துடிப்புள்ள இளைஞ்சர்களால்தான் சமூகத்தின் பெருமை மேலோங்கப்படுகின்றது – சிப்லி பாரூக்

சப்னி

நேற்று(23) காத்தான்குடி காங்கையனோடையில் நடை பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியை மாகாணசபை உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தலில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டி இடும் 5ம் இலக்க வேட்பாளரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறூக் ஆரம்பித்து வைத்தார்.

அதை தெடர்ந்து அவர் உரையாற்றும் போது,

இவ் விளையாட்டு வீரர் களைப் போன்று துடிப்புள்ள இளைஞ்சர்களே சமூகத்தைப் பாது காப்பவர்கள் என்றும் இவர்கள் நாட்டியின் கண்கள் என்று கூறினார். ஒரு சமூகத்தினுடைய ஆரோக்கியமானது அந்த சமூகத்தின் உள்ள மக்களுடைய தேக ஆரோக்கியத்தில்தான் அடங்கியுள்ளது எனவும். எந்த விதமாக இலாபங்களும் இல்லாமல் சமூகத்திற்க்காக உழைப்பவர்களும் சமூகத்தை மேலோங்கச் செய்பவர்களும் அந்த சமூகத்தின் இளைஞ்சர்களே. அவர்களுக்கான நமது சேவையானது அளப்பெரியது.
அவர்களுடைய கல்வி, சுகாதாரம், விளையாட்டு, தேக ஆரோக்கியம், மன நிம்மதிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அகும். இது எமது தார்மீகக் கடமயாகும். இது எம் ஒவ்வொவர் மீதும் கடமையாக்கப்பட்ட பெறுப்பாகும். எம்மால் முடியா விட்டாலும் எமக்காக சேவை செய்ய வருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களை தட்டிக் கொடுத்து எமது சமூக முன்னேற்றத்திற்கு நாம் வழி சமைக்க வேண்டும் என்று கூறினார் சிப்லி பாரூக் கூறினார்.

image image