அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது பத்திரிகையாளர் மாநாடில் ஹரீஸ் காட்டம் !

எம்.வை.அமீர் 

நடக்கவிருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் அம்பாறைமாவட்ட முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்குலைத்து இங்கு இதுவரையும் இருந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஈடுபடுவதாகவும் அதற்க்கு முஸ்லிம்காங்கிரஸ் ஒருபோதும் இடமளிக்காது என்றும் ஐக்கிய தேசிய முன்னணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்தித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வகுத்துள்ள வியூகங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்imageபு மண்டபத்தில் 2015-07-20 ல் இடம்பெற்றது.

குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம்காங்கிரஸின் தேர்தல் வியூகத்தின் ஊடாக மூன்று பாராளமன்ற உறுப்பினர்களை பெறும் நோக்கில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளமன்ற உறுப்பினகளான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிதத்துவத்தை காவுகொடுக்க சதிவலைபின்னும் சதிகாரர்களின் முயற்ச்சிகளை எதிர்காலத்தில் மக்களுக்கு தெளிவூட்டவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானவர்களின் எண்ணம் ஈடேறாது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கும் என்று தெரிவித்த ஹரீஸ் அதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளதாகவும் குறித்த உள்ளுராட்சி சபையை முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.