அஸ்மி பெரியமடு
வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்களை ஆதரிக்கும் ஹக்கீம் தலைமையிலான கூட்டங்கள் பிசுபிசுத்துப் போயுள்ளதாக தெரியவருகின்றது.
திங்கட்கிழமை விஷேட ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மாவட்டத்திற்கு சென்ற ஹக்கீம் பெரியமடு, அடம்பன் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.
எனினும் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் நூர்த்தின் மஸூரின் காலத்தில் முhகவுக்கு அப்போதிருந்த ஓரளவு செல்வாக்கும் கூட ஹக்கீம் வந்திறங்கிய போது காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பெரியமடுவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அங்கு குழுமிய இளைஞர்கள் ‘இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள்? எமது மீள்குடியேற்ற விடயத்திலோ எமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதிலோ ஒரு துளியளவு உதவியையோ அல்லது ஒத்துழைப்பையோ நீங்கள் வழங்க வில்லை.
வில்பத்து விடயத்தில் கூட நீங்கள் வாயை திறக்கவில்லை. தேர்தல் ஒன்று வந்தால் மட்டும் வருகிறீர்கள். நாங்கள் இந்த தேர்தலில் ஆதரிக்கப் போவதில்லை’. என்று மிகக் கடுமையாக ஹக்கீமுடன் வாதிட்டுள்ளனர்.
இதன் பிற்பாடு அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் இவ்வாறே அவருடன் தர்க்கித் துள்ளனர். வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் மூவர் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு வன்னி மாவட்ட மக்கள் மத்தியல் மேலோங்கயிருக்கும் அரசியல் களநிலையில் அந்த வெற்றி வாய்ப்பை இல்லாதொழிக்கும் ஒரு கைங்கரியமாகவே ஹக்கீமின் இந்த செயற்பாடு அமைவதாக வன்னி மாவட்ட முஸ்லிம் புத்தி ஜீவிகள் ,உலமாக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே வேளை ‘ரிசாத் பதியுதீனை வன்னியில் தோற்கடிக்க வேண்டும் இது தான் உங்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டாம். ரிசாதும் தோல்வியடைந்து நீங்களும் தோல்வியடைந்தால் உங்களை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு கூட்டிச் செல்வேன்’ என வன்னி மாவட்ட முகா முதன்மை வேட்பாளர் முன்னாள் எம்பி முத்தலி பாவா பாறுக்கிடம் ஹக்கீம் கூறிய வார்த்தைப் பிரயோகம் திரைமறைவில் முத்தலிபாவாவினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் போட்டுக் காட்டியுள்ளதாகவும் அவர் தரப்பு தகவல்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகின்றது.