நல்லாட்சி நீடித்து நிற்கவேண்டும் : கொழும்பு மாநகர முதல்வரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி !

unnamed

 அஹமட் இர்ஸாட்

 

 இந்த நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய நிலையான நல்லாட்சி உருவாகவேண்டும்.அதற்காக நாம் அனைவரும் இந்தப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனைசெய்ய வேண்டும் என கொழும்பு மாநகர முதல்வர் ஏ .ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 

கடந்த காலங்களில் இந்நாட்டு மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டிருந்தனர்.குறிப்பாக,முஸ்லிம்கள் இனவாதத்தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.ஆனால்,இப்போது உருவாகிய நல்லாட்சியால் அந்த நிலைமை மாறியுள்ளது.

இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றபோதிலும்,இந்த நிலைமை நிலைத்து நிற்க வேண்டும்;நல்லாட்சி நீடித்து நிற்கவேண்டும்.

இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும்  தப்பெண்ணங்களை நீக்கி ஒற்றுமையாக வாழ வேண்டும்.அந்தஒற்றுமைக்குத் தேவையான நல்லாட்சியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.

இந்த நாடு மூவின மக்களுடைய நாடு.இன,மத பேதங்களை மறந்து நாம் ஒன்றுபடுவதன் மூலம்தான் இந்த நாட்டைஎம்மால் அபிவிருத்தி செய்ய முடியும்.

எமது எதிர்கால சந்ததியினர்க்காக இந்த நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை எம் அனைவர்மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

ஆகவே,நாடு என்றரீதியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் நல்லாட்சியைஏற்படுத்துவதற்கும் இந்தப் புனித தினத்தில் நாம் ஒன்ருபடுவோமாக!-எனத் தெரிவித்துள்ளார்.