- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மகேஸ்வரன் கொலை : எம்மீது பொய்யான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன !

மகேஸ்வரன் கொலை தொடர்பில் அவரது ஐந்து சகோதரர்களையும் அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என தெரிவித்த ஈ.பி.டி.பி. தலைவரும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா இக் கொலை தொடர்பில் விசேட விசாரணைகள் குழுவொன்று...

மூழ்கிய கப்பலிலிருந்து 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு !

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்ததுள்ளது. கடந்த 1708ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்ற...

குஷல் ஜனித் பெரேரா நியூஸிலாந்திலிருந்து மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார் !

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா, மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரிலேயே அதிரடி துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித்...

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல்காந்தி இன்று சென்னை வருகின்றார் !

சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்னை வருகிறார். அவரை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்த-விற்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றது ?

 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அதன் பண பலமும் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த அமைப்புகளுக்கு எப்படி...

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் பலி !

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அல்-ஹோல் என்ற இடத்தில் அமெரிக்கக் கூட்டுப்படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது....

வடமாகாண சபை கண்டுகொள்ளாத வடமாகாண முஸ்லிம்கள் !

 இலங்கையின் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த வடமாகாண சபைக்கான தேர்தல் கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பெற்று தற்போது இரண்டு வருடங்களையும் தாண்டிய நிலையில் அதன் அபிவிருத்திச்...

பொத்துவில் கெடோயா , கரைவாகு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக நாடாளுமன்றில் குரலெழுப்பிய ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்     பொத்துவில் பிரதேச கெடோயா நீர்ப்பாசனத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். முறையான நீர்ப்பாசனத்திட்டம்இன்மையால் அங்குள்ள விவசாயிகளின் பல்லாயிரக்கணக்கான காணிகள் செய்கை பண்ணப்படாமல் காணப்படுகின்றது. இதனைஅரசாங்கம் கவனத்தில் எடுத்து  இத்திட்டத்தினை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  நீர்ப்பாசனம், சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி அமைச்சுகளுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் இன்று (07) திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இவ்விவாதத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொத்துவில் கெடோயா நீர்ப்பாசனத் திட்டத்தினை கடந்த கால அரசும் அமைச்சர்களும் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதிகள்வழங்கியிருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் இங்குள்ள விவசாயிகள் பல கஷ்டங்களை அனுபவித்து வருவதுடன் தனதுவாழ்வாதார தொழிலையும்  இழந்துள்ளனர்.  இன்று நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இத்திட்டத்திற்கு நீரைக்கொண்டு வரக்கூடிய மொனராகலை மாவட்டத்தை சேர்ந்தவர்நீர்ப்பாசன அமைச்சராக விஜயமுனி சொய்ஸா இருப்பதால் இம்மாவட்டத்திலிருந்து நீரைக்கொண்டு வந்து இத்திட்டத்தினைநிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும் என நினைக்கின்றேன். இத்திட்டத்தினை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைவுள்ளனர். இதனால் பொத்துவில்மக்களின் வாழ்வாதாரமும்; நாட்டின் பொருளாதாரமும் உயர்வடையும். அமைச்சர் விஜயமுனி சொய்ஸா ஊவா முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அப்பகுதி சிறுபான்மை மக்களுக்கு பல வகைகளில்சேவையாற்றியர். எனவே எனது மாவட்ட பொத்துவில் மக்களின் இப்பிரச்சினையை அமைச்சர் கவனத்தில் எடுத்து நிறைவேற்றித்தரநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் மூலம்; விவசாயிகள் மட்டுமல்ல பொத்துவில் பிரதேசத்திலுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடியதாக அமையும். இதனால் அப்பிரதேசத்திலுள்ள லட்சக்கணக்கான மக்கள் நன்மையடைவார்கள். அதே நேரம் சுற்றாடல் அமைச்சின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கரங்கோ, பாலையடி வட்டை, ஏகாம்பற்று, பள்ளியடி வட்டை, வட்டமடு போன்ற பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம்செய்யப்பட்டு வந்தது.  இன்று வன பரிபாலனை திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் இக்காணிகளுக்குள் விவசாயம் செய்வதை தடைசெய்துள்ளதனால் அம்மக்கள் தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். சுற்றாடல் அமைச்சுக்கு பொறுப்பான ஜனாதிபதியும் அதற்கான பிரதி அமைச்சர்களும் பொத்துவில் மக்களின் இந்நிலைமையைகருத்தில் கொண்டு இக்காணிகளுக்குள் விவசாயம் செய்யக்கூடிய உரிமத்தை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன். மேலும் கல்முனை கரைவாகு நீர்ப்பாசனத்திட்டம் கடந்த காலத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதிகளை அமைச்சர் ஒதுக்கீடு செய்துதர வேண்டும். இதனால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கரைவாகுவட்டை காணிகள் இரண்டு போகம் விவசாயம் செய்யக்கூடியவாறு அமையும் எனவும்குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா, பிரதி அமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டிய பொத்துவில் கெடோயாநீர்ப்பாசனத் திட்டத்தினையும், கல்முனை  கரைவாகு நீர்ப்பாசனத் திட்டத்தினையும் நிறைவேற்றித்தர உடன் நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தார்.      

Latest news

- Advertisement -spot_img