அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் குறைகள் அனைத்தும் நிவர்த்திக்கப்படும் என்கிறார் தயா கமகே

 

image-எம்.வை.அமீர்-

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்கவிருந்த சில வசதிகளை தான் மற்ற வைத்தியசாலைக்கு மாற்றிக்கொடுத்ததாக அண்மைக்காலமாக என்மீது அபாண்டமாக எனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும், சில உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் வந்ததையிட்டு தான் மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அவ்வாறான எவ்வித செயற்பாடுகளிலும் தான் ஈடுபடவில்லை என்றும், எதிர்வரும் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து அமையயிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஊடாக, குறித்த வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைகளையும் நிவர்த்தித்து பிராந்தியத்தில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மாற்றித்தரவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் நடக்கவிருக்கின்ற பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளவருமான தயா கமகே உத்தரவாதமளித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் நடக்கவிருக்கின்ற பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளவருமான சட்டத்தரணி றசாக் மீராசாஹிப் அவர்களது தலைமையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் 2015-07-17 ல் இடம்பெற்ற இப்தாருடனான மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சட்டத்தரணி றசாக் மீராசாஹிப், எங்களது தேவைகளை இடைத்தரகர்கள் ஊடாக அனுகுவதைவிட நேரடியாக பெற்றுக்கொள்வது இலகுவான விடயம் என்றும் கடந்தகால அனுபவங்கள் சிறந்த பாடங்கள் என்றும் நடக்கவிருக்கின்ற தேர்தலை இப்பிராந்தியமக்கள் நன்றாக சிந்தித்து பயன்படுத்த வேண்டும் என்றும் இப்பிரதேசம் அபிவிருத்தியில் மிகுந்த பின்னடைவை கண்டுள்ளதாகவும் அவற்றை நிவர்த்திக்க அமையவிருக்கும் ஐக்கியதேசியக் கட்சிக்கு அரசுக்கு ஆதரவளித்து நாங்களும் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட ஐக்கியதேசியக் கட்சியின் இன்னுமொரு வேட்பாளரான லோயேட்ஸ் யூ.கே ஆதம்லெப்பை, ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார செயலாளரும் முஸ்லிம் சமயகலாச்சார அமைச்சரின் இணைப்பாளருமான அஸ்வான் சகாப் மௌலானா உட்பட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் விசேடமாக உலமாகட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்களையும் பெரும் திரளான கட்சி ஆதரவாளர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

image image