ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அதன் பண பலமும் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த அமைப்புகளுக்கு எப்படி அளவுகடந்த பணம் கிடைக்கிறது என்ற கேள்வி நீண்ட காலமாகவே உள்ளது.
பொதுவாக இஸ்லாமிய நாடுகளில் இருந்து இந்த அமைப்புகளுக்கு நிதி கிடைக்கிறது என்பது மட்டுமே இங்கு கூறப்பட்டு வருகிறது. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா அமைப்புகளுக்கு பணம் கிடைக்கும் 6 முக்கிய வழிகளை இங்கு பார்க்கலாம்.
ஐ.எஸ் (இஸ்லாமிய தேசம்) தன்னுடைய பகுதிக்குட்பட்ட மக்களிடையே பல்வேறு முக்கிய வரிகளின் மூலமாக பணம் ஈட்டுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது ஐ.எஸ்.
2.எண்ணெய் வளம்(Oil)
எண்ணெய் வளம் ஐ.எஸ் அமைப்பிற்கு வருமானம் கிடைக்கும் முக்கியமான வழி. சிரியா மற்றும் ஈராக்கில் அதன் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளில் கிடைக்கும் எண்ணெய் வளங்களை துருக்கி வழியாக பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஐ.எஸ் அமைப்பிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
3. பிணைய கைதிகள் மூலம்(Ransoms)
ஐ.எஸ் அமைப்பானது பல்வேறு நாடுகளை சேர்ந்த குடிமக்களை பிணையக் கைதிகளாக வைத்து கொண்டு மிரட்டி பணம் குவிக்கிறது. செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2014 வரையிலான கால அளவில் பிணையக் கைதிகளுக்கு சுமார் 230 கோடியில் இருந்து 300 கோடி ரூபாயாக தொகையை அதிகரித்துள்ளது.
4. நிதியுதவி(Donations)
பல்வேறு தீவிரவாத குழுக்கள் மற்றும் அமைப்புகள் ஐ.எஸ்-க்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவி பல்வேறு பெயர்களில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
5.பழம்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை மூலம் ஐ.எஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது.
6. வங்கிகளில் ஊழல் மூலமும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.