கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தவறினால் அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.அந்த வகையில் கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அந்நாட்டிற்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கெய்ரோவில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.இதன் போது தமது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, தீவிரவாத செயற்பாடுகளுக்கு கட்டார் ஆதரவளிப்பதாகத் தெரிவித்து சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளன.
எனினும் தாம் அவ்வாறு எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என கட்டார் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இந்நிலையில், கட்டார் மீதான தீர்மானத்தை விலக்கிக் கொள்வதற்கு சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பல நிபந்தனைகள் விதித்திருந்தன.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.இவற்றை நிறைவேற்றுவதற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், மேலும் 48 மணி நேரம் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், கட்டார் நிபந்தனைகளை ஏற்க மறுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கெய்ரோவில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.அந்த வகையில், கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தவறினால் அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அந்நாட்டிற்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.