அம்பாறை மாவட்டத்தில் “மகளிர் கைவினைப் பொருள் கூட்டறவு திட்டம்” தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி யினால் ஆரம்பிக்கப் படவுள்ளது .வீட்டில் இருந்தபடியே யுவதிகள் அவர்களது கைவினைத் திறனைப் பயன் படுத்துவதின் மூலம் அவர்கள் போதுமான அளவில் வருமானம் பெறக் கூடிய வகையில் இத் திட்டம் அமைக்கப் பட்டுள்ளது.
இவர்களால் உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் .இதில் ஆடைகள், தீன் பண்டம்கள் ,கைப்பணிப் பொருட்கள், பாய் பொட்டி,தட்டு,சொளகு,அலங்காரப் பொருட்கள் , கைத்தறி ஆடைகள்,பூச் சாடிகள் போன்ற பொருட்கள் அடங்கும் .இவைகளுக்குரிய சிறிய அளவிலான முதலீட்டு உதவிகளும் அப்பொருட்களை சந்தைப் படுத்தும் சேவைகளும், பொருட்களின் தரம் நிர்ணயத்தல் ஆலோசனைகளும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் வணிகக் குழுவினால் செயல் படுத்தப் படும் .இத் திட்டத்தை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ்வாதார ஆலோசகர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் நெறிப் படுத்தலில் நடை முறைப் படுத்தப் படும். இதில் பங்கு கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை வளம் படுத்த விரும்புவோர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( J .P) இலக்கம் -677, அஹமட் ரோட் சாய்ந்தமருது -14 தொலை பேசி இலக்கம் -0767473723 / 0777473723 / 0672224095 – [email protected]