ஜனாதிபதியிடம் ‘ஹலோ சொல்லுங்க’ ஊடாக 44,677 பொதுமக்கள் பிரச்சினைகள் பெறப்பட்டுள்ளன !

SAMSUNG CSC

SAMSUNG CSC

அஷ்ரப். ஏ சமத் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ”ஹலோ சொல்லுங்க”  என்ற தொலைபேசி  ஊடாக 1919 மற்றும் தபால் பெட்டி 123 என்ற இலக்கங்கள் பொது மக்கள் பிரச்சினைகளுக்கான விசேட அலுவலகம் ஜனவரி 08ஆம் திகதி   ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டன.  இவ் அலுவல்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டு    இரண்டு மாதங்களுக்குள்  44, 677 பிரச்சினைகள்  ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 
அவற்றில் 1919 தொலைபேசி மூலம்  பொது மக்களது  22,947 பிரச்சினைகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன,  தபால் மூலம் 11,636 கடிதங்கள்,  வெப்தளம், ஈமெயில், முகநுால்  ஊடாக 10,094   பிரச்சினைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. என ஜனாதிபதியின்  பொது சனத் தொடா்பு பிரிவின்  மேலதிகச் செயலாளா்  கொடிக்கார தெரிவித்தாா்.
நேற்று(8) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்ட தகவலைத்  மேலதிகச் செயலாளா் தெரிவித்தாா்.
இம் ஊடக மாநாட்டில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா்  லக்பெரும, மற்றும் ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளா்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனா்.
இங்கு உரையாற்றிய இணைப்புச் செயலாளா்  லக்பெரும தகவல் தருகையில்  –
இந்தப் பிரச்சினைகளுள் 923 பிரச்சினைகள் ஜனாதிபதியினாலும் தீா்க்க முடியாதவையாக உள்ளன. உதாரணமாக கொலாநாவையில் கொட்டப்படும் கழிவுப் பிரச்சினைகள் , உயா் நீதிமன்றத்தினால் தீா்ப்பு வழங்கப்பட்ட பிரச்சினைகளை  தீா்க்க முடியாதவைகள் ஆகும்.   இந்த நல்லாட்சியில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்கள் பிரச்சினையில்  இதுவரை 44,677 பிரச்சினைகளையும் 44 அமைச்சுக்களின் 28 அமைச்சுக்களின்  அதிகாரமளிக்கப்பட்ட மேலதிகச் செயலாளா்  ஊடக இந்தப் பிரச்சினைகள் சம்பந்தபட்ட அமைச்சுக்கு அனுப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அமைச்சிக்களின் செயலாளா்கள்  எடுத்த.முடிபுகள் தீா்மாணங்கள் பற்றி பொதுமக்களது தொலைபேசி கலந்துரையாடல் ஒலிப்பதிவுகளும்  உரிய அமைச்சுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  அமைச்சிக்களினால்  எடுத்த முடிபுகள் தீர்மாணங்கள் அந்த அமைச்சின் கீழ் வருகின்ற சபைகள், கூட்டுத்தபாணங்கள் எடுத்த முடிபுகள் கடிதம் மூலம் கைத் தொலைபேசி குருந்தகவல் மூலமும் சம்பந்தப்பட்ட பொதுமகனுக்கு அறிவிக்கப்படுகின்றன. அத்துடன் இவ்விடயம் சம்பந்தமாக எமது அலுலவக அதிகாரிகள் . அதனைப் பின்தொடா்ந்து 3 நாற்களுக்குள் எடுக்கபடப்ட நடவடிக்கைகள் பற்றியும் பின் தொாடா்கின்றனா். 
உதாரணமாக ஜனாதிபதிக்கு அனுப்பட்டட 920 முறைப்பாடுகள்  கல்வி சம்பந்தமாகும் இவ்விடயங்கள் கல்வியமைச்சுக்கு  அனுப்பட்டுள்ளன. அதில் 90 வீதமானவை ஆசிரியா் இடமாற்றங்களும் , பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதி கேட்டு விண்னப்பிந்திருந்த பிரச்சினைகளாகும். இருந்தும் இவ்விடயத்தினையும் கூட முடியுமான அளவு உதவக் கூடிய விடயங்களை  கல்வியமைச்சின் சிரேஸ்ட செயலாளா் இவ்விடயத்தினை ஆராய்ந்து நடவடிக்ககைகள் எடுக்கப்ட்டுள்ளது. 
 
சில பிரச்சினைகள் நேரடியாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படுகின்றது. ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சா்கள்,  திணைக்களத் தலைகளோடு நேரடியாக பேசி முடிபு எடுக்கக் கூடிய விடயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன்.
 .
tell.president.lk  வெப்தளம், அல்லது [email protected] என்ற ஈமெயில் மற்றும்  கடிதங்கள் அனுப்புவதற்கு  த.பொ -123  தொலைபேசி  ஹலோ ஜனாதிபதி 1919  மூலமும் பிரச்சினைகள் அனுப்பபடுகின்றன.  இந் நடவடிக்கைகள்  மூன்று மொழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என  ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா் லக்பெரும கூறினாா்.