அரசியல் எனக்குத் தொழிலல்ல ஆனால் அனைவருக்கும் தொழில் வழங்குவதே என் அரசியல் : முதலமைச்சர் !

 

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

கடந்த அரசாங்கம் உலக நாடுகளில் பாரிய கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கை எதுவும் செய்யாது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு செலவு செய்தோம் என்று கூறியிருக்கிறது.

நாட்டில் இன்று மக்கள் பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறார், கற்றோர், கல்லாதோர், பட்டம்பெற்றோர், இளைஞர், யுவதிகள் என்று நாட்டில் தொழிலில்லாமல் செய்வதறியாது சிலர் யோசித்துக் கொண்டிருக்கிறன்றனர். ஆனால் இலங்கைத் திருநாட்டில் எத்தனையோ தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம், சகல வசதிகளும் கொண்ட இலங்கை நாட்டில் பாரிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க எத்தனையோ வளிமுறைகள் இருந்தும் அப்படி செய்யாதது ஏன்..? என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வி எழுப்பினார்.

நோன்புப் பெருநாளை அடுத்த விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:…

150205162505_hon_za_nazeer_ahamed_sri_lanka_slmc_eastern_provincial_council_512x288_bbc

கிழக்கில் எந்த அபிவிருத்தியும் சரியாக இடம்பெறவில்லை, வீதி அபிவிருத்தி என்று தனிநபர் தொழில் நடைபெற்றிருக்கிறது. பல நூறு கோடிகள் செலவு செய்து அமைக்கப்பட்ட சில வீதிகள் இன்று 1990ஆம் ஆண்டளவில் போடப்பட்ட பாதைகளைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இது தனிநபர் முன்னேற்றத்துக்காக மக்களுக்கான ஒதுக்கீடுகள் வீண்செலவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் வேலையற்றோர் அதிகரித்து ஒவ்வொரு வீட்டிலும் தொழிலற்ற இளைஞர் யுவதிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கில் பெரும் மோசடிகள் நடந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்தோர் சிலர் முன்னேறி இருக்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த வித வேலைப்படுகளும், எந்த சேவைகளும், எந்த தொழில் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வைத்தியசாலைகளில் ஒரு கட்டிலில் 3பேர் உற்காரும் அவல நிலை காணப்படுகிறது. நேரத்துக்கு உண்ண உணவில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. அன்றைய அதிகாரங்களில் இருந்தோர் அவர்களின் முன்னேற்றங்களை மட்டும் பார்த்தார்களே தவிர மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

எனவே அவர்கள் இன்னும் மக்களிடம் வாக்குகள் கேட்டு மீண்டும் அதிகாரங்களுக்கு வர முயற்சிக்கிறார்கள். எனவே இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நான் அரசியலை தொழிலாக எடுக்க வில்லை அரசியல் எனக்கு தொழிலுமல்ல ஆனால் என் அரசியல் பிரவேசத்தின் மூலம் கிழக்கில் தொழிலில்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காகவே என்னை நான் பயன்படுத்துகிறேன். எனது என்னங்களும் அப்படியே இருக்கிறது.

எனவே என் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்கேனும் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முழுமூச்சாய் செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன். விரைவில் அந்த நடவடிக்கை இடம்பெறும் இதற்காக அனைவரும் பேதங்கள் மறந்து என்னுடன் ஒன்றினைந்து வருமாறு அனைவரையும் அழைக்கிறேன். ஒன்றுபடுவோம் வென்றுவிடுவோம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.