எதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை – அநுரகுமார திஸாநாயக்க

Must read

தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு தீர்க்கமான முடிவினை எட்டமுடியும். மாறாக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டி கலந்துரையாடுவதால் எந்த பயனும் இல்லை.

9ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்ததையடுத்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெறும் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எந்த விவாதங்களும் அவசியமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டுகின்றார்.

எதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை என்பதாலேயே அதில் நாம் கலந்து கொள்ளவில்லை.

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து ரணில் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றார் ஆனால் பிரதமர் வேறு ஒன்றை சொல்லி மக்களை குழப்புகின்றனர்” எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

1 COMMENT

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
admin
Admin
1 year ago

hi

Latest article