாதிபதியிடம் ‘ஹலோ சொல்லுங்க’ ஊடாக 44,677 பொதுமக்கள் பிரச்சினைகள் பெறப்பட்டுள்ளன !

அஷ்ரப். ஏ சமத்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ”ஹலோ சொல்லுங்க”  என்ற தொலைபேசி  ஊடாக 1919 மற்றும் தபால் பெட்டி 123 என்ற இலக்கங்கள் பொது மக்கள் பிரச்சினைகளுக்கான விசேட அலுவலகம் ஜனவரி 08ஆம்...

லிந்துலை பாமஸ்டன் கொலனியில் குடிநீருக்காக மக்கள் வீதியை மறித்து ஆர்பாட்டம் !

க.கிஷாந்தன்   லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் கொலனியில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் 09.03.2016 அன்று காலை 09 மணிக்கு அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   அட்டன் நுவரெலியா பிரதான...

எக்ஸிம் வங்கியின் நிதியுதவில் மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வு!

ஊடகப் பிரிவு   இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img