ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முறையை தவறாக விளங்கிய மனநிலையில் பொதுமக்கள்- வைத்திய அத்தியட்சகர் விளக்கம் !

அபு அலா 

பொதுமக்கள் ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முறையை மிக தவறாக விளங்கிய மனநிலையில் உள்ளனர். அதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால்தான் மக்களிடத்தில் இருக்கும் இந்த தவறான அவிப்பிராயத்தை மாற்றியமைக்க முடியும் என்று அம்பாறை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று செவ்வாய்ககிழமை காலை (21) இடம்பெற்ற தெற்றா நோய் சிகிச்சைப் பிரிவு வைத்திய நிகழ்வின்போதே வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

image
இந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைகளைப் பெற்று பூரண சுகம் பெற்றவர்களும், தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களும் இங்கு நடைபெறும் வைத்திய சிகிச்சை முறை பற்றிய முழுத் தகவல்களையும் இவ்வாறானவர்களுக்கு எடுத்துக்கூறி ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். அதன் மூலம் அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நடைபெரும் சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்வார்கள்.

மனிதர்கள் தங்களின் எண்ணத்தையும், நோக்கத்தையும் எப்போதும் நல்லதாக வைத்துக்கொண்டாலே அதுவே போதும் நமக்கு நோய்கள் வராமால் இருக்க, நல்ல ஆரோக்கியமுள்ளவராகவும் இருக்க முடியும்.

நமது அன்றாட நடவடிக்கைகளில் எமது வாழ்க்கை முறையையையும், உணவு பழக்கத்தையும் சரியான முறையில் எடுத்துக்கொள்ளவதுடன் எப்போதும் நாம் நமக்காக வாழப் பழகிக்கொள்ளல் வேண்டும் பிறருக்காக வாழ்வதை தவிர்ந்துகொண்டு எம்மிடத்தில் சிறு சிறு மாற்றங்களை அன்றாட நடவடிக்கைகளில் கடைப்பிடித்து வந்தால் இது காலப்போக்கில் ஒரு பாரிய மாற்றத்தை எமது சமூகத்தில் உண்டுபன்னும் என்றார்.