- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி : மஹிந்த தேரப்பிரிய

புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92...

பொம்மையாட்சி தவறுகளை மறைக்கவே எமது ஆட்சிக்கால ஊழல் விசாரணை நாடகம் அரங்கேறுகிறது :நாமல்

  கடந்த கால ஊழல்கள் பற்றிய  விசாரணைகள் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கும் ராஜித சேனாரத்ன அவர் மீதுமேற்கொள்ளப்பட்ட  ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படாமல் உள்ளது தொடர்பில் மௌனமாக இருப்பது வேடிக்கையான விடயம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்.. ஊழல் மோசடி விசாரணைகள் தொடர்பில் ராஜித சேனாரத்ன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாமும் அதேவிடயத்தை தான் தொடர்ச்சியாக கூறுகிறோம். ஊழல் விசாரணைகள் ஒரு பக்கசார்பாகவே இடம்பெறுகின்றன. கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற  முறைப்பாடுகளுக்கு எதிராக மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதுவித பக்கச்சார்பற்ற விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன் ராஜித சேனா ரத்னவுக்கு எதிராகவும் நாம் பல முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பில் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை, டொப் டென் என்றதலைப்பில் நாம் பலருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளோம்  இந்த விடயங்களையும் எவரும்  கண்டுகொள்ளவில்லை.  நாட்டில் தற்போது இடம்பெறும் பொம்மையாட்சி தங்களின் தவறுகளை மறைக்கவே இன்று எமது காலத்தில் ஊழல் இடம்பெற்றதாக விசாரணை நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும்: சுமந்திரன்

சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் : மஹிந்த சமரசிங்க

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினரின்  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஜனாதிபதி வெளிப்படையாக இதனை எம்மிடம் தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக...

வடகொரியாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை !!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. வடக்கு...

கட்டாரிற்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் – சவூதி அரேபியா தெரிவிப்பு

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தவறினால் அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.அந்த வகையில் கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அந்நாட்டிற்கு மேலும்...

Latest news

- Advertisement -spot_img